சமைத்து அசத்தலாம் - 5, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!

அன்புத் தோழிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி 4, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல் இது பகுதி -5 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால் இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும்.உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை கதீஜாவின் குறிப்புக்கள் ஆரம்பமாகிறது, வரும் செவ்வாய்க்கிழமை (13/01) முடிவடையும். புதன்கிழமை(14/01), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

நன்றி,
"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால் எதையும் சாதிக்கலாம்"

எம்மோடு இணைந்து குறிப்புக்கள் செய்பவர்களுக்கும், எம்மை ஊக்குவித்து வாழ்த்துபவர்களுக்கும் மிக்க நன்றி.

நேரத்திற்கு கணக்கெடுத்து, சரியான நேரத்துக்கு பட்டியலை வெளியிட்டு எல்லோரையும் அசத்தும் ரேணுகாவிற்கும் மிக்க நன்றி.

ஆசியா, ரேணுகா, சுஜாதா, ஸ்ரீ, இந்திரா, வத்சலா, கவிசிவா, மேனகா, செல்வியக்கா, மனோகரி அக்கா, கீதாச்சல், ஹாசினி, அரசி, தனு, வனிதா, பர்வீன்பானு, மாலி, குயிலா,சுரேஜினி, விஜிசத்யா, ஜூலைகா, வின்னி, இலா, கவின், அருண்பாலா, ரஸியா, இமா, மனோ அக்கா, சீதா அக்கா, துஷியந்தி, நர்மதா, ஷராபுபதி, .. அனைவருக்கும் மிக்க நன்றி. கலந்துகொள்ள முடியாமல் போனவர்கள், இம்முறை கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

மற்றும் , முடியுமானவர்கள் ஸ்டெப் பை ஸ்டெப் ஆகவோ அல்லது முடிவிலோ படமெடுத்து அட்மினுக்கு அனுப்பி வையுங்கள். ஸ்டெப் பை ஸ்டெப்பாக படமெடுக்க நினைப்பவர்கள், முன்கூட்டியே தெரிவித்துவிடுங்கள் எந்தக் குறிப்பிற்கு எடுக்கப் போகிறீங்கள் என்று.

நாளை திங்கட்கிழமை(05/01) சமைக்கத் தொடங்குவோம்,புது வருடத்தில் நிறைய சமைத்து அறுசுவையில் ஒரு புதுப் புரட்சியைக் கொண்டுவருவோம்..... எல்லோரும் வாங்கோ......

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் அதிரா,
எனக்கு இப்பவே திங்கள்தான். மதியம் ஆகிறது. உங்களுக்குத் திங்கள் ஆகிறவரை காத்துக் கொண்டிருக்கிறேன்.;-)
இமா

‍- இமா க்றிஸ்

அதிரா,ரேணு ஆரம்பமே அருமை.வீட்டில் எல்லாம் இருந்ததால் இன்று இது செய்து சாப்பிட்டாச்சு,பிள்ளங்க ஸ்கூல் போயாச்சு,அவர் அல் ஐன் போயாச்சு,எனக்கு அறுசுவை தான் கதி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அதிரா, ரேணு
பூண்டு குழம்பு செய்தேன். சுவையாக இருந்தது. பதிவு போட்டுவிட்டேன்.

‍- இமா க்றிஸ்

‍- இமா க்றிஸ்

அடுத்தமுறை மறக்காமல் பூண்டை முழுதாகவே போடுகிறேன். (ஆனாலும் ருசியாகத்தான் இருந்தது. பாதி நானே சாப்பிட்டுவிட்டேன்.) :-)

‍- இமா க்றிஸ்

மிக்க நன்றி,
இமா, ஆசியா உமர். இமா... உங்களுக்கு எப்போ திங்கட்கிழமையோ அப்போ ஆரம்பியுங்கள் எப்போ செவ்வாய் இரவோ அப்போ முடித்துக் கொள்ளுங்கள், ஏனெனில் நீங்கள் முன்னே இருக்கிறீங்கள் நேரத்தில். ஆசியா மிக்க நன்றி.. தொடர்ந்து பங்குபற்றவேண்டும்.

என்ன புதுவருடத்தில் எல்லாமே தூங்கிக்கொண்டிருக்கிறதே.... எல்லோரும் வாங்கோ.... எல்லோருமே நிட்சயமாக வீட்டில் சமைப்போம், அந்தச் சமையலை கொஞ்சம் மாற்றி இக் குறிப்பின்படி செய்தால் எமக்கும் சந்தோஷம் குறிப்புக் கொடுப்பவர்களுக்கும் ஊக்குவிப்பாக இருக்கும். இதில் ஏதும் கஸ்டமில்லைத்தானே.... ஒரு வாரம் இருக்கிறதே... குறைந்தது 2 குறிப்புக்கள்தானே எல்லோரும் வந்து பங்குகொள்ளுங்கள்.

ரேணுகா இம்முறை நானும் ஆரம்பித்துவிட்டேன்... நோன்பு வெள்ளைக் கஞ்சி செய்துவிட்டேன்.

எல்லோரும் வாங்கோ.... அதிராவிற்கு கூப்பிட்டே தொண்டை நோகிறதே.....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா நானும் வந்துட்டேன்,ஆனால் இன்னும் சமைக்கல...நிச்சயம் சமைச்சுட்டு சொல்றேன்...

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அதிரா, ரேணுகா,கஜீதா எல்லோரும் நலமா?

அதிரா நீங்கள் கூப்பிட்டதும் நானும் ஓடி வந்திட்டேன்.
இன்று தக்காளி குருமா செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

நன்றி...நன்றி.... ரேணுகா நீங்கள் சமைக்காதுவிட்டால் நான் அபுதாபிக்கே வந்துவிடுவேனே....:) முடிகிறபோது சமையுங்கோ...
ஆ.. வத்சலா வாங்கோ... மிக்க நன்றி... இன்னும் முடிந்தால் செய்யுங்கோ...

புது வருடத்தில் புதுப் புரட்சி என்றேன்... போகிறபோக்கைப் பார்த்தால் சமைக்காத புரட்சிவந்துவிடுமோ என்று பயமாக இருக்கு....:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்