எனக்கு உதவவும்

அனைவருக்கும் வணக்கம், நான் அறுசுவைக்கு புதிது எனக்கு திருமணமாகி 4 வருடம் ஆகிவிட்டது குழந்தைக்கு வேண்டி 3 iui செய்துவிட்டேன் 3வது iui செய்து 3 நாட்கள் ஆகிறது நான் நாட்களை எண்ணி கொண்டு இருக்கிறேன் உங்கள் அறிவுரை அவசியம்.

எனக்கு இதனைப் பற்றி எதுவும் தெரியாது..ஆனால் உங்களுக்காக ப்ராத்திக்க முடியும்..கவலைப்படாமல் வேறெதிலாவது கவனம் செலுத்துங்கள்..நல்லதே நடக்கும்

lovely
ஹாய் ஷ்ரீ 4 வருடம்தானே கவலைவேண்டாம்
கடவுள் கருணைகட்டுவார்
நிச்சயம் இவ்வருடத்தில் இருவர் மூவர் ஆவிர்கள்

தாளிகா என்னை தெரியுதாம்மா
நான் ஆரம்பித்த திரட்டுக்கே நானேவரமுடியவில்லை
கொஞ்சம் என்னெவென்ற்தான் பாருங்களேன்

உன்னை நேசி
உலகம் உன்னை சுவாசிக்கும்.
அன்புடன் மலிக்கா

http://www.arusuvai.com/tamil/forum/no/9039
இந்தப்பக்கம் போய் பாருங்கோ.

சுரேஜினி

உங்களின் பதில் எனக்கு மன மகிழ்வை தருகிறது

எனக்கு இந்த forum/no/9039
எப்படி open பண்ணனும்னு தெறியவில்லை pls help me

கவலை படாதீங்க . இந்த டிரீட்மென்ட் பண்ணும் போது 2 வாரம் வெயிட்டிங் தான் ரொம்ப சோதனையான டைம். முணுக் என்றால் சந்தேகம் வரும். டெயிலி எதாவது ஒரு காரணத்துக்கு இது பிரெக்னன்சி சிம்ப்டமா இருக்குமோன்னு ஒரே paranoid -ஆ இருக்கும். நிறைய ஃபோரமில் பார்த்தீங்கன்னா சொல்லுவாங்க 2WW ( 2Week wait) .
இது நமக்கு அப்படி தான் தெரியும் 2 வேர்ல்ட் வார் :)) முடிந்தா ஒரு ரொட்டீன் வைத்துக்கோங்க. காலைல எழுந்து சூடா எதாவது குடித்திட்டு எதாவது வாசிங்க . இல்லை கைவினை பொருள் செய்யுங்க அது உங்க மூளையை வேறு காரியத்தில் கவனத்தை செலுத்த உதவும்
வேலைக்கு போகலைன்னா அழுகாச்சி சீரியல் எல்லாம் விட்டு எதாவது டிஸ்கவரி சேனல் இல்லைன்னா ஹிஸ்டரி சேனல் பாருங்க. இதுக்கும் ஒரு டைம் டேபிள் போடுங்க. 4:00 மணிக்கு ஓபரா வின்ப்ரே புது சீசன் ஆரம்பமாம். அதனை பாருங்க. எக்காரணம் கொண்டும் மனசுக்கு கஷ்டம் கொடுக்கறமாதிரி டீவி சேனல் பாக்கதீங்க... ஒரு 30 நிமிஷம் வெளியில் வாக்கிங் போங்க. போகும் போது இப்ப தான் புதுச்சா பாக்கிற மாதிரி எல்லாம் ரசிச்சி பாருங்க. பக்கத்தில மார்க்கெட் இருந்தா ஒன்னும் வாங்கலைன்னாலும் வின்டோ ஷாப்பிங் போங்க.

இந்த மூனு ஆர் (R) ரொம்ப முக்கியம் ரெஸ்ட் ரிலாக்ஸ் ரெஃப்ரெஷ் .

டேக் இட் ஈஸி :))

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

பரவாயில்லை ஜெய்சிறி நான் படித்து அறிந்து கொண்டவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.

5 நாட்களுக்கு லைட்டான இரத்தக்கசிவு இருக்கும் அதிகமாகவோ அதிக நாட்களாகவோ இருந்தால் டாக்டரிட்ட போகவேணும்.
3 வது தடவை என்றபடியால் வலி உங்களுக்கு பழகி இருக்கும்.வலித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அதை சிறிய வலிதானே என்று பொருட்படுத்தாமல் கடின வேலைகளைச்செய்யக்கூடாது.

சுடு நீரில் தலைக்கு முழுகவோ குளிக்கவோ கூடாது.

3வது முறை என்றதால மனதில நம்பிக்கை குறைந்து மனம் எதையாவது கற்பனை பண்ணிக்கொண்டிருப்பதற்கு இடம் கொடுக்காமல் உங்களை இலா சொன்னதுபோல் நல்ல விஷயங்களில் ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்.
2 தடவைகள் ஏன் வராமல் போனது என்று குழம்புவதில் அர்த்தமில்லை ஏனென்றால் iui சக்ஸஸ் ரேட் குறைந்த ஒரு ட்றீட்மண்ட்.முதல்தடவை இரண்டாவது தடவையில் சரிவரும் என்று எதிர்பார்க்க முடியாது.
டாகடர் ஒழுங்காக மொனிட்டர் பார்த்து hcg injection எடுத்தபின் iui செய்ய்யப்பட்டு இருந்தால் 2வது தடவைக்கு மேல் வாய்ப்புகள் அதிகம்.

இலா அழுகாச்சி எண்டா என்ன?

http://www.fertilityplus.org/
faq/iui.html கேள்விகளும் பதில்களும் இருக்கிறது.பார்க்கவும்.

கருக்கொண்டதை தெரிந்து கொள்வதற்கு 14 நாட்கள் காத்திருந்து விட்டு அதன்பின் ஹோம் பிரக்னன்சி டெஸ்ட் செய்யலாம்.
ஆனால் நீங்கள் hcg inj எடுத்திருந்தால் அது எப்படியிருந்தாலும் பொசிட்டிவ்தான் காட்டும்.அதற்கு நீங்கள் பீர்யட் தள்ளிப்போவதை வைத்துத்தான் முடிவெடுத்து டாக்டரிடம் போகவேணும்.

இன்னும் ஏதாவது விளங்காட்டி கேளுங்கோ.
4வருடம் கொஞ்சம் மனம் கஸ்டமாகத்தான் இருக்கும் இனி இந்த ஸ்டெப்கள் எடுக்கத்தொடங்கினால் சரிவந்து விடும் கவலைப்படவேண்டாம்.

சுரேஜினி

ஹாய் ஸ்ரீ செந்தில்,
இது ஒரு மனதிற்கு வேதனையான காலம் தான். ஆனால் குழந்தை பற்றி நினைக்க வேண்டாம். டென்ஷனாகாமல் இருங்கோ. கடவுளை வேண்டிக்கொண்டு நல்லதே நடக்கவேணும் என நினைத்துக்கொண்டு, ஆனால் எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேணும். விரைவில் உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்க நானும் கடவுளை வேண்டுகிறேன்.

சுரேஜினி, நீங்கள் கேட்ட பிறகுதான் இலாவிற்கும் டவுட்டாக இருக்கு "அழுகாச்சி" என்றால் என்ன என்று.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

புது டெபனிஷன். உங்களுக்கு எதாவது வேணுமின்னா கணவரிடம் பொய்யா அழுகாச்சி வர்ர மாதிரி செய்தாலே போதும்.. பாவம் மனுஷருக்கு ஏன் தொல்லைன்னு வாங்கி கொடுத்திடுவார். அழுகை வர்ர ஆரம்பிக்கும் முன் இருக்க்கும் ஒரு பீலிங் .. தொண்டை வலிக்கும் கண்ல தண்ணி நிக்கும் ஆனா கண்ணீர் வழியாது

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஏன் உங்களால் அந்த forum 9039-ஐ திறக்க முடியவில்லை?என்னால் முடிந்ததே.ஏனோ அறுசுவையில் link-ஐ பேஸ்ட் செய்தால் ஒரே line-ல் வருவதில்லை.அதனால் கொடுத்திருக்கும் link-ஐ ஒரே லைனில் வருமாறு notepad-ல் adjust செய்து பின்பு link-ஐ பாருங்கள்.அல்லது address bar-ல் ஒரு பாதியை copy,paste செய்துவிட்டு மீதி பாதியை டைப் செய்து கொள்ளுங்கள்.

AAA

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

மேலும் சில பதிவுகள்