கடல போட வாங்கப்பா எல்லோரும் பாகம் 42

எல்லோரும் இங்க வாங்க கடலப் போட.அந்த ட்ரெட் 100 க்கும் மேல ரொம்பி வழியுது............

எப்படி இருக்கிங்க?ஏன் அழுகிறீங்க.என்னை கூட யாருமே தேடல.வாங்க நம்மை யாருமே தேட மாட்றாங்கன்னு சங்கம் அமைக்கலாம்.நீங்க தான் சங்கத்துக்கு தலைவி.

வாழ்க நம் தலைவி செல்வி!!!!!!!!!!!!!!

தோழிகள் எல்லோரும் நலமா?நான் வரும் ஞாயிறு இந்தியா போறேன்(வரேன்).திங்கள் மதியம் 3மணிக்கு திருச்சிக்கு ரயில்.அதனால அதுவரை சென்னையில் ஏதாவது வாங்கலாம் என்று இருக்கேன்.எனக்கு ஃபேசன் நகைகள்(1கிராம் தங்கம் அல்லது வேற மெட்டிரியலில்) வாங்க ஆசை ஆனால் சென்னையில் எங்கு வாங்குவது என்று சென்னை தோழிகள் அல்லது தெரிந்த தோழிகள் யாராவது சொல்லவும்.
அப்பறம் எனக்கு விமான பயணம் என்றாலே கூடவே வாந்தியும் சேர்ந்து வந்துவிடும்.இதுக்கு முன்பு போனப்ப விமானம் ஏறியதிலிருந்து இறங்கும் வரை ஒரே வாந்தி வாந்தி.அதனால யாராவது ஏதாவது வைத்தியம் சொல்லுங்கப்பா இந்த முறை வாந்தி எடுக்காம நல்லபடியா இந்தியா போய் இறங்க வழி சொல்லுங்கப்பா.

வாங்க தோழிகள் அனைவரும் வந்து எனக்கு உதவுங்கள்
அன்புடன் பிரதீபா

ஹாய் மேனகா என்ன பா புது த்ரெட் தொடங்கியாச்சா?

ஹாய் எல்லோரும் எப்படி இருக்கிங்க?கொஞ்ச நாள் இந்தப் பக்கமே வரலைன்னா மறந்துடுவாங்கப் போல.ஜெயா அத்தை,வனிதா,மர்ழி,உமா,சந்தோ,உத்ரா,ஜலிலாக்கா மர்ரும் இன்னும் பெயர் விடுப்பட்ட தோழிகள் எல்லோரும் எப்படி இருக்கிங்க.யார் பெயராவது விடுப்பட்டிருந்தால் தப்பா எடுத்துக்காதீங்கப்பா....

ஜெயா நலமா?உங்களுக்கு மெயில் அனுப்பியுள்ளேன் பார்த்தீர்களா?என்னுடைய மேலே உள்ள பதிவை பார்த்து கொஞ்சம் பதில் சொல்லுங்க ஜெயா
அன்புடன் பிரதீபா

யாரும் புது த்ரெட் தொடங்குற மாதிரி தெரியல.அதான் நான் ரிப்பன் கட் பன்ணிட்டேன்.

அத்தை நம்ம ப்ரதீபா கேள்விக்கு பதில் சொல்லுங்க.அவங்க உங்களை[அதாவது சென்னை வாசிகளை]கூவிகூவி அழைக்கிறாங்கோஓஓஓஓஓஓ....

மேனு,
இப்படி தனியா புலம்ப விட்டுட்டாங்கன்னு நினைச்சேன். நல்லவேளை, கம்பெனி இருக்கு. ஷிவானி எப்படி இருக்கா? குளிர் ரொம்ப அதிகமோ?
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் பிரதீபா வெல்கம் டூ இன்டியா.
நலமா?சென்னையில் தி.நகர் ல தான் பா நிறைய ஷாப்ஸ் இருக்கு.உங்களுக்கு வெரட்டீஸூம் நிறய இருக்கும்.

ஹாய் பிரதீபா சாரி பா நான் இன்னும் மெயில் பார்க்கல் பா.

நான் இருக்கேன் உங்களுக்கு கம்பெனிக் கொடுக்க.ஷிவானி நல்லா இருக்கா.ஆமாம்மா குளிர் அதிகம்.நேற்றெல்லாம் ஐஸ் கொட்டியது,வெளியே போக முடியல.இந்த ஐஸ் எல்லாம் கரைய ஒரு வாரம் அகும் போல.குளிர் -5 ல் இருக்கு.

மேலும் சில பதிவுகள்