தேதி: January 7, 2009
எளிமையான முறையில் செய்யக்கூடிய தோடுகளின் செய்முறைகள் இன்னும் சிலவற்றை திருமதி. நர்மதா அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக இங்கே செய்து காட்டியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள் என்று எது செய்தாலும் அதை நல்ல பாங்குடன் செய்வது இவரது தனிச்சிறப்பு. இவரின் பங்களிப்புகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை. அனைவராலும் பாராட்டப்பட்டவை.
செவ்வக மணிகள்
உருண்டையான மணிகள்
நீளமான ஊசிகள்
மேலே கொடுக்கப்பட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மாட்டல் - 1: இதற்கு தட்டையான செவ்வக(நீள்சதுர) கிளாஸ் மணிகளும், உருண்டையான மணிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது. முதலில் ஒரு நீளமான ஊசியில் ஒரு சிறிய உருண்டையான மணியையும் பின்னர் சிறிது தட்டையாக உள்ள மணியையும் அதன் பின்னர் செவ்வக மணியையும் கோர்த்து பின்னர் தட்டையான மணியையும் சிறிய உருண்டையான மணியையும் கோர்க்கவும்.

பின்னர் ஊசியை அளவாக வெட்டி விட்டு முனையை உருண்டையான தாடைகள் உள்ள குறட்டினால் மணிகளுக்கு நெருக்கமாக வளைத்து ஒரு கொக்கியை கோர்த்து விடவும். அழகான மாட்டல் தயார்

இதற்கு இணையாக கழுத்துக்கு மாலை(செயின்) செய்ய, ஒரு நூலில்(பொதுவாக தங்கூசி) படத்தில் காட்டியவாறு மணிகளை கோர்த்து இரு முனைகளிலும் கொக்கிகளை இணைக்கவும்.

பின்னர் மணிகளை நெருக்கமாக இழுத்து விடவும். அழகான மாலை தயார்.

மாட்டல் - 2: இதற்கு பெரிய, சிறிய உருண்டையான மணிகளை பயன்படுத்தவும். முதலில் மூன்று சிறிய மணிகளினுள் தனித்தனியே ஊசியைக் கோர்க்கவும்.

பின்னர் ஊசியின் முனைகளை அளவாக வெட்டி வளைத்து விடவும்

அதன் பிறகு அலங்கார உலோக மாட்டலின் (earring finding - இது ரெடிமேடாக கடைகளில் பல வடிவங்களில் கிடைக்கும்) அடியில் இந்த மணிகளை கோர்த்து விடவும்.

பின்னர் வேறொரு சிறிய மணியில் ஊசியை கோர்த்து அதன் இரு புறமும் ஊசிய வளைத்து கொக்கி போல் செய்து உலோக மாட்டலின் மேல் முனையில் கோர்த்து பின் கொழுவியை(Hook) கோர்த்து விடவும்.

அழகான மாட்டல் தயார்

மாட்டல் - 3: இதற்கு வெண்முத்துக்களும் தங்கநிற சிறிய மணிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
முதலில் ஒரு நீளமான ஊசியில் ஒரு சிறிய தங்கநிற மணியையும் பின் ஒரு முத்தையும் கோர்க்கவும். இதே போல மாற்றி மாற்றி மூன்று முத்துக்களையும் மூன்று மணிகளையும் கோர்க்கவும்.

பின்னர் ஊசியின் முனைகளை அளவாக வெட்டி வளைத்து விடவும்.

இதனுள் ஒரு கொக்கியை மாட்டவும். எளிமையன மாட்டல் ஒன்று தயார்.

இதே போல உருண்டையான பல வண்ண மணிகளை உபயோகித்தும் இதைச் செய்யலாம்.

Comments
தோடு
எல்லாத் தோடுகளுமே அழகாக இருக்கிறது நர்மதா.:-)
அன்புடன் இமா
- இமா க்றிஸ்
நர்மதா!! நர்மதா!!
நர்மதா!! நர்மதா!!
எப்படி இவ்வளவு அழகாக செய்திருக்கிறீங்கள். என்னால் கம்பியை அழகாக வளைத்துவிட முடியவில்லை. இங்கே ஒவ்வொரு தோட்டின் கீழ்ப் பகுதியிலும் மணிகள் மட்டுமே தெரிகிறதே, கம்பி தெரியவில்லையே அது எப்படி? பிளீஸ் எனக்கு விளக்கம் தரவும். நான் கழுத்தில் செய்வதற்காக, கம்பியும் வாங்கினேன், ஆனால் மெல்லிய வயர்போல் கம்பியும் வாங்கினேன், அந்த வயர்க் கம்பியைக் கொண்டு என்ன செய்யலாம்?
இமா இன்னும் நித்திரை கொள்ளவில்லையோ?
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நர்மதா
என் மகளுக்கு இதில் எல்லாம் மிகவும் ஆர்வம்,சில நாட்கள் முன்பு தான் ரஷ்யன் பீட்ஸ் செட் வாங்கி கொடுத்தேன்,அவளும் இவ்வாறு செய்து மாட்டுவாள்.FANTASTIC,MARVELLOUS.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
நர்மதா அவர்களுக்கு
எப்படி தான் இப்படி எல்லாம். மிகவும் பொருமையாக செய்து உள்ளீர். நன்றாக இருக்கின்றது. உங்களுக்கு எவ்வளவு திறமைகள். பாரட்டுகள்
hi
நர்மதா, மிகவும் அழகாக இருக்கிறது.
வாணி
always smile
நர்மதா மேம்
அட்டகாசம்!!
Patience is the most beautiful prayer!!
Patience is the most beautiful prayer!!
நர்மதா!!
உங்கள் கைவேலைப்பாடு எல்லாம் சூப்பர்.உங்கள் திறமைக்கு ஒரு சல்யூட்!!!
நர்மதா
தோடுகள் எல்லாமெ நல்ல வடிவாயிருக்குது.நானும் செய்து பார்ககவேணும்.மகள் எப்பிடி சுகமாக இருக்கிறாவா
ஆஹா, அற்புதம் நர்மதா!!
நர்மதா,
உங்க படைப்புகள் எல்லாம் அற்புதம்!. பார்க்கும்போதே எடுத்து போட்டுக்கொள்ள வேண்டும் போல ஆவலை தூண்டுகிறது! அனைத்தும் கொள்ளை அழகு. தொடரட்டும் உங்கள் திறமைகள். பாராட்டுகள் பல!!
அன்புடன்,
ஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ
ஹலோ செல்லம் Hello Dear
ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta
en mudi adhigamaga
en mudi adhigamaga udhirgiradhu. thalaiyil pun pondra pakkugal veru irukiradhu indhu ennavendru theriyavillai. yarenum idharku badhil alikavum please.