ஸ்பினாச் பரோட்டா

தேதி: January 8, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

1. கோதுமை மாவு - 2 கப்
2. உப்பு
3. பன்னீர் - 1 கப் (உதிர்த்தது)
4. ஸ்பினாச் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
5. எண்ணெய்
6. வெங்காயம் - 2 தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
7. சீரகம்
8. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
9. மல்லி தூள் - 1 தேக்கரண்டி
10. கரம் மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி


 

கோதுமை மாவு, உப்பு சேர்த்து பிசைந்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும்.
பின் தூள் எல்லாம் சேர்த்து வதக்கவும்.
இதில் ஸ்பினாச் சேர்த்து நீர் வற்ற வதக்கவும்.
ஸ்பினாச் வதங்கியதும் பன்னீர் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி எடுக்கவும்.
மாவை சின்ன வட்டமாக இட்டு, அதில் இந்த பன்னீர் ஸ்பினாச் கலவை வைத்து மீண்டும் உருட்டி, பின் பரோட்டாவாக (சற்று கனமாக) தேய்க்கவும்.
இதன் மேல் சிறிது நெய் அல்லது எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.


பச்சை சட்னி (அ) லஸ்ஸி உடன் சாப்பிட சுவையாக இருக்கும். கீரை விரும்பாத குழந்தைகள் கூட விரும்புவார்கள். பன்னீர் நன்றாக கீரையுடன் கலக்க செய்யவும். அடுப்பில் இருந்து எடுத்ததும் ஒரு முறை கையால் பிசைந்து கொண்டால் உள்ளே வைக்க வசதியாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்