தேதி: January 9, 2009
பரிமாறும் அளவு: இரண்டு நபர்களுக்கு.
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கோதுமை மாவு - 1 கப்,
நெய் - 1/4 கப்,
வெல்லத்தூள் - 3/4 கப்,
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி,
தேங்காய்த்துருவல் - 1 மேசைக்கரண்டி,
சமையல் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி.
மைக்ரோஅவன் பாத்திரத்தில் கோதுமை மாவு, நெய், எண்ணெய் சேர்த்து கலக்கவும். சிறிது வெந்நீரையும் தெளித்து பிட்டுக்கு கலப்பது போல் கலக்கவும்.
மேலாக தட்டையான கரண்டியால் அழுத்தி ஓவனில் லேசாக மூடி 5 நிமிட்ம் வைக்கவும். இடையிடையே மரக்கரண்டியால் கலக்கி விடவும்.
கலவை குருணை போல் ஆனதும், வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள், தேங்காய்த்துருவல், (தேவைப்பட்டால் சிறிது நெய் சேர்த்து) ஒரு நிமிடம் வைத்து எடுக்கவும்.
சுவையான கோதுமை உக்காரை சுலபமாக ரெடி.
அவன் மாடலைப் பொறுத்து நிமிடங்கள் வித்தியாசப்படலாம்.