அழகு குறிப்பு

Hi Im Ruthvi from Australia. I'd like to do menicure and Pedicure at home. How can I do at home it? Please advice me in Tamil.

hi நான் வீட்டில் menicure & pedicure செய்ய விரும்புகிறேன். யாராவது ஏதும் idea வைத்திருந்தால் சொல்லுங்களேன்.

வாங்க ருத்வி இதற்கு நம்ம அருசுவையின் அழகு கலை நிபுணர் தேவா( தேவ சேனாதிபதி) வருவான்க சூப்பரா பதில் கொடுப்பாங்க.

ஜலீலா

Jaleelakamal

Thanks Banu, நான் கூட தேவாவிற்குத்தான் wait பண்ணிக்கொண்டிருக்கிறேன்.

வீட்டிலேயே பெடிக்யூர் செய்வதை முன்பே ஒரு முறை எழுதி இருக்கிறேன். மற்றுமொரு முறை தெளிவாக சொல்கிறேன். முதலில் இதற்கு பெடிக்யூர், மெனிக்யூர் கிட் என்று கடைகளில் கிடைக்கும். அதனை வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. பெடிக்யூர் செய்ய ஒரு வாளியில் அல்லது வட்ட வடிவமான டப்பில் இதமான சூடுள்ள நீரை அரை அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் புட் கேர் லிக்விட் சோப் இருந்தால் அதனை தேவையான அளவு ஊற்றுங்கள். அப்படி புட் கேர் லிக்விட் சோப் இல்லாவிட்டால், தலைக்கு குளிக்க பயன்படுத்தும் மைல்ட் ஷாம்பூவைக்கூட தண்ணீரில் கலந்துக் கொள்ளலாம். இப்போது கடைகளில் ஸ்பா பெடிக்யூர் மெஷின் கிடைக்கிறது. 30 டாலரிலிருந்து விலை ஆரம்பிக்கிறது. அது வாங்கி வைத்துக் கொண்டால் வாளியில் அல்லது டப்பில் தண்ணீர் தேவையில்லை. அந்த ஸ்பா பெடிக்யூர் மெஷினில், தண்ணீரில் காலை வைத்தால் காலுக்கு நல்ல மசாஜும் கிடைக்கிறது.

டப்பில் சோப்பை ஊற்றி நன்றாக கலந்து அதனுள் கால்கள் இரண்டையும் நன்றாக மூழ்கும்படி 15 நிமிடங்கள் வைத்திருங்கள். முதலில் ஒரு காலை வெளியில் எடுத்து புட் ஸ்க்ரப்பரைக் கொண்டு காலில் பின்புறத்தில் நன்றாக தேயுங்கள். புட் ஸ்க்ரப்பர் கிடைக்காவிட்டால் பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்க்கலாம். நான் சொல்லும் ஸ்க்ரப்பர் நீண்ட கைப்பிடியுடன் மேலே சொர சொரப்பான மெட்டல் தகடு பதித்து இருக்கும். ஸ்டோனைவிட இது உபயோகிப்பது எளிது. பலனும் நன்றாக இருக்கும். மறு காலையும் அவ்வாறே செய்யுங்கள். பிறகு முதலில் தேய்த்த காலை எடுத்து அதன் நகங்கள் சரியாக வெட்ட்டியிருக்காவிட்டால் இப்போது வெட்டுங்கள். நன்றாக பழக்கம் இல்லாவிட்டால் கால் ட்ரையாக இருக்கும்போதே ஓவல் வடிவிலோ அல்லது Square ஷேப்பிலோ நகங்களை வெட்டி விடுங்கள். தண்ணீரில் ஊறிய பிறகு வெட்ட நல்ல பழக்கம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சதையையும் சேர்த்து வெட்டிவிட வாய்ப்பு அதிகம். பிறகு நகங்களை சுற்றி இருக்கும் க்யூட்டிக்கலை கீழ் நோக்கி தள்ளி விடுங்கள். இதற்கு என்று, க்யூட்டிக்கல் புஷர் என்று பெடிக்யூர் கிட்டில் இருக்கும். கிட் வாங்காவிட்டால் முனை மழுங்கிய பழைய ஸ்பூன் போதும். அதனை வைத்து நகங்களை சுற்றி இருக்கும் தோலை லேசாக கீழே தள்ளுங்கள். பிறகு கிட்டில் இருக்கும் சிறு கத்தரிக்கோலால், கால் விரலை சுற்றி இருக்கும் மொத்தமான தோலை லேசாக வெட்டி எடுங்கள். பிறகு கார்ன் ரிமூவர் என்று பெடிக்யூர் கிட்டிலோ அல்லது தனியாகவோ கிடைக்கும். அதனைக் கொண்டு உள்ளங்காலில் இருக்கும் தடிமனான தோலை சீவி எடுங்கள். வலிக்காது. இப்படியே மறுகாலுக்கும் செய்யுங்கள். பிறகு ஒரு பிரஷ் கொண்டு காலை நன்கு தேய்த்து கழுவுங்கள். புட் பிரஷ் என்று கிடைக்கிறது. அப்படி கிடைக்காவிட்டால சாதாரண டூத் பிரெஷ் கொண்டும் தேய்க்கலாம். விரல் நக இடுக்குகளை நன்கு தேயுங்கள். இப்போது காலைத் துடைத்துவிட்டு புட் க்ரீம் அல்லது மாய்ச்சுரைசிங் க்ரீம் அப்ளை செய்யுங்கள். க்ரீம் காய்ந்தவுடன் நகங்களுக்கு பேஸ் (Base Coat) கோட் பாலீஷ் அடித்து 5 நிமிடம் கழித்து நெயில் பாலீஷ் போடுங்கள். பிறகு 5 நிமிஷம் கழித்து டாப் கோட் பாலீஷ் போடுங்கள். இப்படி செய்வதால் நெயில் பாலீஷ் நீண்ட நாட்கள் மங்காது இருக்கும்.

கைகளுக்கும் இதே முறைதான். ஆனால் கால்களுக்கு செய்ததைப் போல கார்ன் ரிமூவல், ஸ்க்ரப்பர் (அல்லது ஸ்டோன்) உபயோகிக்க கூடாது. அந்த ஸ்டெப்களை விட்டுவிட்டு மற்ற அனைத்தையும் செய்யலாம். கைகள் மிருதுவாக உப்பையும், ஆலிவ் ஆயிலையும் கையில் சேர்த்து கலந்து நன்றாக தேய்த்தால் ஸ்க்ரப்பிங் செய்ததுபோல் ஆகிவிடும். இறந்த செல்களும் நீங்கிவிடும். எதுவும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.

ஹாய் தேவா
உங்கள் பதிவு பார்த்து மிகவும் சந்தோசம். நீண்ட நாட்களாக நான் உங்களிடம் pedicure/manicure பற்றி கேட்க வேண்டும் என்று நினைத்தேன். நீங்களே சொல்லிட்டீங்க. எனக்கு கைகள் மணிக்கட்டுக்கு கீழே) எப்பவும் ட்ரையாக தோல் சுருக்கமாகவே இருக்கு. விடமின் இ உள்ள க்ரீம் போட்டாலும் சில நிமிடங்களில் ட்ரையாகி விடும்.
இதற்கு என்ன செய்யலாம் சொல்லுங்கள் please..

அன்புடன்
கிருத்திகா

அன்புடன்
கிருத்திகா

ஹாய் க்ருத்திகா, நீங்க Avon Brand ல் Hand Lotion னு விக்குது. அதை ட்ரை பண்ணுங்க. நல்லா இருக்கும். அப்படி இல்லாட்டி கைக்குன்னு தனியா விற்கும் லோஷனை வாங்கி இரவு உறங்கும் முன்பு உபயோகியுங்கள். குளிக்கும் முன்பு பேபி ஆயிலை கைகளில் நல்லா தடவி ஊறவெச்சு குளிங்க. குளித்துவிட்டு Nivea Body Lotion- For Extra Dry Skin உபயோகியுங்கள். குளித்தவுடன் லோஷன் உபயோகித்தால் அது ஸ்கின்னில் ஈசியாக பரவும். நல்ல பலனையும் தரும். சாய்ஸ் நிறைய இருக்கிறது. தங்களுக்கு ஒத்துவருவதை தேர்ந்தெடுங்கள். சிலருக்கு ஆலிவ் ஆயில் அலர்ஜி ஏற்படுத்தும் . தங்களுக்கு அப்படி ஆலிவ் ஆயில் அலர்ஜி இல்லையென்றால் பேபி ஆயிலுக்குப் பதில் அதனையே உபயோகிக்கலாம்.

ஹாய் தேவா,
உங்க உடனடி பதிலுக்கு மிக்க நன்றி.
நான் hand lotion என்று தனியாக வாங்கியதில்லை. ஒவ்வொரு வின்டரிலும் இந்த problem வரும். லோஸனும்,ஆலிவ் ஆயிலும் உபயோகித்து பார்க்கிரேன். மீண்டும் நன்றி

அன்புடன்
கிருத்திகா

அன்புடன்
கிருத்திகா

தேவா விளக்கமா பதில்சொல்றதப்பாத்து ஆசப்பட்டு எதாவது கேக்கவேணும் எண்டு யோச்சாலும் ஒரு சந்தேகமும் வரமாட்டுதாம்.

அப்பாடா 1 சந்தேகம்.என் பல் வெள்ளை ஆனால் நல்ல வெள்ளை கிடையாது.அதுக்காக ஊத்தைப்பல்லு என்று சொல்லவேணாம்.டாக்டரிடம் போய்த்தான் வெள்ளையாக்கிக்கொண்டு இருக்கிறேன்.ஆனாலும் அந்த மெசினை வைத்து டாக்டர் படுத்தும் பாடு சிலனேரம் உடம்பெல்லாம் விறைக்கிறது.என்னுடைய கேள்வி நாங்களா ஏதாச்சும் செய்து வெள்ளையா பளிச் எண்டு ஆக்கலாமோ? எனக்கு ஒண்டும் அவசரமில்ல ஆறுதலா சொல்லுங்கோ தேவா.நான் முயற்சி செய்து பாக்கிறன்.

சுரேஜினி

Thanks Deva. மிகவும் அருமையாக சொல்லி உள்ளீர்கள். நான் செய்து பார்த்து விட்டு சொல்லுகிறேன். இன்னும் எனக்கு ஒரு சந்தேகம் "கார்ன் ரிமூவர்" என்பதனை ஆங்கிலத்தில் தருக.

சமயல் சோடாவை வைத்து தினமும் பல் துலக்குங்கள். பிறகு asusal tooth paste பயன்படுத்தவும்.

மேலும் சில பதிவுகள்