நான் 2 வருடத்திற்கு முன்பு permanant straightning செய்தேன். இப்பொழுது hair சரியான dry ஆகி விட்டது. நான் எந்த oilum பாவிப்பதில்லை. அத்துடன் எனக்கு பொடுகும் உல்லது. 3 நாட்கலிற்கு ஒருமுரை தலைக்கு குலிக்கவிட்டல் தலை எண்ணை தன்மையக வந்து விடும். தலைக்கு குலித்தால் முடி பரந்து கொன்டிருக்கும். என்ன செய்வது என தெரியவில்லை. Please யரவது உதவி செயுன்கல். எந்த வகை haircut எனக்கு பொருத்தமக இருக்கும்.
நான் 2
நான் 2 வருடத்திற்கு முன்பு permanant straightning செய்தேன். இப்பொழுது hair சரியான dry ஆகி விட்டது. நான் எந்த oil உம் பாவிப்பதில்லை. அத்துடன் 3 நாளைக்கு ஒரு முறை தலைக்கு குளிக்காவிட்டால் தலை எண்ணைத் தன்மையாக வந்து விடும். குளித்தால் முடி பறந்து கொன்டிருக்கும். எனக்கு இப்பொழுது straightning செய்ய விருப்பமில்லை. எப்படியான hair cut எனது முடிக்கு பொருத்தமாக இருக்கும். please யாராவது சொல்லுங்களேன்.
ஹாய் ருத்வி!
முடி வறட்சிக்கு ஆலிவ் ஆயில்,விளக்கெண்ணெய்,நல்லெண்ணெய் மூன்றும் சம அளவு கலந்து லேசாக சூடு பண்ணி, ஒருமணி நேரம் ஊறவைத்து பிறகு தலைக்கு குளிக்கவும். முட்டையின் வெள்ளைக்கருவினையும் தலையில் தேய்த்து,ஊறவைத்து குளிக்கலாம். ஆனால், ஷாம்பு போட்டு அலசிய பிறகு கண்டிப்பாக தரமான கண்டிஷனர் தலைமுடியில் மட்டும் தடவி(வேர்க்காலில் படாமல்) சில நிமிடங்களில் அலசி விடவும்.உங்களுக்கு " யு" கட்( U- Cut) ஹேர்ஸ்டைல் நன்றாக இருக்கும் என்பது என் அபிப்ராயம்.
Thank you very much Keetha,
Thank you very much Keetha, மிகவும் பயனுள்ளதாகவும் சுலபமானதாகவும் சொல்லியுள்ளீர்கள். நான் try பண்ணுகிறேன். இப்பொழுது Garnier Fructis (oily roots, dry ends)sampoo & conditioner தான் பாவிக்கிறேன். ஏற்கனவே நான் U-cut தான் செய்துள்ளேன். அத்துடன் எனக்கு பொடுகும் உள்ளது, இதற்கும் ஏதாவது வழி சொல்லுங்கள் கீதா.
ஹாய் ருத்வி!
இப்பதான் உங்க பதிவினை பார்த்தேன். பொடுகுக்கு தேங்காய் பாலில் எலுமிச்சை சாறினை கலந்து தடவலாம். அது இல்லாமல் 200மில்லி தேங்காய் எண்ணெயினை நன்றாக சூடு பண்ணி அடுப்பை அணைத்துவிட்டு 25 கிராம் ஓமத்தினை போட்டு சடசடப்பு அடங்கியதும் 2நாட்களுக்கு அப்படியே வைத்து ,பிறகு வடிகட்டி பாட்டிலில் ஊற்றிவைத்து உபயோகிக்கவும். வாசனை பிடிக்கவில்லை என்றால் தலை குளிக்கும் முன்பு 1/2 மணி நேரம் ஊற வைத்து பிறகு அலசி விடலாம்.பொதுவாக எனக்கு தெரிந்து ஷாம்பு தனியாகவும், கண்டிஷனர் தனியாகவும் வாங்கி வைத்து உபயோகிப்பது நல்லது!
அன்புடன்,
கீதாலஷ்மி!
Thanks very much
Thanks very much Keethaluxmy, நான் Garnier sampoo, Garnier conditioner தனித்தனிதான் பாவிக்கிறேன். தேங்காய்பாலும், எலுமிச்சைப்புளியையும் try பண்ணுகிறேன். இனியும் ஏதாவது tips நீங்கள் வைத்திருந்தால் சொல்லுங்கள்.
Hi Deva mam, please
Hi Deva mam, please என்னுடைய dry hair இற்கும் ஏதாவது tips சொல்லுங்களேன்.
Hi Sai Geethalakshmi
Hi Sai Geethalakshmi விளக்கு எண்ணை என்றால் என்ன? Is it coconut oil?
ருத்வி!
தேங்காய் எண்ணெய் அல்ல!மிகவும் வளவளப்பாக இருக்கும்.
பருப்பு வேகவைக்கக்கூட மஞ்சள்தூளுடன் சேர்ப்பார்கள். சட்டென்று அதன் ஆங்கில பெயர் நினைவிற்கு வரலை. ஆ! வந்துவிட்டது.
கேஸ்டர் ஆயில்(Castor Oil)
Please English இல்
Please English இல் type பண்ண முடியுமா அந்த oil இன் பெயரை?
ருத்வி!
தேங்காய்பாலுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ சொல்லி குறிப்பு வேறு ஒரு தோழி(செந்தமிழ் செல்வி மேடம் என்று நினைக்கிறேன்).அறுசுவையில் சொல்லியது.
பொடுகு டிப்ஸ் ஒரு புத்தகத்தில் நான் படித்தது,. (ஓமம்,தேங்காய் எண்ணெய்)என் தோழி ஒருவர் தடவி பொடுகுத்தொல்லையில் இருந்து மீண்டார்.