ஈசி மட்டன் குருமா

தேதி: January 10, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

மட்டன் - கால் கிலோ
தக்காளி - மூன்று (மீடியம் சைஸ்)
வெங்காயம் - மூன்று (மீடியம் சைஸ்)
இஞ்சி பூண்டு விழுது - மூன்று தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிது
புதினா - சிறிது
எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலம் - 1
தயிர் - ஒரு மேசைக்கரண்டி (குவியலாக)
தேங்காய் பவுடர் - இரண்டு தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 6
பச்சை மிளகாய் - இரண்டு
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
தனியா தூள் - கால் தேக்கரண்டி


 

மட்டனை சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த மட்டன், தயிர், பாதி இஞ்சி பூண்டு விழுது, சிறிது கொத்தமல்லி, புதினா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு எல்லாவற்றையும் போட்டு பிரட்டிக் கொள்ளவும்.
அதனுடன் பொடியாக நறுக்கின வெங்காயம், தக்காளியை சேர்த்து தக்காளி மசியும்படி நன்கு கைகளால் பிசறி வைக்கவும்.
தாளிக்கக் கொடுத்துள்ளவைகளை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலம் போட்டு தாளித்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின்னர் மீதமுள்ள வெங்காயம், கொத்தமல்லி, புதினா சேர்த்து நன்கு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் ஊற வைத்துள்ள மட்டன் மசாலா கலவையை போட்டு பிரட்டி விடவும்.
ஒரு தட்டை வைத்து மூடி ஐந்து நிமிடம் மிதமான தீயில் வைத்திருக்கவும்.
விருப்பப்பட்டால் ஒரு உருளைக்கிழங்கை நறுக்கி போட்டு கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு குக்கரை மூடி மூன்று அல்லது நான்கு விசில் வந்ததும் இறக்கவும்.
குக்கரை திறந்து ஆவி அடங்கியதும் முந்திரியை அரைத்துக் கொண்டு அதனுடன் தேங்காய் பவுடர் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து மட்டன் குழம்பில் ஊற்றி தேங்காய் வாசனை அடங்கும் வரை தீயை மிதமாக வைத்து கொதிக்க விட்டு இறக்கவும்.
சுவையான ஈசி மட்டன் குருமா தயார். அறுசுவையில் 500 சமையல் குறிப்புகள் மற்றும் பயனுள்ள வீட்டு உபயோகக் குறிப்புகள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள <b> திருமதி. ஜலீலா </b> அவர்கள் நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள குறிப்பு இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

என்ன உங்களை அடிக்கடி பார்க்க முடியலை.சிஸ்டம் எதுவும் ரிப்பேரா?everything all right?சமையல் குறிப்பு மட்டும் வழக்கம் போல் வந்து கொண்டிருக்கிறது அசத்தலாய்.வாங்கப்பா சீக்கிரம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

பார்க்கவே மிகவும் நன்றாக உள்ளது... ஆசிய அவற்கள் கூறியது போல் உங்களின் குறிப்புகள் குறைவாக வருகிறதே?

ஆசியா ஓமர் தவாறாமல் பின்னூட்டம் கொடுத்து விடுவீர்கள் அது என்க்கு ரொம்ப பிடிச்சிருக்கு உங்க கிட்ட. கொஞ்சம் பிஸி அதான். நான் இருக்கும் போது யாரும் இல்லை அதான்.
இப்ப தான் பார்க்கிறேன் நீங்களும் வனிதாவும் 100 தாண்டியாச்சு வாழ்த்துக்கள் டைம் கிடைக்கும் போது மெதுவாக உங்கள் முறைப்படியும் செய்து பின்னூட்டம் கொடுக்கிறேன்.
ஜலீல்லா

Jaleelakamal

பிரியா குறிப்புகள் கொடுத்து கொண்டு தான் இருக்கிறேன், இப்போதைக்கு போதும் என்று நிருத்தி இருக்கிறேன். ஆசியா ஓமர் சொன்னது அரட்டையில் கானும் என்று.
உங்கள் இருவருடைய கருத்திற்கும் நன்றி.
ஜலீலா

Jaleelakamal

வாழ்த்துக்களுக்கு நன்றி.,குறிப்புக்கள் கொடுக்க ஆரம்பித்தால் மடமட வென்று கொடுத்துவிடலாம் என்று நீங்கள் சொன்னது உண்மையாகிவிட்டது.உங்களைப்பார்த்து சுறு சுறுப்பை தெரிந்து கொண்டேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்புள்ள ஜலீலா உங்க ரெசிப்பிபடி குருமா செய்தேன் ரொம்ப டேஸ்டாக இருந்தது.கணவருக்கு மிகவும் பிடித்தது.மிகவும் நன்றி.குருமாவில் பட்டை கிராம்பு இரண்டையும் பொடி செய்து கொண்டேன்.ஜலீலா நீங்கள் பொடியா குருமாவிற்க்கு போடுவீர்களா?உங்கள் தக்காளி ரசம் அதில் ஒரு சந்தேகம் தக்காளியை குக்கரில் வேகவைக்கும் தண்ணீரையும் சேர்த்துக்கொள்ளனுமா.தக்காளியை அரியாமல் முலுதாக வேக வைக்கனுமா.மீண்டும் தக்காளி ரசம் தேடினேன் கிடைக்கவில்லை.பக்கத்தை கண்டுபிடிக்கமுடியவில்லை.ஆமாப்பா முன்பு போல அறுசுவையில் பதிவு கொடுப்பதில்லை.கொஞ்ஜம் டச்சு விட்டுடுச்சு.இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணத்திர்க்காக 2வாரம் இந்தியா செல்கிறேன்.திரும்பி வரும் போது மாமியாருடன் வருவேன்.கொஞ்ஜம் பிஸியாகிடுவேன்.
என் சந்தேகத்திர்கு விளக்கம் தாருங்கள் plz.

அன்புடன் பர்வீன்.

டியர் பர்வீன் உங்களுக்காக முன்று முறை டைப் செய்து அனுப்ப முடியாமல் எரர், ஆகையால் இப்ப போடுகிறேன் லின்க் எடுக்க முடியல அருசுவை ஓப்பன் ஆகுவது ரொம்ப ஸ்லோவாக இருக்கு.

நல்ல பழுத்த தக்காளி முன்று இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து உப்பு மஞள் தூள் சேர்த்து குக்கரில் வேக வையுங்கள். ஆறியதும் நன்கு மசித்து ஜூஸை வடித்து விடுங்கள் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ஜூஸ் முழுவதும் வ்டித்து எடுத்து சககையை தூக்கி போட்டு வைடவும், கொட்டை பாக்களவு புளி கரைத்து ஊற்றி, ரசப்பொடி ஒரு தேக்கரண்டி , சாம்பார் பொடி சிறிது சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இரக்கவும்.
கடைசியாக தாளிக்க எண்ணை + நெய், ஒன்னறை தேக்கரண்டி கடுகு (பச்ச்ச மிளகாய், பூண்டு, கருவேப்பைலையை) ஒரு பேப்பரில் வைத்து நசுக்கி போட்டு தாளித்ஹு ஒரு பின்ச் பொஎருன்க்க்யாப்பொடி சேர்த்து ரசத்தில் சேர்க்கவும்.
ரொம்ப அருமையாக இருக்கும்.மொத்தம் மூனறை டம்ளர் தண்ணீர் போதும்

ஜலீலா

Jaleelakamal

ரேணுகா , விஜி இப்ப என்னால் பதில் போட முடியாது.
ஓப்பன் பண்ணி மெசேஜ் போட முடியல சனிகிழமை போடுகிறேன்.
ஜலீலா

Jaleelakamal

அன்புள்ள ஜலீலா
உங்கள் உடன் பதிலுக்கு மிகவும் நன்றி.இன்னும் குறிப்பில் சந்தேகம் கேட்டால் வந்த புதுசில் எப்படி உடன் பதில் தந்தீங்களோ அதே போல இன்னும் உங்களை பார்ப்பதில் மிகுந்த சந்தோஷம்.தக்காளி ரசம் நீங்கள் சொல்லிய்யபடி செய்தேன் சூப்பரா இருந்திச்சு.எனக்கு மிகவும் பிடித்து.ரொம்ப நன்றி ஜலீலா.

அன்புடன் பர்வீன்.

அன்புள்ள பர்வீன் கல்யாணத்திர்ற்காக ஊருக்கு போறீங்களா சந்தோஷமா போய் வாருங்கள்.
அதற்குள் செய்து விட்டீர்களா?
இந்த தக்காளி ரசம், என் பிள்ளைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.

குருமாவில் கரம் மசாலாதூள் நான் அதிகம் சேர்க்க மாட்டேன் சால்னா கருப்பகிடும், சில அரைத்து செய்யும் குருமாக்களுக்கு தான் சேர்ப்பேன்.
இதில் பட்டை, கிராம்பு, ஏலம் தாளித்து சாப்பிடும் போது எடுத்து விடலாம்.
உங்கள் உடனடி பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

ஜலீலா

Jaleelakamal

Hai Mrs.Jaleela, how are you? how many onions initially mix with mutton then how many fry later? can you explain. thanks. sankar.

" Life is a Festival, Celebrate it "