பொங்கல் நல்வாழ்த்துக்கள்

தோழிகள் அனைவருக்கும் வணக்கம்.எல்லோருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்கள்( ரொம்ப முன்னாடியே சொல்றேனோ).எல்லோரும் தமிழர் திருநாளாம் தை திருநாளை நல்லபடியா கொண்டாடுங்க.எல்லோர் வாழ்விலும் இன்பம் பொங்க ஆண்டவனை வேண்டுகிறேன்.
அன்புடன் பிரதீபா

தோழிகள் அனைவருக்கும் வணக்கம்.எல்லோருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்கள்(14/01/09)( ரொம்ப முன்னாடியே சொல்றேனோ).எல்லோரும் தமிழர் திருநாளாம் தை திருநாளை நல்லபடியா கொண்டாடுங்க.எலோர் வாழ்விலும் இன்பம் பொங்க ஆண்டவனை வேண்டுகிறேன்.அப்படியே எல்லோருக்கும் நான் சொல்லி கொள்கிறேன் நான் இந்தியா போறேன்(வரேன்).என் பயணம் இனிதே அமைய எல்லோருடைய வாழ்த்துகளையும் எதிர்பார்க்கிறேன்.உங்க எல்லோருடனும் அடுத்த மாதம் ஊரிலிருந்து திரும்பி வந்த பிறகு அரட்டை அடிக்கிறேன் அதுவரை என்னை மறந்திராதீங்கப்பா.
அன்புடன் பிரதீபா

நல்லப்படியாக ஊருக்கு போய்ட்டு வாங்க.சீக்கிரமே உங்களை எதிர்ப்பார்க்கிறோம்.உங்களுக்கும் அட்வான்ஸ் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!!

ப்ரதிபாலா..!! மெயில் செக் பண்ணிட்டீங்களா?

ஹாய் மேனகா ரொம்ப நன்றிப்பா.நான் ஊருக்கு போய் முடிந்தவரை அறுசுவையில வர செல்விமா,ஜெ மாமி,மாலதி ஆன்டி,ஜெயலட்சுமி இவர்களை பார்க்க ஆசை.பார்க்கலாம் யாரை பார்க்க முடியுதுனு.உங்களுக்கும் அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள்
மாலதி ஆன்டி உங்க மெயில் கிடைத்தது.நம்பர் குறித்து கொண்டேன்.கண்டிப்பா போன் பன்னரேன்.உங்களுக்கும் அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள்
அன்புடன் பிரதீபா

அனைவருக்கும் "இனிய பொங்கள் திருநாள் வாழ்த்துக்கள்."
உங்கள் இல்லத்தில் மகிழ்சி பொங்கி வழியட்டும்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

அறுசுவை தோழியர் அனைவருக்கும். தலைப்பொங்கல் (சரியா) காணும் பாபு பாப்பி தம்பதியருக்கும் மனமார்ந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

நான் புதன்கிழமை 14.01 பெங்களூரு செல்கிறேன். ஞாயிறு 18.01 அன்று திரும்பி சென்னை வருவேன்.

பிரதீபாலா உங்களை சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன். என் போன் நம்பர் கொடுத்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். மறுபடியும் இன்று மெயில் செய்கிறேன்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

அறுசுவை அன்பு நேயர்களுக்கு தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். தமிழர் திருநாளாம் தைத் திருநாளை அனைவரும் கொண்டாடி மகிழவும், அனைவரின் இல்லங்களில் என்றென்றும் மகிழ்ச்சி பொங்கி வழியவும் என் வாழ்த்துக்கள்.

அறுசுவை சகோதரிகள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
தமிழ் புத்தாண்டான்னு நிறைய பேருக்கு குழப்பம். அப்படி கொண்டாடுவோருக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

அறுசுவையின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். கரும்பின் இனிப்பைப் போல் வாழ்வில் என்றும் இனிமை பொங்கட்டும்.

மேலும் சில பதிவுகள்