500 சமையல் குறிப்புகளை கொடுத்த திருமதி.செந்தமிழ் செல்வி அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்!!

செல்வி அக்கா எப்படி இருக்கீங்க? உங்களுடன் பேசி நிறைய நாட்கள் ஆகிவிட்டது.

500 குறிப்புகள் குடுத்து மாபெரும் சாதனை புரிந்த உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுடைய குறிப்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களின் பல குறிப்புகளை செய்து பார்த்து பாராட்டுகளை வாங்கி உள்ளேன். நீங்கள் இதுபோல் மேன்மேலும் பல குறிப்புகளை கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இன்னும் 1000 குறிப்புகளைக் கொடுக்க மேலும் என் வாழ்த்துக்கள்.உங்கள் குறிப்புகள் அனைத்தும் அருமை.

ஹாய் செல்வி,
எப்படி இருக்கிறீர்கள்? வாழ்த்துக்கள். உங்கள் குறிப்புக்கள் சிலது குறித்து வைத்திருக்கிறேன். நேரம் கிடைக்கிறபோது சமைத்துவிட்டுச் சொல்லுகிறேன். (இப்போகூட இஞ்சி டீயுடன்தான் இருக்கிறேன்.:-)) இன்னும் நிறையக் குறிப்புக்கள் கொடுக்கவேண்டும்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஆஹா, 500-ஐ தொட்டுவிட்டீர்கள்... அதுவும் இந்த வாரத்தில் மட்டும் எத்தனை குறிப்புகள்!!. (நான் இப்பொழுதுதான் எல்லாவற்றையும் பார்த்தேன்.- இந்த வாரம் கொஞ்சம் அறுசுவைக்கு நிறைய வர இயலவில்லை.)

உங்களுடைய குறிப்புகள் அனைத்தும் அருமை. நிறைய குறிப்புகள், எங்கள் வீட்டில் ரீபீட் ஆகும் லிஸ்ட்டில் இருக்கு! : )
எவ்வளவு பிஸியிலும், இத்தனை குறிப்புகள் எங்களுக்காகவெல்லாம் கொடுத்து இருக்கீறீர்கள். அதற்கு எல்லோர் சார்பிலும் என் நன்றிகள் பலப்பல.!!
நீங்க மேலும் நிறைய குறிப்புகள் கொடுத்து கூடியசீக்கிரமே, 1000-த்தையும் தொட என் அன்பான வாழ்த்துக்கள்!!.

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

செல்விக்கா, வாழ்த்துக்கள்.கலக்குறீங்க போங்க.உங்க குறிப்புகள் அனைத்தும் ரொம்ப நல்லா இருக்கு.எனக்கு ஒரு வாலு பையன் இருப்பதால் பின்னூட்டம் அனுப்ப முடிவதில்லை.உங்க உடல் நலம் இப்ப எப்படி இருக்கு?

savitha

அன்பு செல்வி மாபெரும் சாதனைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். உன்னுடைய ஐநூறு அருமையான சமையற் குறிப்புகள் தொடர்ந்து ஆயிரமாக வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.அறுசுவையில் உன் பங்களிப்பு என்றென்றும் வளர என் வாழ்த்துக்கள் நன்றி.

செல்விமா வாழ்த்துகள்... கட கடனூ 500 குறிப்புகளுக்கும் மேலே வந்துடுச்சா ...சீக்கிரம் ஆயிரம் தொட வாழ்த்துகள்மா ....ஆனா எனக்கு குறிப்புகளை கண்டுபிடித்து எடுக்கறதுக்கு தான் நேரம் கிடைக்க மாட்டேங்குது... :-(

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

செல்வி அக்கா 500 குறிப்புக்கள் குடுத்து அச்த்திட்டிங்க.
( அசத்த பேவது யாரு? அறுசுவையில் எனில் செல்வி அக்கா)
உங்கள் தெண்டு மேம் மேலும் வளர வாழ்த்துக்கள்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

500 பயனுள்ள குறிப்புக்கள் கொடுத்த தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.மென்மேலும் புதிய குறிப்புக்கள் கொடுக்க வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

வாழ்த்துகள். மேலும் நிற்ய்ய குறிப்புகள் குடுத்து கொண்டே இருக்கவேண்டும். பல ஆயிரம் குறிப்புகள் கொடுத்து அசத்தி கொண்டே இருக்க வேண்டுகிறேன்.

செல்வி அக்கா வாழ்த்துக்கள்.

//அட அதுக்குள்ள முடித்து விட்டீர்களா? உஙகள் உடம்பு இப்ப பரவாயில்லையா?//

//இந்த அருசுவைக்கு ஒரு தாயாக இருந்து நீங்கள் ஆற்றும் பணி ஒரு வரியில் சொல்லி முடிக்க முடியாது/

// எல்லோரும் செல்வியமா என்று தானே உஙக்ளை அழைக்கிறார்கள் அதற்காக சொன்னேன். //

//இன்னும் பல புதிய குறிப்புகளை கொடுக்க வாழ்த்துகள்./

ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்