முதல் சதமடித்த திருமதி வனிதா மற்றும் திருமதி ஆசியா அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

அன்புச் சகோதரிகளுக்கு, நூற்றுக்கும் மேற்பட்ட சமையற் குறிப்புகளை வழங்கி முதல் சதமடித்து சாதனைப் புரிந்துள்ளீர்கள் அதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். இதுப் போல் தொடர்ந்து பல நூறு சதமடிக்கவும் என் வாழ்த்துக்கள்.உங்கள் குறிப்புகளையும் செய்து பார்க்கும் சந்தர்ப்பத்தை ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றேன். தாமதமாக வந்த பாராட்டுதலை நீங்கள் இருவரும் மனமுவந்து ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகின்றேன் நன்றி.

ஆஹா, நம் தோழிகள் எப்படி கவனிக்காமல் விட்டார்கள்? சத்தமின்றி சாதனைங்கிறது இது தான்.
ஆசியா, வனிதா,
முதல் சதம் அடித்த உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள். மேன்மேலும் நிறைய குறிப்புகள் வழங்கி, பல நூறு சாதனை படைக்க வாழ்த்துகிறேன்.
இருவருமே தாமத்திற்கு மன்னியுங்கள், ப்ளீஸ்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஆசியா,வனிதா வாழ்த்துக்கள் பா. நான் இப்போதுதான் இந்த த்ரெட் பார்ர்த்தேன்.

ஆசியா,வனிதா முதல் சதம் அடித்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.மேலும் பல நூறு குறிப்புக்கள் வழங்க வாழ்த்துகிறேன்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

ஆஹா.... இதெல்லாம் வேறு நடக்குதா நம்ம அறுசுவை'ல?! இப்ப தான் பாக்கறேன்.

உங்க வாழ்த்துக்களும், பின்னுட்டங்களுமே இதற்கு காரணம். எல்லாருக்கும் ரொம்ப நன்றி.

ஆசியா... உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்கள் இருvarukkum enadhu வாழ்த்துக்கள்.

வனிதா மற்றும் ஆசியா மேடமிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இதுப் போல் இன்னும் பல நூறு குறிப்புகள் கொடுக்க என் வாழ்த்துக்கள்.

ஆசியா மேடம் எப்படி இருக்கீங்க? மற்றவர்களை ஊக்குவிப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே. அதுப்போல் நம் அறுசுவை தோழிகளில் வாழ்த்துக்கள் அனைத்தும் உங்களை இன்னும் பல குறிப்புகள் கொடுக்க ஒரு துண்டுதலாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

ஹாய் வனி எப்படி இருக்கீங்க? உங்க குட்டி பாப்பா எப்படி இருக்கா? சளி குறைந்து விட்டதா? இவ்வளவு குறுகிய காலத்தில் சதமா வியப்பாக இருக்கிறது. all the best.

lovely
ஆசியா வனிதா முதல் சதம் போட்டுவிட்டதை நினைத்து பெருமைப்படுகிறேன்
சமையலில் மட்டுமல்ல பல சாதனைகளையும் நம்மால் சாதிக்கமுடியும்
என்று மார்தட்டிகொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை
மென்மேலும் வளர இறைவன் வழிகாட்டுவான்

உன்னை நேசி
உலகம் உன்னை சுவாசிக்கும்.
அன்புடன் மலிக்கா

ஆசியா வனிதா 100 வாழ்த்துக்கள்.

ஹா ஹா இது எப்போ குறிப்புகள் வந்து கொண்டே இருந்தது ம்ம் இவ்வளவு விரைவி 100 சதம் அடித்த உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

வனிதா பாரம்பரிய சமையலும், ஆசியா இஸ்லாமிய இல்ல உறிப்புகளும் இன்னும் பல சதம் அடிக்க வாழ்த்துக்கள்..

மனோகரி அக்கா கரெக்டாக எல்லோரையும் கண்காணித்து வருகிறார்.

ஜலீலா

Jaleelakamal

உங்கள் இருவருக்கும் என் நல் வாழ்த்துக்கள் :) விரைவில் அடுத்த சதம் அடியுங்கள்!!

அன்புடன்
உமா

முதல் சதமடித்த உங்களிருவருக்கும் வாழ்த்துக்கள்.மேலும் பல நூறு சதம் அடிக்க வாழ்த்துக்கள்.இவ்வள்வு சீக்கிரம் சதம் அடித்தது ரொம்ப ஆச்சரியமா இருக்கு.
ஆசியா[பெயர் சொல்லி அழைக்கிறேன்னு தப்பா நினைக்காதீங்கப்பா]மற்றவர்களின் குறிப்புகளுக்கு பின்னுட்டம் கொடுப்பதில் உங்களுக்கு நிகர் நீங்க தான்.விரைவில் உங்கள் குறிப்புகளை விளக்க படங்களுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

மேலும் சில பதிவுகள்