மைக்ரோவேவ் க்ரில்டு ஃபிஷ்

தேதி: January 12, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. மீன் - 1 (மிதமான அளவு, 500 g)
2. மிளகு - 2 தேக்கரண்டி
3. உப்பு ருசிக்கு
4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
5. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
6. மல்லி தூள் - 1/2 தேக்கரண்டி
7. எலுமிச்சை - 1


 

மீன் சுத்தம் செய்து மேலே கத்தியால் கிரி வைக்கவும்.
மிளகு பொடி செய்து, அனைத்தையும் எலுமிச்சை சாறு கலந்து வைக்கவும்.
இதை மீன் மேல் தடவி (நன்றாக வெட்டிய இடத்தில் உள்ளே படும்படியும், மீனின் உள்ளேவும் பூச வேண்டும்) 4 மணி நேரம் மூடி போட்ட பாத்திரத்தில் ஃபிரிஜ்ஜில் வைக்கவும்.
இதை மைக்ரோவேவில் வைத்து 10 நிமிடம் இடையில் ஒரு முறை திருப்பி விட்டு க்ரில் செய்யவும்.


இதில் மிளகாய் தூள், மல்லி தூள் கட்டாயம் இல்லை. விரும்பினால் அதற்கு பதிலாக மிளகே இன்னும் சிறிது சேர்த்துக்கலாம். மிளகு தூளுக்கு பதிலாக ஃபிரெஷ் மிளகு பொடித்து உபயோகிப்பது நல்லது. மீனின் அளவுக்கு ஏற்றார் போல் நேரத்தை கூட்டியோ குறைத்தோ செய்யுங்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

வாணி,சிம்பிள் ,சூப்பர்.மிளகாய்த்தூள்,மல்லித்தூள் சேர்க்காமல் செய்தாலே நல்லயிருக்கும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நன்றி ஆசியா... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா இதை செய்து பார்த்தேன். செய்வதற்கு எளிதாகவும் மிகவும் நன்றாக இருந்தது. நான் ஆயில் லேசாக ஸ்ப்ரே செய்து அவனிலேயே பேக் செய்து விட்டேன். நன்றி உங்களுக்கு

மிக்க நன்றி வின்னீ. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆ இங்கயுமா ன்னு ஓடிடாதீங்கோ.

நான் பிஷ் பண்ணினதே இல்ல. ரொம்ப நாளா ட்ரை பண்ணலாமின்னு ஆசை. உங்க டிஷ் பார்த்து நமக்கு ஏத்த மாதிரி சிம்ப்ளா இருக்கேன்னு இந்த வாட்டி சால்மன் வாங்கி வந்தேன். மல்லித்தூள் போடல, gg பேஸ்ட் கொஞ்சம் சேர்த்தேன். ஞாயித்துகிழமை மொத வாட்டி - கொஞ்சமா ட்ரை பண்ணுவோமின்னு ரெண்டு துண்டு மட்டும் 8 நிமிஷம் வச்சு பார்த்தேன் - அப்படியே கருகி hard ஆயிடுச்சு :-( . மிச்சதெல்லாம் freezer ல வச்சிட்டேன்
எங்காள் வேற ஏன் இப்படி எல்லாம் என்னை கொடுமை படுத்தறேன்னு டயலாக் விட்டுட்டார் :-(

திரும்பவும் நேத்து ராத்திரி எடுத்து பண்ணினேன். 5 நிமிஷத்துல வெளிய எடுத்தாச்சு. - வெரி சிம்பிள் அண்ட் வெரி tasty :-) நான் ரொம்ப சின்ன துண்டுகளா வச்சதுனால கம்மி நேரம் தான் ஆகும் போல. இனி அடிக்கடி செய்வேன் - thanks

இப்படிக்கு,
சந்தனா

மிசஸ் சேகர், எப்படியோ விடாம செய்துட்டீங்களா?? ரொம்ப சந்தோஷம். நான் எப்பவும் முழு மீன் தான் வைப்பேன்... துண்டு போட்டு வைப்பதில்லை. அதான் முதல்லயே சொன்னேன்... குறைஞ்சது 250 கிராம் மீன்'அ முழுசா மேல கீறிட்டு வைங்கன்னு. அது மட்டுமில்ல மைக்ரோவேவ் பவர் பொருத்தும் நேரம் மாறும். எப்பவும் குறைவான நேரம் வைத்து பாத்துகிட்டே இருக்கனும். நான் பல முறை செய்து தான் எனக்கு இந்த அளவு மீனுக்கு இவ்வளவு நேரம் தேவைன்னு சரியா தெரிஞ்சிது. எப்படியோ... நல்லா வந்தது மிக்க மகிழ்ச்சி. நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா