சர்க்கரைப் பொங்கல் - 2

தேதி: January 12, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - ஒரு கப்
கடலைப்பருப்பு - கால் கப்
வெல்லத் தூள் - 1 1/2 கப்
தேங்காய் - ஒரு மூடி
முந்திரி - 5
ஏலக்காய் - 3
நெய் - ஒரு மேசைக்கரண்டி
டால்டா - 2 மேசைக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
தண்ணீர் - 1 1/4 லிட்டர்


 

பச்சரிசி மற்றும் கடலைப்பருப்பை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை தூளாக உடைத்து வைத்துக் கொள்ளவும். ஏலக்காயை தூளாக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் அரிசியை களைந்து போடவும். அதனுடன் கடலைபருப்பை கழுவி தண்ணீரை வடித்து விட்டு போடவும். இரண்டையும் சேர்த்த பின்னர் 20 நிமிடம் வேக விடவும். இடையிடையே கிளறி விடவும்.
அரிசி, கடலை பருப்பு இரண்டும் வெந்ததும் தூளாக்கிய வெல்லத்தை சேர்க்கவும். வெல்லம் கரையும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
வெல்லம் கரைந்ததும் அதில் தேங்காய் துருவல் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரியை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதன் பிறகு சர்க்கரை பொங்கலில் வறுத்த முந்திரி மற்றும் பொடித்த ஏலக்காய் தூள் சேர்த்து அதனுடன் டால்டாவை ஊற்றி கிளறி இறக்கவும்.
சுவையான சர்க்கரை பொங்கல் தயார். அறுசுவை நேயர்களுக்காக இந்த சர்க்கரைப் பொங்கல் குறிப்பினை வழங்கியவர் <b> செல்வி. ஸ்ரீதுர்கா </b> அவர்கள்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அப்பா எனக்கு பிடித்த சர்க்கரை பொங்கல் வந்துவிட்டது.
துர்கா வாவ் சூப்பர்.
ஜலீலா

Jaleelakamal

பொங்கல் அன்று உங்கள் பொங்கல் தான்,சூப்பர்.எல்லாம் வீட்டில் இருப்பதால் நிச்சயம் செய்துவிடுவேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.