ஆலு மேத்தி மசாலா

தேதி: January 12, 2009

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிறிய உருளைக்கிழங்கு - 1/4 கிலோ,
வெந்தயக்கீரை - 1 கட்டு,
பெரிய வெங்காயம் -1,
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி,
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி,
சீரகம் - 1 தேக்கரண்டி,
நெய் - 2 தேக்கரண்டி,
எண்ணெய் - 2 தேக்கரண்டி,
உப்பு - தேவைக்கேற்ப.


 

வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
உருளைக்கிழங்கை குழையாமல் வேக வைத்து, தோல் உரித்து வைக்கவும்.
கீரையை ஆய்ந்து, அலசி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
கீரை, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
கீரை வெந்ததும் உருளைக்கிழங்கு, கரம் மசாலா, நெய் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.


சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

செல்விக்கா, உங்க ஆலு மேத்தி மசாலா ஆளையே அசத்திருச்சி.வாவ்! என்ன டேஸ்ட்!ஒரே பாராட்டு மழை தான்.அலுவலகத்தில் இருந்து ஃபோன் பண்ணி என் கணவர் பாராட்டினார்.எல்லா புகழும் உங்களுக்கே.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

ஹாய் திவ்யா,
நலமா? மகள் நலமா?
ரொம்ப நாளாச்சு பேசி.
எல்லா புகழையும் எனக்கே கொடுக்காமல் செய்த உனக்கும் கொஞ்சம் வச்சுக்கோ:-)
நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.