சர்க்கரைப் பொங்கல்

தேதி: January 13, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (3 votes)

 

பச்சரிசி-2 கப்
பயித்தம்பருப்பு-அரை கப்
பால்-அரை கப்
முந்திரிப்பருப்பு- 10
பாதாம் பருப்பு-5
உலர்ந்த திராட்சை-3 மேசைக்கரண்டி
உருண்டை வெல்லம்-3 அல்லது 31/2 கப்
உருக்கிய நெய்- அரை கப்
தேங்காய்த்துருவல்- அரை கப்
ஏலக்காய்-10
குங்குமப்பூ- 2 சிட்டிகை


 

பயத்தம்பருப்பை அரை ஸ்பூன் நெய் விட்டு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
பின் அரிசியையும் பருப்பையும் நன்கு கழுவி தண்ணீரில் ஊற வைக்கவும்.
சிறிது நெய்யில், முந்திரிப்பருப்பையு, திராட்சையையும் தேங்காய்த்துருவலையும் பொன்னிறமாக வறுக்கவும்.
பாதாம் பருப்பை கொதிக்கும் வெந்நீரில் 30 நிமிடங்கள் போட்டு வைத்து, பிறகு தோலல உரித்து மெல்லியதாக சீவவும்.
அதையும் சிறிது நெய்யில் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
ஏலக்காயை சிறிது நெய்யில் வறுத்து சிறிது சீனியுடன் நன்கு பொடித்துக்கொள்லவும்.
வெல்லத்தைப் பொடித்து அது மூழ்கும் அளவு நீர் ஊற்றி கொதிக்க விடவும்.
பிறகு வடிகட்டி மறுபடியும் கம்பிப்பாகு காய்ச்சி வைக்கவும்.
7 1/2 கப் நீரையும் பாலையும் சேர்த்து ஒரு பாத்திரத்தில் கொட்டி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
பொங்கி வரும்போது அரிசியையும் பருப்பையும் நீரை இறுத்து விட்டு போடவும்.
சாதம் நன்கு குழைந்து கெட்டியானதும் பாகை விட்டு கிளறவும்.
சேர்ந்து வரும்போது நெய்யை விட்டு கிளறவும்.
பின் அனைத்துப் பொருள்களையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

யார் குறிப்புங்கோ இது??!! நல்லா குறிப்பு குடுத்த மாதிரி அழகா பேரும் குடுங்கோ.... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அடடா... :( மனோ மேடம் நீங்களா?! சாரிங்க... இங்க பதிவு போட்ட பிறகு தான் "சமீபத்திய பதிவுகள்"ல உங்க பேரை பார்த்தேன். :) நல்ல குறிப்பு பேரில்லாம இருக்கேன்னு கேட்டுட்டேன், கோசிக்காதிங்க. சின்ன பொண்ணு... மன்னிச்சு விட்டுடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்றைக்கு எங்கள் வீட்டில் உங்கள் சர்க்கரை பொங்கல்தான். அருமையாக இருந்தது. இது வரைக்கும் நான் சர்க்கரை பொங்கல் செய்ததே இல்லை. செய்ய தெரியாது. உங்கள் புண்ணியத்தில் இன்று அருமையான பொங்கல் சாப்பிட்டோம் :) ரொம்ப நன்றி மேடம்.

அன்புடன்
உமா

மனோ மேடம்... நானும் இன்னைக்கு இதை தான் செய்தேன். ரொம்ப அருமை. நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்புள்ள உமா!

சர்க்கரைப் பொங்கலை செய்து பார்த்து உடன் பின்னூட்டம் கொடுத்த உங்களின் அன்புக்கு மிகவும் நன்றி!!

அன்புள்ள வனிதா!

சர்க்கரைப் பொங்கல் நன்றாக வந்தது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. அன்பான பின்னூட்டத்துக்கு என் நன்றி!

டியர் மனோ மேடம்,
இன்று என் பையன் திடீரென்று சர்க்கரைப்பொங்கல் வேண்டுமென்றான்!!, அதிசயம், ஏனென்றால் அவன் அவ்வளவா ஸ்வீட் பிரியர் கிடையாது!. சரி, உடனே உங்க சர்க்கரை பொங்கல் (முன்பே நினைத்தது செய்துப்பார்க்க வேண்டுமென்று...இன்றுதான் நடந்தது!) ரெஸிப்பி பார்த்து செய்தேன். ரொம்ப சுவையாக டேஸ்ட்டியாக இருந்தது. நான் இதற்கு முன் சர்க்கரைப்பொங்க‌லில் தேங்காய் சேர்த்து செய்தது கிடையாது, இதுவே முதல் முறை. குழந்தைகளுக்கும் பிடித்து இருந்தது. இனி இந்த வெர்ஷனும் அப்பப்ப செய்திடவேண்டியதுதான்!. குறிப்புக்கு மிக்க நன்றி மேடம்.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

Dear Mrs. Mano,

I have tried your 'Sarkkarai Pongal' yesterday, it came out very delicious. Thank you.

Maggi