ஷாஹி துக்கடா (குழந்தைகளுக்கு)

தேதி: January 13, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. ப்ரெட் துண்டுகள் - 5
2. நெய்
3. பால் - 1 லிட்டர்
4. சர்க்கரை - சுவைக்கு
5. ஏலக்காய் (அ) ரோஸ் எசன்ஸ் - சிறிது
6. முந்திரி, பாதாம்


 

பால்'ஐ கொதிக்க விட்டு நன்றாக காய்ச்சவும். (நாலில் ஒரு பங்காக குறைய வேண்டும்).
இந்த பால், சிறிது தண்ணீர், சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு வைக்கவும்.
ப்ரெட் ஓரங்களை நீக்கி, 4 துண்டாக்கவும். நெய் சூடு செய்து ப்ரெட் துண்டுகளை பொரித்து எடுக்கவும்.
இதை பால் கலவையில் 5 நிமிடம் ஊற வைத்து எடுத்து, தட்டில் வைத்து, மேலே சிறிது பால் கலவை ஊற்றி, நெய்யில் வறுத்த முந்திரி பாதாம் தூவி பரிமாறவும்.


உண்மையில் இதில் பொரித்த ப்ரெட்டை சர்க்கரை பாகு செய்து அதில் ஊற வைத்து, நன்றாக காய்ச்சிய பாலை மேலே ஊற்றி தான் பரிமாருவார்கள். ஆனால் அதை விட பாலில் ஊறிய ப்ரெட் சுவை அதிகமாக இருக்கும். விரும்பினால் இரண்டும் முயர்சித்து பாருங்கள்.

மேலும் சில குறிப்புகள்