வருங்கால முதல்வர்களின் பரிதாப நிலை

திருமங்கலம் தந்த தர்மடி - வருங்கால முதல்வர்களின் பரிதாப நிலை

கீறல் விழுந்த ரிக்கார்டு போல ஒரே மாதிரி பேச்சு, எதற்கெடுத்தாலும் தி.மு.க. மீது பழி போடுவது, தலைவர்களை மரியாதையின்றி விளிப்பது, உலகிலேயே தான் ஒருவன் தான் உத்தமன் போல பேசுவது இவை எல்லாவற்றுக்கும் திருமங்கலம் மக்கள் சம்மட்டி அடி கொடுத்துவிட்டார்கள்.

திருமங்கலத்தில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. தி.மு.க அமோக வெற்றி பெற்றிருக்கிறது. கட்சிகள் பெற்றுள்ள வாக்கு விபரம்:

திமுக - 79,422

அதிமுக - 40,156

தே.மு.தி.க - 13,136

ச.ம.க - 754

இதில் கவனிக்கவேண்டிய ஒரு அம்சம், தே.மு.தி.க.வுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சரிவு தான். சென்ற தேர்தலில் இதே தொகுதியில் அந்த கட்சி பெற்ற வாக்குகள் 19,970. ஆனால் இம்முறை 13,136 தான். தே.மு.தி.க.வுக்கு இது மிகப்பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளை பிரித்ததை மட்டுமே சாதனையாக கொண்டு கட்சி நடத்தி வந்த கேப்டனுக்கு இனி கஷ்ட காலம் தான். அதிமுக இவரை விட கிட்ட தட்ட மூன்று மடங்கிற்கும் மேலான வாக்குகளை வாங்கியிருப்பது ஆறுதலான விஷயம்.

2011 இல் நான் தான் முதல்வாராக்கும் என்று மார்தட்டுபவரின் பரிதாப நிலைமையாக்கும் இது.

மற்றொருவர் நிலை இன்னும் கேவலம்: சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி பெற்றுள்ள வாக்குகள் மொத்தமே 754 தான். முன்னவரக்கு சற்றும் சளைக்காமல் “2011 இல் நான் தான் முதல்வாராக்கும்” என்று இவரும் அவ்வப்போது கிச்சு கிச்சு மூட்டிவருகிறார். சென்ற தேர்தலில் பா.ஜ.க. கூட இங்கு7,500 வாக்குகள் பெற்றிருக்கிறது.

உங்கள், அருண் பிரகாஷ்
arunprasangi@yahoo.co.in

இது வெட்டி அரட்டை இல்லை. உருப்படியான அரட்டை...

அறுசுவையில் அரசியல் பேச வேண்டாமே....
இது பல வித விவாதங்களில் ஆரம்பித்து,விபரிதத்தில் முடியலாம்.
ஒவ்வொருவரும் ஒரு தலைவரின் விசிறியாக இருக்கும்போது,
ஒருவர் மற்றவர் மீது குறை கூற ஆரம்பித்து ,மன கசப்பு ஏற்படலாம்.
==ஆகையால், தயவு செய்து அறுசுவையில் அரசியல் பேச வேண்டாமே என்பது என் கருத்து...==
Everyone has an individual idea,taste& preferences,we respect everyone.Its a KIND OF MANS DUTY...

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

okey பஜீலா. தங்கள் கருத்துக்கு நன்றி... அப்புறம் சாப்பாடு எல்லாம் ஆச்சா? நான் இனிமே தான்...

கொடுத்து வாழ்... கெடுத்து வாழாதே...

மேலும் சில பதிவுகள்