பூண்டு காரா சேவ்

தேதி: January 14, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

கடலைமா - 1 கப்
அரிசிமா - 1/2 கப்
பூண்டு - 6 பல்
பச்சை மிளகாய் - 4
மிகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மிளகுப்பொடி - 1 தேக்கரண்டி
வெண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

பூண்டையும், பச்சை மிளகாயையும் விழுதாக அரைக்கவும்.
இந்த விழுதை தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.
கடலைமா, அரிசிமா, மிளகுப்பொடி, வெண்ணெய், உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
விழுதுத் தண்ணீரை சேர்த்து கெட்டியாக பிசையவும்.
ஒரு வாணலியில் எண்ணெயை சூடாக்கவும்.
முறுக்கு அச்சு பிடியில் காராசேவ் வில்லையை போட்டு தயாராக வைக்கவும்.
அச்சுப் பிடிக்குள் மாவை திணித்து சூடான எண்ணெயில் பிழியவும்.
எண்ணெய் ஓசை அடங்கியதும் காரா சேவினை வடித்து எடுக்கவும்.
சுவையான காராசேவ் தயார்.


மேலும் சில குறிப்புகள்


Comments

Dear vathsala,
i made your recipe karasev today.it came out very well.so tasty.this is the first time i am trying this recipe.thanks for your hint
subha saravanan

வத்சலா அவர்களே இன்று மதியம் பூண்டு காராசேவ் செய்ய பிசைந்து வைத்தேன் ரொம்ப இளகி இருந்ததால் ஓமபொடியாக சுட்டு விட்டேன். ரொம்ப நல்லா இருந்தது சுவை.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

பின்னூட்டம் அனுப்பியமைக்கு நன்றி. அடுத்தமுறை செய்யும் போது கெட்டியாக பிசைந்து செய்து பாருங்கள் நன்றாக இருக்கும்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"