புளி மிளகாய்

தேதி: January 14, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புதுப்புளி - 100 கிராம் (அல்லது ஒரு சிறிய ஆரஞ்சுப் பழ அளவு)
பச்சை மிளகாய் - 15 (சிறிய குண்டு சைஸ்)
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தாளிக்க :
கடுகு(மட்டும்)


 

புளியை கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். உப்பு சேர்க்கவும். பச்சை மிளகாய்களை சாய்வாக லேசாகக் கீறிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு, வெடிக்க விடவும். அதில் பச்சை மிளகாய்களைப் போட்டு, வதக்கவும்.
கரைத்து வைத்துள்ள புளியை அதில் ஊற்றி, ஒரு மூடியினால் மூடி, மிதமான தீயில் கொதிக்க விடவும்.
துவையல் பதத்துக்கு வந்ததும், இறக்கி, ஆற விட்டு, உபயோகிக்கலாம்


சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என்று எல்லாவற்றிற்கும் பொருத்தமான சைட் டிஷ் இது. ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஆமாம் எங்கப்பாக்கு இது ரொம்ப புடிக்கும்!

எல்லாத்துக்கும் தொட்டுபார்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...