இறால் கொழுக்கட்டை 1

தேதி: April 2, 2006

பரிமாறும் அளவு: ஒரு நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - 100 கிராம்
பொரி அரிசி - 50 கிராம்
இறால் - 50 கிராம்
வெங்காயம் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
துருவிய தேங்காய் - ஒரு கப்
எண்ணெய் - 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - 15 கிராம்
புதினா - 15 கிராம்


 

அரிசியையும், பொரி அரிசியையும் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை, புதினா இவற்றை சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி இறாலை வதக்கவும்.
இறாலில் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறவும்.
5 நிமிடத்திற்கு பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், மல்லி, புதினா, துருவிய தேங்காயை சேர்த்து மேலும் 3 நிமிடம் கிளறவும்.
இறால் விழுது தயாரானவுடன் அதனை ஆறவிடவும்.
ஆறியவுடன் அதில் அரைத்த அரிசி மாவினை சேர்த்து கிளறி உருண்டையாக பிடித்து 15 நிமிடம் அவிக்கவும். வெந்ததும் எடுத்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்