ஸ்டஃப்டு பரோட்டா (குழந்தைகளுக்கு)

தேதி: January 15, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. கோதுமை மாவு - 1 கப்
2. மைதா மாவு - 1 கப்
3. நெய் - 5 மேஜைக்கரண்டி
4. உப்பு
5. ட்ரை தேங்காய் துருவல் - 2 கப்
6. பொடித்த சர்க்கரை - 1/2 கப் (அ) ருசிக்கு
7. ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி


 

தேங்காய் துருவல், ஏலக்காய் தூள், சர்க்கரை ஒன்றாக கலந்து வைக்கவும்.
மாவுகளை ஒன்றாக உப்பு, சிறிது நெய், தேவைக்கு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசையவும்.
இதை ஈரமான துணி போட்டு மூடி அரை மணி நேரம் வைக்கவும்.
இதை சின்ன உருண்டைகளாக்கி, சப்பாத்தி போல் தேய்க்கவும்.
ஒரு சப்பாத்தி மேல் தேங்காய் கலவை சிறிது பரப்பி, மேலே இன்னொரு சப்பாத்தி வைத்து மூடி, ஓரங்களை விரலால் சோமாசிக்கு அழுத்துவது போல் சுருட்டி அழுத்தவும்.
இதை நெய் விட்டு தோசை கல்லில் சுட்டு எடுக்கவும். நாலாக வெட்டி சூடக பரிமாறவும்.


மேலே இன்னொரு சப்பாத்தி வைப்பதற்கு பதிலாக, இந்த சப்பாத்தியையே பாதியாக மடித்தும் செய்யலாம் (சோமாசிக்கு மடிப்பது போல்). இரண்டாக வெட்டி பரிமாறலாம். உள்ளே வைக்கும் கலவை ஈரபதம் இல்லாததால் மற்ற பரோட்டா போல் உருட்டி மீண்டும் சப்பாத்தியாக தேய்க்க இயலாது. சிலருக்கு ட்ரை தேங்காய் ருசி பிடிக்காது, விரும்பினால் ஃப்ரெஷ் தேங்காய் துருவலும் உபயோகிக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்