தேதி: January 15, 2009
பரிமாறும் அளவு: 3
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
உருளைக்கிழங்கு - 2 பெரியது
பச்சை பட்டாணி - 1/2 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 3 பல்
கறிவேப்பில்லை - 4 இலை
கடுகு - தாளிக்க
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
முதலில் தேவையான பொருட்களை தயாராய் எடுத்து வைத்து கொள்ளவும்.
வெங்காயம் பொடியாக வெட்டி கொள்ளவும். தக்காளியை நீளமாக அரியவும். பூண்டினை நசுக்கி வைக்கவும். உருளைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
ஒரு நாண் ஸ்டிக் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு போட்டு தாளிக்கவும்.
பின்னர் அதில் நசுக்கி வைத்துள்ள பூண்டினை போட்டு வதக்கவும். அதன் பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
இப்பொழுது உருளைக்கிழங்கு போட்டு வதக்கவும்.
அதன் பின் பச்சை பட்டாணி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தண்ணீர் ஊற்ற வேண்டாம். குறைந்த தீயில் சுமார் 15 நிமிடம் வேகவைக்கவும்.
5 நிமிடத்திற்கு ஒரு முறை அனைத்தும் சேர்த்து நன்றாக கிளறி வேகவிடவும்.
கடைசியில் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
சுவையான உருளைக்கிழங்கு பட்டாணி வறுவல் ரெடி.
Comments
ஹாய் கீதாச்சல்
இன்று இந்த வறுவலை தான் செய்தேன்.ரொம்ப டேஸ்டா இருந்தது.சாம்பாருக்கு நல்ல காம்பினேஷன்.அலங்கரிக்க கொத்தமல்லி இல்லாம போயிடுச்சு.ஆனாலும் டேஸ்ட் தான்.தங்களுடைய குறிப்புக்கு நன்றி.
சுகன்யா
சுகன்யா,
மிகவும் நன்றி.நானும் பல சமயம் கொத்தமல்லி இல்லாமல் தான் செய்வேன்(கொத்தமல்லி பிரிஜில் இருக்காது)…
அன்புடன்,
கீதா ஆச்சல்
dear geetha
Everyone will get a period of success or satisfaction during his life time
dear geetha,
potattovaium, pattanium muthalileya vega vaikka venduma? (ennidam tamil font illai)
regards and thanks,
sumi
Everyone will get a period of success or satisfaction during his life time
ஸ்மிதா,
மிகவும் தமதமன பதிலுக்கு மன்னிக்கவும். நான் இதில் உருளைகிழங்கையும் பட்டாணியையும் சேர்த்து வேகவைத்து இருக்கின்றேன்.
பச்சை பட்டாணி என்றால் அப்படியே சேர்த்து வேகவைக்கலாம்.
காய்ந்த பட்டாணி என்றால் அதனை தனியாக வேகவைத்த பிறகு தான் இதில் சேர்க்க வேண்டும்.
அன்புடன்,
கீதா ஆச்சல்