தாளிச்சா

தேதி: January 15, 2009

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

ஆட்டுக்கறி எலும்போடு - அரை கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி
துவரம்பருப்பு - ஒரு கப்
தக்காளி - 2
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 3
கத்திரிக்காய் சின்னதானால் - 2
உருளைக்கிழங்கு - 2
கேரட் - ஒன்று
மாங்காய் - ஒன்று
வாழைக்காய் - ஒன்று
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 4
மிளகாய்பொடி - 2 தேக்கரண்டி
சீரகப்பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
மிளகுப்பொடி - அரை தேக்கரண்டி
கரம் மசாலாப்பொடி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைத்த தேங்காய் விழுது - ஒரு மேசைக்கரண்டி


 

முதலில் இறைச்சியை கழுவி அதில் பாதி இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் மிளகாய்பொடி தவிர்த்து, அனைத்து மசாலாப்பொடி, உப்பு போட்டு பிசறி வைக்கவும்.
பின்பு வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும். தக்காளியை எட்டாக வெட்டி வைக்கவும். மல்லி புதினாவை ஆய்ந்து கழுவி வைக்கவும்.
துவரம் பருப்பை கழுவி 2 கப் தண்ணீர்விட்டு குக்கரில் 4 நிமிடங்கள் வேகவைத்து தனியே எடுத்து வைக்கவும். புளியை சுடுத்தண்ணீரில் ஊற வைக்கவும்.
தேங்காயை மசிய அரைத்துக் கொள்ளவும். பின்பு குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு சிவந்ததும் அதில் வெங்காயத்தைப்போட்டு சுருள வதக்கவும்.
கலர் மாறும் தருவாயில் பச்சை மிளகாய், தக்காளி போட்டு வதக்கவும். பின்பு மிளகாய்தூள் போட்டு கிளறவும்.
மேலும் அதில் மீதமுள்ள இஞ்சி பூண்டைப்போட்டு பச்சை வாசனை போகும் வரை கிளறி, அதில் மல்லி புதினாவை போடவும்.
அதில் பிசறி வைத்திருக்கும் கறியை போட்டு நன்றாக கிளறி அதில் இறைச்சி மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு உப்பு தேவையானால் போட்டு குக்கரை மூடி இறைச்சி நன்றாக வேகும்அளவு வெயிட் போட்டு வேகவிடவும்.
வேகும் நேரத்தில் காய்கறிகளை கத்திரிக்காய், உருளை, வாழைக்காய், மாங்காய் ஆகியவற்றை 2 அங்குல துண்டங்களாக நறுக்கி வைக்கவும்.
கேரட்டை வட்டமாக நறுக்கி வைக்கவும். புளியை கரைத்து வைக்கவும்.
இறைச்சி வெந்த பின்பு மாங்காய் தவிர்த்து அனைத்து காய்களையும் குழம்பில் போட்டு வேகவிடவும்.
முக்கால் பாகம் வெந்து வரும் போது அதில் மாங்காயை போடவும். பாதி வெந்திருக்கும் நிலையில் கரைத்து வைத்துள்ள புளி மற்றும் வேக வைத்த துவரம் பருப்பு, தேங்காய் விழுது ஆகியவற்றை குழம்பில் விடவும் மேலும் கறிவேப்பிலையை கொத்தாக போடவும்.
தீயை மிதமாக்கி கொதிக்கவிடவும். காய் மற்றும் புளி, பருப்பு சேர்த்தவுடன் உப்பு போதுமானதாக இருக்காது. மீண்டும் உப்பு சரி பார்த்து தேவையானால் சேர்க்கவும். குழம்பு கொதித்தவுடன் இறக்கவும்.


காய்களில் கிடைக்காதவற்றை விட்டுவிடலாம். இதற்கு அவசியம் கத்திரிக்காயும் உருளைக்கிழங்கும் தேவைப்படும். இதற்கு சௌ சௌ கூட சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Dear
Your Thalcha formula very good im trying but not good becuase of i dont know Samayal Preparation

அரைத்த தேங்காய் விழுது இல்லேன்னா தேங்காய் பால் யூஸ் பண்ணலாமா?

இன்பமே சூழ்க....எல்லோரும் வாழ்க!!

நீங்கள் கேட்ட எனது தாள்ச்சா செய் முறை இதோ!

நான் நேற்று தான் கேட்டேன் அதற்க்குள் குடுத்திட்டிங்க.மிக்க நன்றி.நீங்கள் சொன்னமாதிரி நான் ஏற்கனவே செய்திருக்கேன் ரொம்ப நல்லா இருந்தது.எனக்குத் தேவைப்படும் போது பார்த்து செய்லாம் என்றுதான் கேட்டேன் அதோடு மற்றவர்களூக்கும் பயன்படும்.

உங்கள் தால்ச்சா ரெசிப்பி நல்ல ரிச்சா இருக்கு.நான் சிம்பிள் லாதான் பண்ணுவேன்,இதையும் செய்து பார்க்கிறேன்,நிச்சயம் டேஸ்டாதான் இருக்கும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆமாம்,இது சுவைய்யில் அபாரமாக இருக்கும்!எங்கள் வீட்டிர்க்கு வந்த ஒரு உறவினர் களறி தாள்ச்சா போல் இருக்கிறது,செம்புசட்டி தாள்ச்சா போல் இருக்கிறது என்று ஒரு முறை கூறினார்.நீங்களும் செய்து பாருங்கள்!உங்கள் பின்னோட்டத்திர்க்கு மிக்க நன்றி!

இந்த தாள்சாவை 3வது முறை செய்துவிட்டேன்.எங்களிருவருக்கும் ரொம்ப பிடித்ததாகிவிட்டது.சூப்பரான குறிப்பு,நன்றி ரசியாக்கா!!

உங்களுக்காகதான் இந்த குறிப்பயே குடுத்தேன்,ஏற்க்கனவே உங்கள் பாராட்டு போனில் கிடைத்தாலும் இங்கு பின்னூட்டம் பார்க்க சந்தோஷமா இருக்கு!ரொம்ப நன்றிமா!!