தேதி: January 16, 2009
பரிமாறும் அளவு: 10 தோசைகள்.
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கோதுமை மாவு - 2 கப்,
அரிசி மாவு - ஒரு கை,
சர்க்கரை - 1 தேக்கரண்டி,
சீரகம் -1/2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.
எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து தண்ணீர் சேர்த்து ரொம்ப தண்ணியாகவோ, திக்காகவோ இல்லாமல், கட்டியின்றி கரைக்கவும்.
தோசைக்கல்லை காய வைத்து, மாவை ஊற்றி, மூடி வைத்து, திருப்பிப் போட்டு, சுட்டு எடுக்கவும்.
தேங்காய் சட்னி, வெங்காய சட்னியுடன் சுவையாக இருக்கும்.