ஏன் பிராமணர்களுக்கு என்று ஒரு தனிப்பிரிவு

தமிழகத்தில் பல இனங்கள் இருக்கையில் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு பிராமணர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்கள் உணவுகளுக்கு என்று ஒரு தனிப்பிரிவு கொடுத்தது எதற்காக?

உண்மைதான். தமிழகத்தில் பல்வேறு இனங்கள் இருந்தாலும், உணவில் தங்களுக்கென்று ஒரு தனித்த பழக்கத்தை கடைப்பிடிக்கும் மற்ற இனங்களைப் பற்றி எங்களுக்குச் சரிவரத் தெரியவில்லை. அப்படி தெரியவரும் பட்சத்தில், கண்டிப்பாய் அவ்வினத்தினருக்கென ஒரு சிறப்புப் பிரிவு கண்டிப்பாய் கொண்டு வருவோம்.

<b>எங்களது நோக்கம் இனம் அல்ல. உணவு வகைகள்தான். </b>

இஸ்லாமிய உணவுகள், பிராமண உணவுகள் எல்லாம் தனித்துவம் பெற்று இருப்பதால் அவற்றிற்கென தனிப்பிரிவு கொடுத்துள்ளோம். வேறு எவையேனும் இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தவும். முக்கியமான நிபந்தனை - அந்தப் பிரிவின் கீழ் நிறைய உணவு வகைகள் இருக்க வேண்டும்.

செட்டியார்கள் அதிகம் வசிக்கும் காரைக்குடியில் அவர்கள் தயாரிக்கும் உணவு தனித்துவம் வாய்ந்தது. அவை செட்டிநாடு உணவு என்று ஊரை மையப்படுத்தி அழைக்கப்படுகின்றது. அதே போல்தான் கொங்கு உணவும். இவைகளுக்கு எனத் தனிப்பிரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. நமது வழக்கத்தில் உள்ள பிரிவுகளைக் கொண்டு, உணவை வகைப்படுத்தியுள்ளோம். இதில் வேறு எந்த உள்நோக்கும் இல்லை.

Admin-அன்பரே,

எனக்கும் இந்த சிறப்பு பிரிவை நீங்களாகவே மூடி விடுதல் நல்லதாக படுகிறது.
தனித்துவம் பொருந்திய மற்ற சமூகங்களை வேண்டுமானால் முன் வையுங்கள். தமிழகத்தை பொருத்தவரையில் Out of sight, Out of mind என இருப்பதே இந்த பிரிவுக்கு நன்மை. சினிமாவில் தான் இந்த தனித்துவத்தை இன்னமும் கைவிடாமல் நெளியவைக்கிறார்கள் என்றால் இணையத்திலுமா ? வம்பை விலை கொடுத்து வாங்குவதை போன்ற ஒரு முட்டாள்தனம் வேறு இல்லை.

நன்றி.

அட்மின் தவிர மிச்ச மெம்பர்களுக்கு.... நம்ம அட்மின் கொஞ்சம் நமக்காக சுவை தொண்டு செய்து வருகிரார்... கொஞ்சம் நீங்களே யோசித்து பாருங்கள்... அப்பிடின்னா... நம்ம கிறிஸ்துவ சகோதரிகளும் சண்டைக்கு வரலாம் இல்லியா.... பாபு .... இப்பிடி எல்லாம் யோசிச்சு மண்டயை கசக்கி என்ன லாபம்.

வேணுமின்னா ஒரு குக்கிங் ப்ளாக் ஆரம்பித்து நீங்களே all recipes - bhramins

என்று போட்டுவிடுங்க.. இங்க அருமையான மிக திறமையான பலர் இருக்கிரார்கள்... இப்படி ஒரு த்ரெட் போட்டு யாரையும் மனசு வருத்தபட வைக்காதீங்க....

How come Babu you are not appriciating them instead create such a thread.

Please value and respect each other.

PS: My personal opinion.

PS2: So far I was thinking babu was our admin...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

கருத்துக்கு மிக்க நன்றி. சில விசயங்களை தெளிவுறுத்த விரும்புகின்றேன்.

மேலே உள்ள பதிவு கொடுக்கப்பட்ட தேதியை பார்த்தீர்கள் என்றால் அது இரண்டு வருடத்திற்கு முன்பு கொடுக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியும். இந்த இரண்டு வருடத்தில் அது எந்த வம்புக்கும் விலை கொடுக்கவில்லை. :-)

அடுத்து, மன்றத்தில் ஒவ்வொரு பிரிவு தொடங்கும் போதும் அங்கு ஏதேனும் ஒரு த்ரெட் இருக்க வேண்டும் என்பதற்காக முதல் த்ரெட்டினை நானே கேள்வியும் பதிலும் கொடுத்து தொடங்கி வைத்தேன்.
இந்த பிரிவுக்கு மட்டுமல்ல. மன்றத்தில் உள்ள அனைத்து பிரிவிலும் முதல் த்ரெட்டை நானே தொடங்கியுள்ளேன்.

அங்கே தனித்துவம் என்று குறிப்பிட்டுள்ளது இனத்தை அல்ல. அவர்கள் உணவு தனித்துவம் நிறைந்தது என்று குறிப்பிட்டு இருக்கின்றேன். இங்கே சமூக தனித்துவத்தை பற்றி பேசவில்லை. அதனால் தங்கள் கவலையில் நியாயம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

Sorry again .. please remove my thread
konjam emotional aagitten..

innaiku naane enakku bulb kuduthukitten...

ithuku thaan oru velai mattum seyyanum endru sonnathu

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

என்ன சொல்ல வருகின்றீர்கள்? எனக்கு புரியவில்லை.

I thought some one created this kind of a thread
So i was very angry that they are trying to kill the spirit.. then i read your reply...

Now I understand...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நானும் புரிந்துகொண்டேன் :-)

அறுசுவையில் எனக்கு இரண்டு முகங்கள். ஒன்று அட்மின் - தள நிர்வாகி, பாபு - சாதாரண உறுப்பினர்

உங்களில் ஒருவராக உங்கள் அனைவருடன் மன்றத்தில் உரையாட, விவாதிக்க, பாபு என்று எனது பெயரிலான ஐடியை பயன்படுத்துகின்றேன். தளம் சம்பந்தமான பதிவுகளுக்கு அட்மின் என்ற ஐடியை பயன்படுத்துகின்றேன். இது பெரும்பாலான உறுப்பினர்களுக்கு தெரியும்.

மேலே உள்ள கேள்வி யார் மனதிலாவது வரலாம் என்ற எண்ணத்தில்தான் நானே அந்த கேள்வியை எழுப்பி அதற்கு பதிலும் கொடுத்தேன். அது மன்றம் ஆரம்பித்த அன்று (இரண்டு வருடங்களுக்கு முன்பு) கொடுத்தது. இப்போது அது குறித்து விவாதம் தொடங்கியிருப்பது சுவாரஸ்யமாக இருக்கின்றது. :-)

இது என்ன வாள பள கதையா இருக்கு....

இந்த வெப் உலகத்தில் கூட இப்பிடி கேள்வி கேக்குறாங்களா??

எனக்கு நானே பல்பு கொடுத்த வெளிச்சத்தில்
--இலா

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அட்மின்-நண்பரே,

நீங்கள் கூறுவதற்கு முன்னே பதிவு கொடுக்கப்பட்ட தேதியை பார்த்தேன். 2 - ஆண்டுகளாக யாரும் பிரச்சினை எழுப்பவில்லை என்பதை அமைதிக்கான அறிகுறியாக எடுத்துக்கொள்ள என்னால் முடியவில்லை. முன்னர் Unicode - மூலம் தேடுதல் அவ்வளவு எளிதாக இல்லை. இப்போது வெகு எளிது. நிச்சயம் பல 'தேடுதல்களில்' மாட்டும்.

எது எப்படியோ, இது பிராமண/ பிராமணீய எதிர்பாளர்களுக்கு ஒரு வசதியை ஏற்படுத்த தான் போகிறது. இன்றளவும் தனித்துவத்தை என்னமோ தமிழ் பிராமணர்கள் மிக உற்சாகத்துடன் தாங்கி பிடிப்பதை போன்ற ஒரு எண்ணத்தையும், தமிழ்-உணவு எனும் identity அவர்களுக்கு திருப்தி அளிக்காமல் ஒரு Sub-folder உண்டு செய்து அதனுள் உழல்கின்றனர் என்ற தோற்றத்தையும் ஏற்படுத்தும். யாரோ ஒருவர் வத்த-கொழம்பை பற்றி கேட்க, மற்றுமொருவர் பதில் சொல்ல, கொதிக்க போவது குழம்பு மட்டுமா என இணைய references தெரிவிககும்.

இதைப்பற்றி மேலும் எழுதி உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

நன்றி.

மேலும் சில பதிவுகள்