முட்டை பீன்ஸ் பொரியல்

தேதி: January 18, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முட்டை - 3
பீன்ஸ் - 250 கிராம்
நெய் - 50 கிராம்
வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 4
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு


 

பீன்ஸை பொடியாக நறுக்கவும்.
பீன்ஸை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அவித்து எடுக்கவும்.
வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கவும்.
பீன்ஸ் ஆறியதும் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு மஞ்சள் சேர்த்து கலந்து வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்பு முட்டை கலந்த பீன்ஸ் கலவையை கொட்டி முட்டை வேகும் வரை கிளறவும்.
கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கவும்.


இது சோற்றுக்கு மிகவும் சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

பீன்ஸ் பொரியல் - எக் சேர்த்து ... நல்ல ஐடியா... நன்றாக இருந்தது...நன்றி

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

சந்தனா, நீங்கள் முட்டை பீன்ஸ் பொரியல் செய்து பின்னூட்டம் அனுப்பியதற்கு மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"