தக்காளி சட்னி

தேதி: January 18, 2009

பரிமாறும் அளவு: 5 பேருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

தக்காளி - 5 அல்லது 6
தேங்காய் - 1 மூடி
சிவப்பு மிளகாய் - 7
பொட்டுக் கடலை - 2 ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
பெரிய வெங்காயம் - 2
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
தாளிக்க :
நல்லெண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு


 

பெரிய வெங்காயத்தை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தேங்காய், சிவப்பு மிளகாய், உப்பு, பொட்டுக் கடலை, எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு, மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து,அரிந்து வைத்துள்ள பெரிய வெங்காயத்தை அதில் போட்டு, நன்றாக வதக்கவும்.
அரைத்து வைத்துள்ள சட்னியை கரைத்து, அதில் ஊற்றவும்.
அரைத்து வைத்துள்ள தக்காளியையும் அதில் ஊற்றி, நன்றாகக் கொதிக்க விடவும்.
கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாகக்கிள்ளி, மேலே தூவி இறக்கவும்.


இட்லி, தோசைக்கு பொருத்தமான தக்காளி சட்னி தயார்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இதுவரை இந்த முறையில் செய்தது இல்லை. சூபபர் டேஸ்ட், சப்பாத்திக்குதான் இதை செய்தேன். நன்றாக இருந்தது

மிகவும் நன்றி.

மனத்திற்கும், பண்புக்கும் நடக்கும் போட்டியில் குணத்தில் மனிதர்கள் குறைந்தோரகின்றனர்.

அன்பு சகோதரன்

பி.கு: தங்களின் டிப்ஸ்களுக்கும் மிகவும் நன்றி.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

மதிப்பிற்குரிய திரு.ஹைஷ்

பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி.

சட்னியில் சிறிது இஞ்சி விழுது சேர்த்தால் சுவை கூடும்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி