ஈஸி தக்காளி சட்னி

தேதி: January 18, 2009

பரிமாறும் அளவு: 2

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 1 பல்
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - தாளிக்க
கறிவேப்பில்லை - 2 இலை
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப


 

முதலில் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு போட்டு தாளிக்கவும்.
அதன் பின் அதில் உளுத்தம் பருப்பினை சேர்த்து வறுக்கவும்
பிறகு பூண்டினை நசுக்கி அதில் போட்டு கறிவேப்பில்லையுடன் சேர்த்து வதக்கவும்.
கடைசியில் அரைத்த தக்காளி விழுதுடன் உப்பு சேர்த்து நன்றாக கிளறி சுமார் 5 நிமிடம் தட்டு போட்டு மூடி வேகவிடவும்.
இப்பொழுது சுவையான தக்காளி சட்னி ரெடி.
இதனை இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்


மேலும் சில குறிப்புகள்