வெஜிடபிள் வெள்ளை குருமா

தேதி: January 18, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

காரட் - 100 கிராம்
உருளைகிழங்கு - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தேங்காய் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 5
எலுமிச்சை பழம் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
பொடிக்க:
பட்டை - 1
கிராம்பு -2
ஏலக்காய் - 1


 

முதலில் காரட், பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கினை ஒரே அளவாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயத்தினை வெட்டி வைக்கவும்.பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு பொடிக்கவும்.
தேங்காய் மற்றும் பச்சை மிளகாயினை சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் காய்ந்ததும் வெங்காயத்தினை போட்டு வதக்கவும்.
பின் இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து வதக்கவும்.
அதன் பின் நறுக்கி வைத்துள்ள காரட், பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கினை சேர்த்து நன்றாக 3 -5 நிமிடம் வதக்கவும்.
பொடித்து வைத்துள்ள பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காயினை இதில் இப்பொழுது சேர்க்கவும்.
அதன் பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் பச்சை மிளகாய் விழுதினை சிறிது தண்ணீர் சேர்த்து இதில் ஊற்றவும்.
உப்பு சேர்த்து கலக்கி நன்றாக வேகவிடவும்.
கடைசியில் கொத்தமல்லி தூவவும்.
பரிமாறும் பொழுது எலுமிச்சை சாறினை இதில் பிழியவும்.( புளிப்புக்கு தக்காளி சேர்க்காததால் )
இப்பொழுது சுவையான வெள்ளை குருமா ரெடி.


இதில் காரத்திற்கு பச்சை மிளகாய் மட்டும் தான் சேர்க்கின்றோம். அதனால் வெள்ளையாக இருக்கும். வெள்ளையாக இருப்பதால் இதில் சேர்க்கும் காய்களின் நிறம் நன்றாக இருக்கும். அதனால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹலோ கீதா ஆச்சல்,
இந்த வெஜிடபிள் வெள்ளை குருமா செய்தேன். ரொம்ப நன்றாக இருந்தது. என்னிடம் தக்காளி எல்லாம் தீர்ந்துவிட்ட நிலையில் (வெளியே போகலாமென்றால், ஸ்னோ!) இந்த குருமா ரொம்ப கை கொடுத்தது. குறிப்புக்கு நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மிகவும் சந்தோசம் பா….ஆமாம் நானும் இப்படி தான் வெங்காயம், தக்காளி இல்லாத நேரத்தில் இப்படி செய்வேன்…(மிக்ஸ்டு வெஜிடேபுள் எப்பொழுதும் ஒரு பக்கட் பிரிஜில் இருப்பதால்…) எனக்கு இந்த குருமா எப்பொழுதும் கை கொடுக்கும்…
பின்னுடன் அனுப்பியதற்கு மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

ஹாய் கீதா ஆச்சல் இன்று உங்கள் குறிப்பில் இருந்தது வெஜிடபிள் வெள்ளை குருமா இதை நான் இடியாப்பத்துக்கு செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது.மிக்க நன்றி .

என்றும் அன்புடன்,
மைதிலி.

Mb

மிகவும் நன்றி மைதிலி.
சூப்பர் காம்பினேஷன் தான்..போங்க…ஆசையை எற்படுத்துகின்றிங்க…..செய்துவிடவேண்டியது தான்…
அன்புடன்,
கீதா ஆச்சல்

தக்காளியில்லாத ஈஸியான சூப்பர் குருமா.வெங்காயம்+தக்காளி கட் பண்ண சோம்பலா இருந்ததால் உங்க குறிப்பில் ஏதாவது இருக்கான்னு தேடிப்பார்த்ததில் கிடைத்தது.நன்றாக இருந்தது கீதா.

அரசி மற்றும் மேனகா,
மிகவும் நன்றி.
பின்னுட்டம் அனுப்பி என்னை மேலும் ஊகவிப்பதற்கு நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

நானும் இந்த குருமா செய்து பார்த்தேன். நன்றாக வந்தது

AKKAA VEGETABLE WHITE KURUMA ROMBA SUPERB. THANKS AKKAA