கொள்ளு குழம்பு

தேதி: January 19, 2009

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

கொள்ளு - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
கறிவேப்பில்லை - 3 இலை
கொத்தமல்லி - சிறிதளவு
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - தாளிக்க
சோம்பு - 1 தேக்கரண்டி


 

முதலில் கொள்ளினை 3 - 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
வெங்காயம், தக்காளியை அரிந்து கொள்ளவும். புளியை கரைத்து வைக்கவும்.
ஊற வைத்த கொள்ளினை வேகவைத்து கொள்ளவும்.
பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த்தும் கடுகு போட்டு தாளித்து பின் அதில் சோம்பினை போடவும்.
பிறகு வெங்காயம் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
அதன் பின் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, வேக வைத்த கொள்ளு மற்றும் கரைத்து வைத்துள்ள புளியினை சேர்த்து நன்றாக 15 - 20 நிமிடம் வேகவிடவும்.
கடைசியில் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
இப்பொழுது சுவையான சத்தான கொள்ளு குழம்பு ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

கீதா நான் நலமாக இருக்கிறேன். நீங்கள் நலமா?
உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எனது கேக்கை செய்து பாருங்கள்.
இது தான் முதல் முறை கொள்ளில் குழம்பு சமைத்தது
நன்றாக இருந்தது.எப்படியிருக்குமோ தெரியாது என்று நினைத்தேன்,மிகவும் நன்றாக இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்துள்ளது.இனி அடிக்கடி இக் குழம்புதான் சமைப்பேன்.மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

மிகவும் நன்றி வத்சலா மேடம்,
முதல் முறையாக செய்றிங்களா..மிகவும் மகிழ்ச்சி..அதிலும் இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும்..
எங்கள் வீட்டிலும் இரண்டு வாரத்திற்கு ஒரு முறையாவது இதனை செய்து விடுவேன்..குழந்தைகு கொடுக்கும் பொழுது மட்டும் சிறிது நெய் சேர்த்து கொடுப்பேன்..அவளும் விரும்பி சாப்பிடுவாள்..
உடலிற்கு மிகவும் நல்லது..உடல் எடையினை குறைக்க விரும்புபவர்கள் கொள்ளு சாப்பிட குறையும்.
பின்னுட்டம் அனுப்பியதற்கு மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்