சமைத்து அசத்தலாம் - 6, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!

அன்புத் தோழிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி 5, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல் இது பகுதி -6 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால் இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும்.உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை தளிகாவினுடையதையும்(177), சன்ரவியினுடையதையும்(29) சேர்த்துச் செய்யப்போகிறோம். (இதற்கான விளக்கம் தேவையெனில், தயவுசெய்து பகுதி-5 இன் கடைசிப் பதிவுகளைப் பாருங்கள்),முடிந்தவரை இருவரது குறிப்புக்களிலிருந்தும் தெரிவு செய்து செய்யுங்கள். வரும் செவ்வாய்க்கிழமை (27/01) முடிவடையும். புதன்கிழமை(28/01), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

நன்றி,
"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால் எதையும் சாதிக்கலாம்"

எம்மோடு இணைந்து குறிப்புக்கள் செய்பவர்களுக்கும், எம்மை ஊக்குவித்து வாழ்த்துபவர்களுக்கும் மிக்க நன்றி.

நேரத்திற்கு கணக்கெடுத்து, சரியான நேரத்துக்கு பட்டியலை வெளியிட்டு எல்லோரையும் அசத்தும் ரேணுகாவிற்கும் மிக்க நன்றி.

வனிதா, வத்சலா, துஷியந்தி, இலா, ஸ்ரீ, மனோகரி அக்கா, அரசி, ஆசியா, வின்னி, மாலி, ரேணுகா, இமா, சுரேஜினி, ரஸியா, ஜலீலா, விஜிசத்யா, மேனகா, ஜூலைகா, கீதா ஆச்சல், மனோ அக்கா, சீதா அக்கா, பர்வீன் பானு, .. அனைவருக்கும் மிக்க நன்றி. கலந்துகொள்ள முடியாமல் போனவர்கள், இம்முறை கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

மற்றும் , முடியுமானவர்கள் ஸ்டெப் பை ஸ்டெப் ஆகவோ அல்லது முடிவிலோ படமெடுத்து அட்மினுக்கு அனுப்பி வையுங்கள். ஸ்டெப் பை ஸ்டெப்பாக படமெடுக்க நினைப்பவர்கள், முன்கூட்டியே தெரிவித்துவிடுங்கள் எந்தக் குறிப்பிற்கு எடுக்கப் போகிறீங்கள் என்று.

இன்னுமொன்று, முடியுமானவர்கள் பின்னூட்டங்களை குறித்துவைத்து, புதிய தளத்திலே கொடுத்தால், குறிப்புக் கொடுத்தவர்களுக்கு சந்தோஷமாக இருக்கும். முடியவில்லையாயின் குறையில்லை இப்போதே பின்னூட்டங்களைக் கொடுத்துவிடுங்கள். நீங்கள் சமைத்துப்பார்த்து இங்கே வந்து சொல்வதுதான் முக்கியம்.

நாளை திங்கட்கிழமை(19/01) சமைக்கத் தொடங்குவோம்.... எல்லோரும் வாங்கோ....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஆரம்பித்துவிட்டேன் அதிரா.இன்று சப்பாத்திக்கு தால் தர்க்கா வுடன் ஆரம்பம்,நல்லாவந்தது,
இந்த முறை நிறைய எடுத்து வைத்திருக்கிறேன்,சமைத்தால் சமத்து,
என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அதிரா&ரேணுகா
நான் அருசுவையில் புதிதாக சேர்ந்துள்ளேன். என்னையும் இந்தபகுதியில் சேர்த்து கொள்வீர்களா?எனக்கும் இந்த பகுதியில் பங்கு கொள்ளஆசை.
செல்வி.

சவுதி செல்வி

அதிரா & ரேணு,
தயிர் சாதம், தேங்காய் மிளகாய்ப்பொடி, ரசம் செய்தேன். மூன்றும் நன்றாக இருந்தது.
ஹாய் செல்வி (ESMS),
அதிரா, ரேணு பதிலுக்குக் காத்திருக்காமல் சமையலை ஆரம்பியுங்கள். இதற்கெல்லாம் அனுமதி தேவையில்லை.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹாய் செல்வி,வாங்க உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி,எங்க கிட்ட கேக்காம சீக்கரம் ஒரு சமையல் முடிச்சுட்டு வாங்க,உங்கள பத்தி அப்பப்ப சொல்லுங்க,

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

இமா ஆரம்பிச்சாச்சா?இப்ப தான் கதீஜா சமையல் அசத்த போவது யாரில் உங்களை நிறைய சமைக்க சொல்லிவிட்டு வந்தேன் அதுக்குள் வந்தாச்சா.இன்னும் நிறையா செய்யூங்கோ

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

(சாரிங்க இந்த பகுதியில் நுழைந்ததுற்கு)
செல்வி! மெயில் அனுப்பினேன்.கிடைத்ததா? என் ஐடி செந்தமிழ் அக்காவிடம் இருக்கு. வாங்கிக்குங்க!

ஹாய் கீதா இந்த பகுதியில் யார் வேற பதிவு போட்டாலும் அவங்களுக்கு பனிஷ்மெண்ட் உண்டு,கட்டாயம் நீங்க ரெண்டு குறிப்பு செய்யனும்,அதான் பனிஸ்மெண்ட்,போய் சமத்தா சமைச்சுட்டு வாங்கோ

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

(அச்சச்சோ! தெரியாம மாட்டிக்கிட்டேனே!)
கண்டிப்பாக செய்திட்டு வந்து சொல்றேன்

ஹாய் ரேணு,
முதல் பதிவை மாற்ற முடியவில்லை. தயிர் சாதம் & ரசம் தளிகாவின் குறிப்பு. தேங்காய் மிளகாய்ப் பொடி சந்தியாவினது குறிப்பு. இரண்டு தரம் எண்ணிவிடாதீர்கள். வரவேற்பெல்லாம் பலமாயிருக்கிறது. என்னைத் தெரியாதா? ஆரம்பத்தில் அப்படித்தான். பிறகு ...... இன்னும் உங்கள் பதிவு பார்க்கவில்லை.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்