தேங்காய் சாக்லேட் லட்டு

தேதி: January 19, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. துருவிய சாக்லேட் - 1 கப்
2. கன்டென்ஸ்டு மில்க் - 2 மேஜைக்கரண்டி
3. துருவிய தேங்காய் - 2 1/2 கப்
4. வால்னட் (பொடித்தது) - 1/4 கப்
5. பாதாம் (பொடித்தது) - 1/2 கப்


 

சாக்லேட்'ஐ மைக்ரோவேவில் "ஹை"யில் 1 நிமிடம் வைத்து உருக்கவும்.
பின் இதை எடுத்து கரண்டியால் நன்றாக அடித்து ஸ்மூத் ஆக்கவும்.
ஒரு பாத்திரத்தில் 2 கப் தேங்காய் துருவல், வால்னட் பொடி, பாதாம் பொடி கலந்து கொள்ளவும்.
இத்துடன் அடித்த சாக்லேட், கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாக கலக்கவும்.
இதை உருண்டைகளாக பிடித்து, மீதம் இருக்கும் தேங்காய் துருவலில் பிரட்டி வைக்கவும்.


மைக்ரோவேவ் இல்லாதவர்கள், பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதன் மேல் (தண்ணீரில் படாதபடி) ஒரு பாத்திரம் வைத்து அதில் சாக்லேட் போட்டு உருக்கலாம். எதில் வைத்து உருக்கினாலும் அடிக்கடி பார்த்து கிளருவது நல்லது. உருக்கும்போது தண்ணீர் சேர்க்க கூடாது. உருண்டை பிடிக்க வரவில்லை என்றால், இன்னும் சிறிது கன்டென்ஸ்டு மில்க் சேர்க்கவும்.

மேலும் சில குறிப்புகள்