எளிமையான முறையில் பாட் பெயிண்டிங் செய்வது எப்படி?

தேதி: January 19, 2009

4
Average: 3.3 (3 votes)

இந்த அழகிய பாட் பெயிண்டிங்கை செய்து காட்டியவர், செல்வி. சிந்து அவர்கள். இவர் கைவினைப் பொருட்கள் செய்வதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகின்றார்.

 

பாட்
பேர்ல் பேப்ரிக் கலர் (pearl fabric colours) (6)
கருப்பு நிற பெயிண்ட்
கில்டர்ஸ் (glitters) வெள்ளை
ஜம்கி
கற்கள் (stones)
ப்ரஷ் (No.3)

 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முதலில் கருப்பு நிற கலரைக் கொண்டு பாட் முழுவதும் பெயிண்ட் செய்து காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கருப்பு நிற பெயிண்ட் காய்ந்ததும் அதில் வெள்ளை நிற பென்சிலை வைத்து விரும்பிய வடிவில் டிசைன்கள் வரைந்துக் கொள்ளவும். டிசைன் பானையின் அளவை பொறுத்து வரைந்துக் கொள்ளவும்.
பெயிண்டுடன் தண்ணீர் கலக்கக் கூடாது. ப்ரஷை கழுவி விட்டு துணியால் துடைத்துக் கொண்டு பானையில் வரைந்திருக்கும் பூவில் விரும்பிய நிற பேப்ரிக் பெயிண்டைக் கொடுக்கவும்.
முதலில் பூவிலிருந்து ஆரம்பித்து பிறகு இலை, காம்பு ஆகியவற்றிற்கு பெயிண்ட் செய்யவும்.
மற்றொரு நிற பெயிண்ட் கொடுக்கும் போது ப்ரஷை கழுவி விட்டு துணியால் துடைத்துக் கொள்ளவும்.
ஒவ்வொரு பூவின் நடுவிலும் வெள்ளை நிற கிலிட்டர்ஸ் வைத்து அலங்கரிக்கவும்.
கிலிட்டர்ஸ் வைத்த நடுப்பகுதியில் கற்களை வைத்து பதிக்கவும். கற்கள் நன்கு பதிய ப்ரஷின் பின்பகுதியை வைத்து அழுத்தி விடவும்.
ஒவ்வொரு பூவிலும் ஓரத்தில் கில்டர்ஸ் வைத்து அவுட் லைன் வரைந்துக் கொள்ளவும். காம்பு பகுதியில் பச்சை நிற கிலிட்டர்ஸ் வைத்து மேலே அலங்கரிக்கவும்.
அழகிய பாட் பெயிண்டிங் தயார். விரும்பிய டிசைன்களில் பாட் பெயிண்டிங் செய்து கொள்ளலாம். இது போன்ற எளிதில் செய்யக்கூடிய பாட் பெயிண்ட் பலவற்றை குறைந்த செலவில் சில மணி நேரத்தில் செய்து வீட்டை அலங்கரிக்கலாம்

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஹாய் சிந்து,
வெகு அழகாக இருக்கிறது.;-)
இமா

‍- இமா க்றிஸ்

simple n humble..arumai

சிந்து,
பாட் பெயின்டிங் வெகு அழகாக இருக்கிறது.
செபா.

Hai sindhu,ur pot painting very nice.Superb,Keep it up.

from,veena.

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta