வெங்காயம் கார சட்னி

தேதி: January 19, 2009

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

சின்ன வெங்காயம் - 1/4 கிலோ
காய்ந்த மிளகாய் - 10
பூண்டு - 2 பல்
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி + 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
புளி - சிறிதளவு
கடுகு - 1 தேக்கரண்டி
கருவேப்பில்லை - 5 இலை
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி


 

முதலில் வெங்காயத்தினை தோல் உரித்து கொள்ளவும்.
பின் ஒரு கடாயில் காய்ந்த மிளகாயினை போட்டு வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.
பின அதே கடாயில் 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி வெங்காயத்தினை போட்டு வதக்கவும்.
பிறகு வெங்காயத்தினை சிறிது நேரம் ஆறவிடவும்.
அதன் பின் வெங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு, புளி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
ஒர் பனில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்த்தும் கடுகு சேர்த்து தாளித்து பின் அதில் கருவேப்பில்லை மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்.
இதனை அரைத்து வைத்துள்ள வெங்காயத்துடன் சேர்த்து கிளறவும்.
இப்பொழுது சுவையான வெங்காயம் கார சட்னி ரெடி.


இதனை 2 - 3 நாட்கள் கூட வைத்து சாப்பிடலாம். ஆனால் தாளிக்கும் பொழுது 1 மேசைக்கரண்டி எண்ணெய் கூடுதலாக சேர்க்க வேண்டும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

தோசைக்கு நல்ல காரசாரமா சூப்பர் கீதா.

மிகவும் நன்றி மேனகா.
எனக்கும் இந்த சட்னியை இட்லியை விட தோசையுடன் சாப்பிட தான் மிகவும் பிடிக்கும்..
அன்புடன்,
கீதா ஆச்சல்

ம்ம்ம்ம் நல்லா இருக்குங்க கீதா,அட அட என்ன ருசி!!!நானும் தோசைக்கு தான் செய்தேன்..ரொம்ப தேங்ஸ் பா..

தாமரை,
மிகவும் நன்றி பா. மகன் எப்படி இருக்காங்க?
ஆமாம் தோசைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.
அடடா..எனக்கும் இப்பொழுது உடனே சாப்பிட தோன்றுகின்றதே…நாளைக்கு செய்ய வேண்டியது தான்…
அன்புடன்,
கீதா ஆச்சல்

முதல்ல மன்னிச்சிருங்க..நீங்க கால் பண்ணும் போது இவன் ஒரே அழுகை...அவன் எழுந்ததும் அவங்க அப்பா ஆபிஸ் கிளம்பிட்டு இருந்தார்னு..அதான் பேச முடியல..செல்ஃபோன்ல இருந்த நம்பர்க்கு கால் பண்ணலாமானும் தெரியல..திரும்ப உங்கள எங்க பிடிக்கனும் தெரியல..முடிஞ்சா கால் பண்ணுங்க,,நான் மேனுகிட்ட உங்க நம்பர் இருக்கானு கேட்டுக்கிறேன் பா..

ரொம்ப தேங்ஸ்பா கால் பண்ணினதுக்கு..அப்புறம் 2வது தடவ மன்னிச்சிருங்க(பாபு அண்ணா நீங்களும் மன்னிச்சிருங்க) உங்க குறிப்பு பகுதிய அரட்டையா மாத்தினதுக்கு..நீங்க இதுல பார்ப்பீங்கனு தான் இங்க பதிவு போடுறேன் பா..