செட்டிநாடு பெப்பர் சிக்கன்

தேதி: January 20, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (28 votes)

 

சிக்கன் - முக்கால் கிலோ
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தயிர் - ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4(வறுத்து அரைக்க) + 4 (தாளிக்க)
மிளகு - 1/2 தேக்கரண்டி(தாளிக்க) + 1 1/2 தேக்கரண்டி (வறுத்து அரைக்க)
முழு மல்லி - 3 தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 10 பல் (சிறியது தாளிக்க)
கறிவேப்பிலை - 3 இணுக்கு


 

சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடிகட்டிக் கொள்ளவும்.
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளைப் போட்டு மஞ்சள் தூள், உப்பு, தயிர், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிரட்டி ஊற வைக்கவும்.
வாணலியில் 1 /12 தேக்கரண்டி மிளகு, சீரகம், 4 மிளகாய் வற்றல், மல்லி ஆகியவற்றை போட்டு வறுக்கவும்.
வறுத்த பொருட்களை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை போடவும்.
சிக்கனை ஒரு முறை நன்கு கிளறி விட்டு மூடி வைத்து வேக விடவும்.
சிக்கன் நன்கு வெந்ததும் வறுத்து அரைத்த பொடியை போட்டு பிரட்டி விட்டு சிம்மில் வைக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளிக்கவும்.
மற்றொரு சிறிய கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அரைத் தேக்கரண்டி மிளகு, பூண்டு, 4 மிளகாய் வற்றல், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
தாளித்தவற்றை சிக்கனுடன் சேர்த்து நன்கு ஒன்றாகும்படி கிளறி விடவும். இது சிக்கனுக்கு ருசியையும், மணத்தையும், பார்ப்பதற்கு அழகையும் தரும்.
சுவையான, மணம் நிறைந்த செட்டிநாடு பெப்பர் சிக்கன் தயார். இந்த குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக <b> திருமதி. ஆசியா உமர் </b> அவர்கள் விளக்கப்படங்களுடன் செய்து காட்டியுள்ளார். இதனை செய்து பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தக்காளி, வெங்காயம் சேர்க்காமல் செய்த செட்டிநாடு பெப்பர் சிக்கன். பிரியாணி, புலாவ் வகைகள், கட்டு சாதம், சாம்பார், தயிர் சாதத்திற்கு பொருத்தமாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆசியா அக்கா இந்த சிக்கன் நல்லா இருக்கும்,அட்மின் சீக்கரம் போடுவார் செய்து பாருங்கன்னு சொன்னீங்க,இங்க வந்து பார்த்தா உங்க குறிப்பு இருக்கு,நீங்க சொன்னது அட்மின் அண்ணாவுக்கு கேட்டுவிட்டது போலும்

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

வாவ்... யம்மி..யம்மி.. நாக்கில் எச்சில் ஊற வைத்து விட்டீர்கள் போங்கள். இந்த வாரம் செய்து சொல்கிறேன் எப்படி இருந்தது என்று (புதிய தளத்தில்)

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

அனுப்பி நாட்கள் பலவாகுதேன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்,அப்பாடா, வெளியிட்டதில் என் பிள்ளைகளுக்கு மிக்க மகிழ்ச்சி.செய்து பாருங்க,குவிக்கா செய்து விடலாம்.அபுதாபி கெட்டுகெதர் ஒரு தனி த்ரெட் ஆரம்பித்து இருக்கலாம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நானும் நினைத்தேன் அக்கா அபுதாபி கெட் டூ கெதர் தனியா தொடங்கி போடலாம் என்று தளிகா போட அங்க அப்படியே போட்டுவிட்டேன்,நீங்கள் ஒன்னு புதுசா ஆரம்பிங்க அங்க திருப்பீ சொல்லலாம்,

நாளைக்கு செய்து சொல்றேன்,இது சப்பாத்திக்கு மேட்ச் ஆகுமா??சப்பாத்திக்கு ஓ.கே என்றால் இன்றே செய்வேன்,

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஆமாம் நானும் முகப்பில் படத்தை பார்த்ததும் அது ஆசியாக்க குறிப்பு என்று தெரிந்து விட்டது..பஃபல்லோ விங்ஸ் போலவே இருக்கு.

இந்த பஃப்லோ ரிங்க்ஸ் உன் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்டதா. ஆசியா அக்காவோட பேவரைட் உனக்கு பேவரைட் ஆயிடிச்சா. கெட் டூ கெதரை நினைக்கும் போதெல்லாம் இதுவும் நினைக்கு வரும்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

சரியா சொன்னீங்க தனிஷா,பஃப்லோ விங்ஸ் என்றாலே இனி இந்த நாள் தான் ஞாபகம் வரும்,சொல்லி வைத்தாற் போல் இன்று ஆசியா அக்கா குறிப்பு,இன்னும் இன்று எத்தனை சர்ப்ரைஸ்ஸ் இருக்கோ தெரியல

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

Hello madem,

Lovely recipe with clear pictures.. Will this be suitable for chappathi? and also please tell me cooking time of chicken... Iam going to try this tomorrow evening...

சப்பாத்திக்கு க்ரேவி இருந்தால் நல்ல இருக்கும்,இது கொஞ்சம் பிரட்டினாற்போல் இருக்கும்.சிக்கன் ஃப்ரை பதிலா நான் இது பண்ணுவேன்.லைட்டா தொட்டு சாப்பிட்டால் o.k.சிக்கன் குக் ஆக 10-15 நிமிடம் தான்,ஏற்கனவே தயிரில் ஊறி இருப்பதால் சீக்கிரம் வெந்து விடும்,சிறிய கோழியாக இருக்கனும்(800 gm).முரட்டு கோழி என்றால் லேட் ஆகும்,குக்கரில் வைத்தால் 2 விசில் தான்,நான் சிக்கனை குக்கரில் வைப்பதில்லை.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அய்யோ, செம சூப்பரா இருக்கு.
அருசுவைய பார்த்து மீன் ரெசிப்பி கொஞ்சம் ட்ரை பன்னலான்மு பார்த்தா, முடியல. ஏன்னா, சிக்கன் அயிட்டெமே வித விதமா வந்துகிட்டு இருக்கு. மேடம் ஃபிஷ் அயிட்டம் இது மாதிரி ஒன்னு கொடுப்பீங்களா!!!!!

indira

நிச்சயமாக தருவேன்,நல்ல ஆற்று மீனா தேடிட்டு இருக்கேன்,என்ன இந்திரா அக்காவை மேடம் ஆக்கிட்டே.வந்து பார்வைய்ட்டமைக்கு நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய்க்கா, இந்த ரெசிப்பி செய்து சாப்பிட்டாச்சு. வெரி சிம்பிள் அண்ட் டேஸ்டி. நன்றி

indira

இன்று ஆசியாவின் செட்டி நாடு பெப்பர் சிக்கனை மட்டனில் செய்தேன்

நல்ல இருந்தது.

ஜலீலா

Jaleelakamal

செய்து பின்னூட்டம் அனுப்பியமைக்கு மிக்க மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நலமா?

உங்க பெப்பர் சிக்கன் இன்று காலை செய்தேன் சுவை நன்றாக இருந்தது நன்றி

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

செய்து பின்னூட்டமும் அனுப்பியது கண்டு மிக்க மகிழ்ச்சி,மரியமும் அஷ்ஃபாக்கும் எப்படி இருக்கிறார்கள்.உங்களுக்கு பிள்ளைகளை கவனிப்பதிலேயே நேரம் போய் விடும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

super

எல்லாப் புகழும் இறைவனுக்கே

அன்புள்ள தோழிக்கு
உஙகள் குறிப்பை பார்த்த நாள்முதல் எங்கள் வீட்டில்
ஒவ்வொரு விடுமுறை நாளிலும் செட்டி நாடு பெப்பர் சிக்கன் தான் செய்வோம். நல்ல குறிப்புக்கு நன்றி.

"அன்பே சிவம்"
தேன்மொழி செந்தில்குமார்

akka apo unga v2ku vanthura vendiyathu than

ningal kodutha inta பெப்பர் சிக்கன் rusiyaga. vittiyasamaga irukkum endru ninaikindren. nan inta vaaram vidumuraiyil seiyya pohinder. nandri

love

super and delicious dish

Parkavea super ah iruku...

Romba taste aa irunthuchu..en pasanga semaiya saptanga.thanks.
Banu

ஹாய் உங்க பெப்பர் சிக்கன் இனறு செய்தேன். ரொம்ப சூப்பர்...

உன்னை போல பிறரையும் நேசி.