அபுதாபி கெட்டுகெதெர்

இனிதே முடிந்தது

பதிலளிஅபுதாபி கெட்டுகெதெர்
ஜனவரி 20, 2009 - 10:49am - வழங்கியவர் thalika

இன்று காலை ஆசியாக்கா மற்றும் தனிஷா சரி கிளம்புகிறோம் எனவே நானும் ரேனுவும் சென்று விட்டோம்..ஆஹா எல்லோரையும் பார்த்த சந்தோஷம் தாங்கலை..பேசி முடிக்காமல் பாதியோட டாடா சொல்லிட்டு வந்தோ,..காலை 10.30 மணிக்கு தொடங்கி 2 மணி வரை இருந்தோம்.செம்ம ஜாலியாக இருந்தது.
முதன் முறையாக மூவரையும் பார்க்கிறேன்...
ஆசியாக்கா -- நம்ப சீனியர்..கலகலன்னு பேச்சு ..ஒரு டீச்சர் உருவத்தை கற்பனை பன்னி வச்சிருந்தேன் ஆனால் அப்படியில்லை சிரிச்சிகிட்டே பேசுவாங்க..அவங்க தான் ஒவ்வொரு சப்ஜெக்டாக எடுத்து விட்டுகிட்டே இருந்தாங்க ஏன்னா கைல குழந்தை இல்லாம ஃப்ரீயா இருந்ததும் அவங்க தான்.
பின்ன தனிஷா வளவள ஆனா எதை எப்படி பேசிமுடிக்கன்னு தெரியாம திக்கு முக்காடி இதை பேசலாமா அதை பேசலாமன்னு பேச நேரம் பத்தாம ஒரு பெரிய சிரிப்போட நிறுத்துவாங்க..கூடவே அஃப்ரா குட்டி..சினுங்காம குறும்பு செய்யாம நல்லா அழகா விளையாடுது.என் பொண்ணு சமத்துங்கவும் அது ரொம்ப துள்ள ஆரம்பிச்சுடுச்சு அய்யோ இப்ப தானே சமத்துன்னேன் என் மானத்தை வாங்கரியேன்னு தனிஷா புலம்ப ஆரம்பிச்சாச்சு.
பின்ன வந்தது ரேனுகா..புது ஆளு போல இல்லாம பக்கத்து வீட்டு பொண்ணோ அல்லது ஸ்கூளில் நம்முடன் படித்த பக்கத்து பென்ச் பொண்ணு போன்ற முகம் அதிகமாக அலட்டாமல் உம்மென்றும் இல்லாமல் குழந்தை குரலில் அழகாய் தெளிவாய் பேசுவாங்க.
ரொம்ப நல்ல பொண்ணு ரேனுகா.பயல் கோகுல் ரொம்ப சம்த்து சமத்து என்று நான் கண்ணு வைத்து விட்டேன் போரப்ப ஐஸ் க்ரீம் வேனும்னு ஒரே ஆட்டம்...ரேனுவிடம் பிடித்தது குழந்தையிடம் பொறுமையாக விளக்கி எல்லாமே சொல்லிக் கொடுப்பது.என் கூடவே கடைசி வரை வந்து டேக்சி ஏற்ற் விட்டு தான் போனார்.
ஆசியாக்கா இளம் நீல சுடியில் ஒரு மேகத்தை போல இருந்தார்
தனிஷா கறுப்பு பர்தா போட்டு ஒரு டிபிகல் தமிஷ் முஸ்லிம் பொண்ணு தான்.ஒரே பரபரப்பா அதுக்கும் இதுக்கும் பாப்பாங்க தனிஷா எப்பவும்.
ரேனு வழக்கம் போல அமைதியா எல்லாரையும் பாத்துட்டு சிரிச்சுட்டு இருப்பாங்க.
பின்ன நான் தளிகா..ரொம்ப ரொம்ப சம்த்து..என் பொண்ணு அதை விட சமத்து.போய் வர வரை ஒரே பின் ட்ராப் சைலென்ஸ் மெயின்டெயின் பன்னின ஒரே ஆளுக நாங்க தான்

தளிகா,
ஜனவரி 20, 2009 - 11:03am - வழங்கியவர் Renuka

ஆஹா தளிகா வீட்டுக்குள் நுழைந்ததும் பதிவு போட்டாச்சா?நானும் வந்தவுடனே பார்த்தேன்,ஆசியாக்கா,தனிஷா யாராவது போட்டுருப்பாங்கன்னு காணாம்,பையனை தூங்க வைச்சுட்டு வரதுகுள்ள உங்க பதிவு..

பொண்ணு தூக்கம் கலையிலேயே,தூங்கிட்டுதானே இருக்கா.என் பையனுக்கு கவலை நீங்க போனதில,ஒரே புலம்பல் இப்பதான் நாளைக்கு வருவீங்கன்னு சொல்லி தூங்க வைத்தேன்

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

ப்ளு டிரெஸ்
ஜனவரி 20, 2009 - 11:07am - வழங்கியவர் Renuka

தளிகா எல்லாரும் ஒரே ப்ளு டிராஸா வந்தோமே அது சொல்ல மறுந்துட்டீங்க,எல்லாத்துக்கும் ஆச்சிரியமான ஒரு விஷயம் நாலு பேரும் ப்ளு கலர் ட்ரேஸ் என்ன ஒற்றுமை எங்களுக்குள்ள

என்றும் அன்புடன்
ரேணுகா

தளிகா அழகு பொண்ணு, உன் பொண்ணு உன்னை ஸ்டாண்டட்டீஸ் -ல் விட்டதை சொல்லலியே,நின்னுட்டு சாப்பிட்டதை,நின்னுட்டு பேசியதை,பயங்கிர குறும்பு தான்,தளிகா பத்தி நான் சொல்றேன்,மனிஷா கொய்ராலாவின் தங்கை என்று சொல்லலாம்.பொண்ணு தான் ரொம்ப படுத்தினாலும்,எப்படியோ சமாளிச்சிட்டாங்க.அவங்க வேலை உண்டு அவங்கன்னு இருக்காங்க.
ரேணு - ரொம்ப சமத்து.பையன் அதைவிட சமத்து.ரேணுவும் நானும் திருச்சியில் ஒரே ஸ்கூலில் படித்திருக்கிறோம்.வருட வித்தியாசம் ஒரு ஜெனரேஷன்.ஒரே கெமிஸ்ட்ரி டீச்சர். ரேணு -சின்னப்பொண்ணு.
தனிஷா- அறுசுவை கெட்டுகெதரில் பார்த்திருப்பீங்க.வெள்ளை மனசு.நம்ம எல்லோருக்கும் அவங்களை தெரியும்.நல்லா பேசுவாங்க.என்னை பற்றி நான் என்னத்தை சொல்ல,ஏதோ 0.k என்று மனதை தேத்திக்க வேண்டியதுதான்.
சாப்பிட்டது- pizza,buffalo wings,kfc,mecdonalds,nuggets,f
rench fries,pepsi,coleslaw,ஒரே பார்பிக்கியூ சாஸில் எல்லோரும் டிப் பண்ணி சாப்பிட்டோம்.என்ன ஒற்றுமை.அப்புறம்,ஆச்சரியம் ஆனால் உண்மை,எல்லோரும் நீலக்கலர் சுடிதார்.எப்படி எல்லோரும் ஒரே மாதிரி என்று தெரியலை,great people think alike- என்பது இதுதானோ!!
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
பதிலளி
food
ஜனவரி 20, 2009 - 11:27am - வழங்கியவர் thalika

உணவு நாம சும்மா வாயை திறந்தா ஊட்டி விடுவாங்க ஆசியாக்கா அவங்க அப்டி அண்ணபூரணி.
பஃபலோ விங்ஸ் வாங்கிட்டு வறேன்னு சொல்லி போகவும் ரேனு ஏதோ பஃபலோ தான் கொண்டு வர போராங்க நாம வேனான்டுர்லாம்னு இருக்க வந்தது சிக்கன் விங்ஸ்..நன் கூட பஃபலோக்கு ஏது ரக்கைன்னு நெனச்சேன்.
நல்ல செம்ம சாஃப்டா ஸ்பைச்யா இருந்தது..பின்ன நான் நகெட்ஸும் ஃப்ரென்ச் ப்ரயிசும் வாங்கினேன்.தனிஷா ஃப்ரயிட் சிக்கன் வாங்கிநாங்க.
ரேனு ஸ்டார் நகெட்ஸும் ஃப்ரென்ச் ஃப்ரயிசும்..சாப்புட்டு வயிறு நிறைந்தது ஆசியாக்காவின் பிட்சா ஃபஜிடாவும் விங்சும்.இன்னும் ரசிச்சு ருசிச்சு சாப்ட விடலயேன்னு கவலை..வழக்கம் போல் பொண்ணு படுத்திட்டா.
ஆம் எல்லோரும் நீல நிற சுடி.
மாற்று | பதிலளி
தளிகா & ரேணு (கெட் டூ கெதர்)
ஜனவரி 20, 2009 - 11:28am - வழங்கியவர் Thanisha

ஹாய் தளி வந்ததும் பதிவு போட்டு விட்டீர்களா. நானும், ஆசியாக்காவும் ஒரு பேக்கு பட்டானிடம் மாட்டி வீடு வந்து சேர்ந்தோம். மிஷினில் துணிய போட்டு விட்டு தூங்கி விட்டேன் அப்ராவுடன். இப்போதான் எழுந்து பார்த்தேன்.

மார்னிங் சந்திப்பு மறக்க முடியாது. எதிர்பாராத விதமா திடீர்னு கிளம்பியாச்சு. பேசி கொண்டே இருக்க ஆசை மக்கள்கள் விடவில்லை.

ஆசியா அக்கா எப்பவுமே ஒரு நல்ல அட்வைஸ்சர். ஒரு சுயநலமில்லாதவர், அவர்களுடைய பேச்சு ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். ரொம்ப இன்னஸண்டான முகம். எங்க எல்லோருடனும் நல்ல பேசிட்டு இருந்தாங்க. நல்ல திறமையான மனிஷி ஆனால் தனக்கு எதுவும் அதிகம் தெரியாது என்றுதான் சொல்லு வாங்க. (அலட்டல் இல்லாத அவங்க பெருந்தன்மை ரொம்ப பிடிச்சிருக்கு) நிறைய நல்ல விஷயங்களை அவங்க கிட்ட இருந்துதான் கத்துக்கனும்.

தளிகா ரொம்ப பியூட்டி. விவேக் பாஷையில் சொல்லனும்னா பாம்பே மனிஷாவையும், பூமிகாவையும் சேர்த்து பிசைந்த சிலைமாதிரி இருந்தாங்க. ரீமாகுட்டியும் அம்மாவைப் போல ரொம்ப அழகு. ரூபி ரொம்ப பேசவில்லை என்றாலும் எல்லோரும் பேசுரதை நல்ல அப்சர்வ் பண்ணிக் கொண்டு இருந்தார். ஆஹா தளிகா நீங்க ரொம்ப சமர்த்துதான் ஆனால் பின் ட்ராப் சைலன்ஸ் என்பது ஓவர்மா. எல்லோரும் பேசி முடிந்து, சாப்பிட்டோம் ரீமாகுட்டி கோபம் வந்துட்டு இப்பவே விளையாட போகனும் என்று பாவம் தளி மகளுக்காக நின்று கொண்டே சாப்பிட்ட்டார்.

ரேணு ரொம்ப சின்னப்பொண்ணு எங்க எல்லோரையும் விடவும். 12 த் முடித்தவுடன் மேரேஜ் பண்ணிட்டாங்களாம் அவங்க வீட்டில். ரொம்ப இன்னசண்ட். நல்ல பேசினாங்க.கோகுல் ரொம்ப க்யூட். ஆனால் அப்ராவுக்கும், கோகுலுக்கும் ஒத்து வரவில்லை. 2 பேருக்கும் ஒரே போராதான் இருந்தது.பையன் ஸ்கூல் பற்றீதான் அம்மாவுக்கு ரொம்ப கவலை.

குட்டிகள் மூன்றும் நல்ல விளையாடின பிரியமனமில்லாமல் நால்வரும் வந்தோம். இனி எல்லோருடன் கொண்டாடும் கெட் டூ கெதரை எதிர் பார்த்து கொண்டு இருக்கிறோம்.
பதிலளி
தனிஷா
ஜனவரி 20, 2009 - 11:35am - வழங்கியவர் thalika

அதெப்டி தனிஷா
" பாம்பே மனிஷாவையும், பூமிகாவையும் சேர்த்து பிசைந்த சிலைமாதிரி இருந்தாங்க."
ஹஹஹா எனக்கு சிரிப்பே அடக்க முடீல..ஒரு பக்கம் சினிமா நடிகைக கூடயெல்லாம் என்னை கம்பேர் பன்னினியேன்னு சந்தோஷம் வேற.இவர் கேட்டா இன்னைக்கு முழுக்க என்னை ஓட்டுவார்.

நடுவே கோகுல் ரேனுவின் பயல் எதிர்பாரா விதமாக அஃப்ராவின் கண்ணத்தில் அடித்து விட தனிஷாவும் நானும் ஷாக்..அய்யோ பாவம் பொண்ணு என்ற் நினைக்கவும் மொத்தமாக அஃப்ரா கோகுலுக்கு போகும் நேரம் கொடுத்து விட்டது அடி.
கோகுல் ரொம்ப விவரம் எல்லாமே தெரியும் ஆனா ஒன்னும் தெரியாத ஆளு போல அவர் அம்மாட்ட பேசுவது ரொம்ப கியூட் ஆன்டியை நாம்மோடவே வச்சுக்கலாம்னு சொல்லிட்டிருந்தார்.
அய்யோ நம்மோட வச்சுட்டா அன்கில் சாப்பாட்டுக்கு என்ன பன்னுவார் என்று மழலையில் சொன்னார் ரேனு.
பதிலளி
நாங்களும்
ஜனவரி 20, 2009 - 11:37am - வழங்கியவர் thalika

நாங்க ஒன்றாக டேக்சியில் வந்து ரேனுவை இறக்கிட்டு நான் போலாம்னா டேக்சி காலை வாரிடுச்சு வர மாட்டேன்னு..அப்ரம் ரோட்டில் நின்னு பொண்ணு வேற தூங்கிடுச்சு..ஒரு வழியா ரொம்ப நேரத்துக்கு பிறகு ஏறி வந்தேன் .
பதிலளி
ஹாய் தளி
ஜனவரி 20, 2009 - 11:55am - வழங்கியவர் Thanisha

உங்கள் ஹஸ்பண்ட் வந்தா உன்னை ஓட்ட மாட்டார். உண்மையத்தான் சொல்லியிருக்காங்க என்று என்னை அப்ரிஷியேட் பண்ணுவார். பொண்ண வானசாவில் விளையாட விட்டதும்தான் ஒழுங்கா தூங்கினாளா?
பதிலளி
அபுதாபி கெட் டூ கெதர்
ஜனவரி 20, 2009 - 12:06pm - வழங்கியவர் Renuka

நான் அசத்தலாம் பகுதிக்கு போய்ட்டு வரதுக்குள்ள இங்க எல்லாரும் ஆஜரா?

ஆசியாக்கா நான் நினைத்த மாதிரி தான் இருந்தாங்க,சோ க்யூட்,நல்ல கலகலன்னு பேசினாங்க,கேட்டுகிட்டே இருக்கலாம் என்று தோன்றியது,ஆனால் ஒத்து வரல,நாங்க ரெண்டு பேரூம் ஓரே ஸ்கூல்,ஆனா அவங்க படித்த போது நான் பிறக்கவே இல்லை,ஒரே டீச்சர் கிட்ட ரெண்டு பேரும் மாட்டிருக்கோம்,துபாயிலும் அவங்க இருந்திருக்காங்க,அங்கயும் பக்கத்து ஏரியா,நிறையா விஷ்யம் எங்களுக்கு ஒத்து போயிடுத்து,

தனிஷா எங்கயோ பார்த்த மாதிரி ஒரு பீலிங் இருந்தது,நல்லா பேசினாங்க,ஆனா அமைதியாவும் தெரிஞ்சாங்க,ரெம்ப நல்லா இருந்தது எல்லாத்துகிட்டயும் பேச,அவங்க பொண்ணுக்கும் என் பையனுக்கும் ஒத்து வரலை,இரண்டும் ஒன்னு சேந்தா எங்களுக்கு தெரியாமல் அடிச்சுகறது,

அப்பறம் நம்ம தளிகா 75%என் கற்பனைக்கு ஏற்றது போல் இருந்தாங்க,ஆசியா அக்கா சொன்னத மறந்துட்டாங்க,மனிஷா சமீர் என்று தானே சொல்லி இரூக்கனும் சரியா ரூபி,நாங்க ரெண்டு பேரும் பிள்ளைகளை விளையாட விட்டுதான் கூட்டி வந்தோம்,ஆசியா அக்காவும் தனிஷாவும் கிளம்பிட்டாங்க,என் பையனும்,தளிகா பொண்ணும் நல்லா பிரெண்ட்ஸ் ஆயிட்டாங்க,இரண்டு பேரும் ஒரே ஓட்டம்,ஆட்டம் பிடிச்சு நிறுத்த முடியல,

இன்னிக்கு பொழுது போனதே தெரியல,ரெம்ப நல்லா இருந்தது,இன்னும் நிறையா சொல்ல தோனுது ஆனா சந்தோஷத்தில் கை தப்பு தப்பா டைப் அடிக்குது,மீதியை அப்பறம் சொல்றேன்,ஒரு காபி குடிச்சுட்டு வரேன்,யாருக்காவது காபி வேனுமா?

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...
பதிலளி
தனிஷா,ஆசியாக்கா,தளிகா
ஜனவரி 20, 2009 - 12:22pm - வழங்கியவர் Renuka

தனிஷா,தளிகா,ஆசியாக்கா உங்க பதிவை படிக்கும் போது என்னால சிரிப்பை அடக்க முடியல,அதுவும் தனிஷாவின் "விவேக் பாஷையில் சொல்லனும்னா பாம்பே மனிஷாவையும், பூமிகாவையும் சேர்த்து பிசைந்த சிலைமாதிரி இருந்தாங்க"இந்த வரிகள் படிக்கும் போது எத்தனை கற்பனையோட எழுதி இருக்கீங்க,நம்ம அங்க பேசின மாதிரியே கற்பனை பண்ணி படித்தேன்,இன்னும் சிரிப்பை நிறுத்த முடியல

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

ஜெயலக்ஷ்மி இங்கே புது த்ரெட் தொடங்கிட்டேன்..நாங்களே பேசாம நடுவுல யாராவது பொறாமை பட்டா தான் இன்டெரெஸ்டா இருக்கும்னு நெனச்சேன் கரெக்டா நீஙக் வந்தீங்க..செம்ம ஜாலியா இருந்தது

ஜெயா இப்ப நான் காபி தான் போட்டேன்,அதான் காபி வேனுமா கேட்டேன்,ஓ.கே.நைட் சப்பாத்தியும் சிக்கன் குருமாவும்(குருமா தேடிகிட்டு இருக்கேன்) செய்யலாம் என்று பிளான்,வரீங்களா சாப்பிட

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேணு நாம அங்க பேசினத அப்படியே போடனும்தான் நினைத்தேன் தளிய பார்த்து மனிஷா, பூமிகானு பேசிட்டு இருந்தோமா அதான் விவேக் பாஷையில் போட்டாச்சு. இதெல்லாம் சேரனோட ஆட்டோக்ராப் மாதிரி ரேணு நினைச்சி நினைச்சி சிரிங்க நல்லதுதான்.

ஜெயா என்ன இப்படி பீல் பண்ணீடீங்க அபுதாபிக்கு பேமிலியோட வாங்க ரேணுவோட ஸ்பெசல் காபி மட்டும் இல்லை எங்க எல்லோருடனும் ஒரு ஸ்பெசல் சாப்பாடே அரேஞ் பண்ணுவோம். சந்தோஷத்தில் திக்கு முக்காடி போயிடுவீங்க.

தளி சூப்பர் போட்டோ போடலியா

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

உண்மைலேயே ரொம்ப ச்ந்தோஷம் பா உஙலோட கெட் டூ கெதர் படிச்சிட்டு . ஓகே உங்க போட்டோஸ் போட்டீஙனா ரொம்ப நல்லா இருகோம் அந்த மனிஷாவையும்,பூமிகவையும் கல்ந்த கலவையை பார்க்க ஆவல்:-)

உங்க சந்திப்பின் சம்மரி ரொம்ப சூப்பர்...
"விவேக் பாஷையில் சொல்லனும்னா பாம்பே மனிஷாவையும், பூமிகாவையும் சேர்த்து பிசைந்த சிலைமாதிரி இருந்தாங்க" // ரிப்பீட்டோய்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் என்க்கு ஓரு உண்மை சொல்லுங்கபா? அந்த புளூ கலர் சுடி நீங்க4 பேரும் பேசி வச்சிட்டு தானே போட்டு வந்தீங்க??

குட்டீஸ் எல்லாம் பார்த்ததும் என் மனது கூட பாட ஆரம்பித்துவிட்டது.கற்பனைக்கு அப்பாற்பட்ட அருமையான சந்திப்பு ஜெயலஷ்மி மேடம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

lovely
என்னம்மா தாளிக்கா என்னை ஏமாத்திடீங்களே ஏன் நாங்கா உங்ககூடவெல்லாம் வரக்கூடாதா மெயிலில் போகவில்லை இன்னொருநாள் சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டு இப்படி நீங்கள்நால்வரும் மட்டும் சந்திதது இருக்கிரீர்கள் ஏன் இப்படி செய்யலாமா நான் வருவதற்கு ரெடியாகதான் இருந்தேன் என் மச்சான்கூட, இந்த மெசேஜ்பார்த்துவிட்டு மனது ரொம்பவும் கஸ்டப்பட்டதுதெரியுமா

அன்புடன் மலிக்கா

உன்னை நேசி
உலகம் உன்னை சுவாசிக்கும்.
அன்புடன் மலிக்கா

தளிகா, ரேணுகா, ஆசியா, தனிஷா, கெட் டு கெதர் நல்லா நடந்தது பற்றி ரொம்ப சந்தோஷம்.
தனிஷா, நீங்க சென்னை கெட் டு கெதர்லயும் கலந்துகிட்டீங்க, இப்போ இந்த கெட் டு கெதர்லயும் கலக்கிட்டீங்க, வாழ்த்துக்கள் உங்க நான்கு பேருக்கும்!

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்