கத்திரிக்காய் இட்லி சாம்பார்

தேதி: January 21, 2009

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கத்திரிக்காய் - 1/2 கிலோ
துவரம் பருப்பு - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பில்லை - 3 இலை
கடுகு - 1/2 தேக்ரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி


 

முதலில் கத்திரிக்காய், வெங்காயம் , தக்காளி மற்றும் பச்சை மிளகாயினை பொடியாக வெட்டி கொள்ளவும்.
பின்பு துவரம் பருப்பினை நன்றாக கழுவி கொள்ளவும்.
ஒரு ப்ரஸர் குக்கரில் துவரம் பருப்பு, வெட்டி வைத்துள்ள கத்திரிக்காய், வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயுடன் 3 கப் தண்ணீர் சேர்க்கவும்.
இத்துடன் மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயம் சேர்த்து 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
குக்கர் அடங்கியதும் ஒரு கரண்டியை வைத்து மசிக்கவும்.
பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பில்லையை போட்டு தாளித்து குக்கரில் உள்ள கலவையில் போடவும்.
இப்பொழுது சுவையான கத்திரிக்காய் இட்லி சாம்பார் ரெடி.
இதனை இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும். நிறைய காரம் இல்லாத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.


மிகவும் சுவையாக இருக்கும்.
நிறைய காரம் இல்லாத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கீதாச்சல் இந்த சாம்பார் மிகவும் நன்றாக இருந்தது. நீங்கள் குறிப்பிட்டதுபோல் பிள்ளைகளும் விரும்பிச் சாப்பிட்டார்கள். நான் தக்காழி அதிகம் உணவுக்கு சேர்ப்பதில்லை, எனவே கொஞ்சம் பழப்புளி விட்டேன். எந்தப் புளி உகந்ததெனத் தெரியவில்லை, உங்களைக் கேட்காமலே நான் பழப்புளி சேர்த்தேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மிகவும் நன்றி அதிரா.
இதில் என்ன இருக்கின்றது..புளி சேர்த்தாலும் நன்றாக தான் இருக்கும்..
ஆனால் தக்காளி சேர்த்தால் வேறு சுவையாக இருக்கும்…ஒரு முறை செய்து பாருங்கள்..
இதன் செய்முறை படித்தினை அனுப்பி பல நாட்கள் ஆகிவிட்டது ஆனால் ஏனே இன்னும் வெளியிடவில்லை..
அன்புடன்,
கீதா ஆச்சல்

இன்று இட்லி சாம்பார் செய்தேன் ( ஃப்ரோசன் முருங்கைக்காய் ) வைத்து. சுவை அருமையோ அருமை

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா,
எப்படி இருக்கிங்க?
மிகவும் மகிழ்ச்சி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

ஹாய் கீதா ஆச்சல்,
நேற்று இரவு டின்னருக்கு,இந்த இட்லி சாம்பார் செய்தேன். சாம்பார் வேணாம், பொடிதான் வேணுமென்று சொன்ன என் சின்ன பையன், நான் தொட்டு சாப்பிட கொடுத்ததும் ஒன்னும் சொல்லாமல் சாப்பிட்டான். அவனுக்கு பிடித்திருந்தது இந்த சாம்பார்! இனி இட்லி,தோசை செய்தால் இதுவும் செய்திட வேண்டியதுதான்னு நினைத்துக்கொண்டேன். குறிப்புக்கு நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மிகவும் நன்றி ஸ்ரீ .குழந்தைக்கு பிடித்து இருக்கு என்பதில் மிகவும் மகிழ்ச்சி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

halo akka...netru ungal sambar seithu paarthen migavum suvaiyagah iruntathu..naan ithil konjam sambar podi,potato serthen suvaiyo suvai..en husband super endru sonnaar..

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி இந்திரா. செய்துவிட்டு பின்னுடடம் தந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி.

அன்புடன்,
கீதா ஆச்சல்