தேதி: January 21, 2009
பரிமாறும் அளவு: 4
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
வெங்காயம் - 1
தக்காளி - 1
கறிவேப்பில்லை - 4 இலை
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 1 மேசைக் கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
உருண்டை தயாரிக்க:
கடலைப்பருப்பு - 1 கப்
சோம்பு - 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
கடலைப்பருப்பினை 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
முதலில் வெங்காயம், தக்காளியை வெட்டி கொள்ளவும்.
அதன் பின் கடலைப்பருப்பு, சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். பிறகு அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், உப்புடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
புளியினை 3 கப் தண்ணீருடன் சேர்த்து கரைத்து வைக்கவும்.
பின்பு கரைத்து வைத்துள்ள புளி கரைசலுடன் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து திரும்பவும் நன்றாக கரைக்கவும்.
முதலில் ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும்..
அதன் பின் வெங்காயம், கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
பிறகு கரைத்து வைத்துள்ள புளி கரைச்சலை இதில் ஊற்றி தட்டு போட்டு மூடி நன்றாக கொதிக்கவிடவும்.
ஒரு கொதி வந்தவுடன் அரைத்து வைத்துள்ள கடலைப்பருப்பினை சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து குழம்பில் போடவும்.
இப்படியே அனைத்து உருண்டைகளையும் பிடித்து குழம்பில் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் போடவும்..
தட்டு போட்டு மூடி மிதமான தீயில் உருண்டைகளை வேகவிடவும்.
இப்பொழுது சுவையான உருண்டை குழம்பு ரெடி.
உருண்டைகள் வேகும் பொழுது கிளறினால் உருண்டைகள் உடைந்து விடும்.
உருண்டைகள் நன்றாக வெந்துவிட்டால் அனைத்தும் மேலே மிதக்க ஆரம்பிக்கும். அப்பொழுது வேண்டுமானால் கிளறலாம்.
Comments
hai geethachal, unga name
hai geethachal, unga name nallaruku. urundai kulambukku nan oru idea sollalama. thappa eduthukkathinga. plz. urundaikala pidichu idli thattula vega vachu eduthutu kolambula potta udayamalum, karayamalum irukkum.
supper
enakku next month marriage kurippukal ellam parpen ungakurippu arumai seithuparthan nalla irunthathu thankyou
ஹாய் கீதா அக்கா
ஹாய் கீதா அக்கா,
ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்குத்தான் அறுசுவை பக்கம் வந்தேன். இன்னைக்கு எங்க வீட்டுல பருப்பு உருண்டை குழம்புதான் கொதிச்சிக்கிட்டு இருக்கு. சாப்பிட்டுட்டு சொல்லுறேன் எப்படி இருந்ததுன்னு :)
வாழ்க வளமுடன்
டான்யா
வாழ்க வளமுடன்
டான்யா
என்ன டான்யா,
எப்படி இருக்கிங்க?மிகவும் நன்றி பா..இந்த முனிரா போன் பேசிறேன் சொன்னா..ஆனால் இன்னும் பன்னவில்லை… ஒர்குட்ல அட் பன்னுங்க…
நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்