தேதி: January 21, 2009
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பயத்தம் பருப்பு - 1 கப்
பட்டாணி - 1 கப்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி துருவியது - 1 தேக்கரண்டி
வெங்காயம் நறுக்கியது - 1 கப்
கொத்தமல்லி நறுக்கியது - 1 கப்
உப்பு - தேவையான அளவு
பயத்தம் பருப்பை சுத்தம் செய்து 30 நிமிடம் வெந்நீரில் ஊற வைக்கவும்.
பின்பு பருப்பை வடித்து, அதனுடன் பச்சை பட்டாணி, மிளகாய், இஞ்சி சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்தமா தோசைமா பதத்தில் இருக்க வேண்டும்.
வெங்காயம், கொத்தமல்லி, உப்பை மாவில் கலந்து வைக்கவும்.
பின்பு தோசையாக வார்த்து மொறு மொறுப்பாக சுட்டு எடுக்கவும்.
சூடாக பச்சை சட்னியுடன் பரிமாறவும்.
Comments
பச்சை பட்டாணி தோசை
வத்சலா, இந்த தோசை மிகவும் நன்றாக இருந்தது. கலர் பார்க்க அழகா, சத்தான ரெஸிப்பியும் கூட. நன்றி உங்களுக்கு.
நன்றி
வின்னி, உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"