ஒல்லி கண்ணத்தை குண்டாக்க வழி இருந்தால் சொல்லுங்களே...

அன்பு தோழிகளே,

ஒல்லி கண்ணத்தை குண்டாக்க வழி இருந்தால் சொல்லுங்களே...

என் உடல் மட்டும் கொஞ்சம் சதை பிடிப்பு ஆனால் கன்னங்கள் மட்டும்
ஒட்டிப்போய் அழகற்றவளாக இருக்கிறேன்
கண்ணங்கள் குண்டாக்க வழி இருந்தால் சொல்லுங்களேன்

அன்புடன்
கீர்த்தீஷ்வரி

நல்ல தூங்கி ரெஸ்ட் எடுத்தால் முகம் புசுபுசுன்னு இருக்கும்.இரவில் தூங்கும் முன்பு தேங்காய் எண்ணெய் தடவி தூங்கச்செல்லவும்.வேறு கிரீமே தேவைப்படாது,என் மைனி (கணவருக்கு தங்கை)எனக்கு சொன்ன டிப்ஸ்
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் கீர்த்தி வர்ஷினி
ஒல்லியாண கண்ணத்தை குண்டாக்க தினம் ஒரு ஆப்பில் சாப்பிடுங்கள்.
ஹா ஹா

சின்ன குழந்தைகள் வாயில் தண்ணீர் வைத்து அப்பு அப்புன்னு விளையாடுவார்களே அது போல் வெரும் வாயை செய்யவும். பலூன் ஊதுவது போல் பெட்டர் நீங்கள் தின முன்று வேளைக்கு பலூனே ஊதிவிடுங்கள் அதான் வழி.ஒரு ஐந்து நிமிடம் செய்தால் போதும்.

மற்றபடி ஆசியா ஓமர் சொன்னபடி செய்யவும்.
ஜலீலா

Jaleelakamal

மிக்க நன்றி ஆசிய மேடம், மற்றும் பலூன் டிப்ச் கொடுத்த ஜலீலா மேடதிற்கும் நன்றி

கீர்த்தி

Keerthi

ஒரு சின்ன request.ஆசியா ஒமர் இல்லை,ஆசியா உமர்,இனி அப்படி எழுதுறீங்களா?நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

சாரி டீச்சர், அதுக்குன்னு பெஞ்சு மேல ஏறி நிற்க சொல்ல கூடாது.
ஒகே ஆசியா//

ஜலீலா

Jaleelakamal

என்ன புதுசா டீச்சர் எல்லாம் சொல்ரீங்க,என்னோட degree (agriculture)அது சம்பந்தப்பட்டது இல்லை.பொழுதுபோக்கா போனது தான்,என்றாலும் கொஞ்சம் சந்தோஷமா இருக்கு.பரவாயில்லை.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

காற்றை நிறைத்து கன்னத்தை உப்பி வைத்து கொண்டு பிறகு மெது மெதுவாக காற்றை வெளி விடுங்கள். இப்படியே பத்து தடவை காலையும் மாலையும் செய்யுங்கள். விடாது செய்யுங்கள். கன்னம் உப்பி வரும். ஆனால் அவரசமில்லாமல் மெதுவாக செய்ய வேண்டும்.

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதே நினைப்போம்

ஹாய் லஷ்மி எப்படி இருக்கிங்க? உங்கள் இந்த வரிகள் நல்லா இருக்குப்பா

#எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதே நினைப்போம்#

நன்றி

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

நலமாக இருக்கின்றேன் ஜெயா. நீங்கள் நலமா? எனக்கும் ரொம்ப பிடித்த வாசகம் இது. படித்த நாளில் இருந்து அப்படியே மனதில் பதிந்து விட்டது. உண்மையும் அது தானே தோழி? நலமாக இருக்கின்றேன் ஜெயா. நீங்கள் நலமா? எனக்கும் ரொம்ப பிடித்த வாசகம் இது. படித்த நாளில் இருந்து அப்படியே மனதில் பதிந்து விட்டது. உண்மையும் அது தானே தோழி?

எதனை நினைத்து கொண்டு இருக்கிறோமோ அது கண்டிப்பாக நடக்கும். சிலர் முடியாது, நடக்காது என்று எப்போதும் எதற்க்கும் யோசித்து கொண்டு இருப்பார்கள். அப்படியே அவர்கள் வாழ்க்கையும் முன்னேற்றம் இன்றி இருக்கும். சிலர் எந்த தீமைகள் வந்தாலும் "எல்லாம் நன்மைக்கே" என்று நினைத்து முகம் கொடுப்பார்கள். உண்மையிலே நன்மையாக இருக்கும்.

கூட பேசிட்டேனோ?

நீங்கள் சொல்வது உண்மையே பா. நான் என் தோழிகளிடம் சொல்வது நல்லதே நினையுங்கள் நல்லதே நடக்கும்" என்று.

மேலும் சில பதிவுகள்