யாரவது பட்டி மன்றம்க்கு பேச வரேங்களா?டாபிக்:தாயா-தாரமா please come everybody........

நான் என்ன நினைக்கரேன்னா தாய் முக்கியம் / தாரம் அதை விட முக்கியம்.

யாருப்பா எனக்கு எதிரா பேச போரேங்க?

வாங்கோ வாங்கோ வாங்கோ

அன்பு தோழீ
அம்மூ

இரண்டும் இரண்டு கண் போல.இரண்டும் முக்கியம் வாழ்க்கையின் பாதி வரை கைபிடித்து நடக்க வைப்பது தாய்.மீதமுள்ள வாழ்க்கையில் விழுந்துவிடாமல் காப்பது மனைவி..இரண்டும் முக்கியம் இது சற்றி கடினமானது பதிலளிக்க

அன்புத்தோழி அம்மு!
பெற்ற தாய்தான் முக்கியம் என்று, கைப்பிடித்த மனைவியின் ஆசைகளையும், உணர்வுகளையும் காலில் போட்டு நசுக்கும் ஆண்மகனும், மனைவிதான் முக்கியம் என்று, கருத்தரித்த நாள்முதல் கண்ணின் இமைபோல காத்து, பெற்றெடுத்து, தன் ஆசைகளையும்,வசதிகளையும் தியாகம் செய்து தன்னை உருவாக்கிய தாயை உதாசீனப்படுத்துபவரும் நல்ல ஆண்மகனே அல்ல. யார் யாரைவிட முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்று எடை போட்டு பார்க்க இருவரும் மளிகைக்கடை சரக்கோ, ஜவுளிக்கடை துணிமணிகளோ அல்ல?
இது திருமணம் ஆன ஆண்களுக்கு கடினமானதொரு விஷயம்தான். இருந்தாலும் இருவருமே முக்கியம் என்ற எண்ணம் இருந்தாலே போதும். மனமிருந்தால் மார்க்கம் உண்டு!

neenga solrathu correct but most iimportantnu oruthar than iruka mudium adhu yaruku nu keten.kalyanathuku apuram nama family members ellaraum vitutu ivara matum nambi varale wife avaluku thane importance kudukaum....

அம்மு

அன்புத்தோழி நீங்கள் எந்த வகையில் கேட்டாலும் , இந்த கேள்விக்கு சரியான விடையளிப்பது யாராலும் இயலாத விஷயம்.
ஒரு பெண் திருமணம் ஆகி புகுந்தவீடு போவதென்பது, பிறந்த வீடு
என்னும் மண்ணிலிருந்து பெயர்த்தெடுத்து, புகுந்த வீடு என்னும் மண்ணில் நடுவதுற்கு சமம்.
அங்கு அந்த செடி செழித்து வளர பக்கத்தில் இருக்கும், செழித்து வளர்ந்து,கிளை பரப்பி,நல்ல காற்றும், நிழலும், உண்ண ருசியான பழங்களும் தந்த மரத்தினை வெட்டி எறிய சொல்லலாமா?
நாந்தான் நிழல் தர வந்துவிட்டேன். இனி அந்த மரம் தேவையில்லை, அதற்கு முக்கியத்துவம் தேவையில்லை என்று சொல்வது நியாயமா?
ஒரு பெண் தன் உறவுகளை பிரிந்து தன் கணவனையே நம்பி வருகிறாள் என்ற ஒரே காரணத்திற்காக தாய்க்கு கொடுக்கும்
முக்கியத்துவத்தை குறைத்து கொள்ள சொல்வது நியாயமே
இல்லை.
ஆண்மகனின் சிறு வயதில் எப்படி தன்னுடைய தேவைகளுக்காகவும், அன்பிற்கும்,ஆதரவிற்கும் தன் தாயை எதிர்பார்த்திருந்தாரோ, அதேபோல் தன் வயதான காலத்தில் தாய் தன் மகனிடம் எதிர்பார்க்கும் போது அதை தர மறுப்பது பாவம்
அல்லவா?
எத்தனையோ ஏழை தாய்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல உணவும்,உடையும்,தரமான கல்வியும் அளிக்க தங்களுடைய
ஆசைகளையும், வசதிகளினையும் தியாகம் செய்து, தங்கள் எதிர்காலம், முதுமைக்காலம் சேமிப்பு பற்றியெல்லாம் கூட கவலைப்படாமல்,தங்கள் மகனின் நல்ல எதிர்காலம் ஒன்றையே குறிக்கோளாக வாழ்ந்தும்,வாழ்ந்துகொண்டும் இருக்கிறார்கள்

அப்படி வாழ்ந்த,வாழும்,,
அந்த அன்பு ஜீவனை விட மனைவிக்குத்தான் முக்கியத்துவம் தரவேண்டும் என்பதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
தாய்க்கு கொடுக்கும் முக்கியத்துவதுவம் தனக்கும் தரப்படவேண்டும் என்று ஒரு மனைவி உரிமைக்குரல் கொடுக்கலாமே தவிர அங்கு குறைத்து அல்லது எடுத்து இங்கு கொடு என்பது தவறானது என்பது என் அபிப்ராயம்!

ஒரு ஆணின் வழ்க்கை சிற்க்க காரணம் என்று பார்த்தால் மனைவிக்கு அதிக பங்கு உண்டு..ஆனால் அது முன்பே விவாதிக்க பட்டுவிட்டது..மற்றபடி யார் முக்கியம் என்பது கண்டிப்பாக கடினமான கேள்வி.அப்படியே ஒருவேளை எழுதிவிட்டால் மனசு குருகுருக்கும் தப்பு செய்தாற்போல்

சாய் கீதாலக்ஷ்மி,
உங்களை நான் பாராட்டுகிறேன். சின்னப்பொண்ணுங்கல்லாம் அருமையா யோசிக்கிறீங்க.

முதலில் தாரமாக இருந்து தாயாகிறோம் நாம். ஒரு நல்ல பெண் இரண்டுக்கும் சரியான ஜஸ்டிபிகேஷன் தரவேண்டும்.

இப்ப தாரம் முக்கியம்ன்னு சொல்லிட்டு வயதானகாலத்தில் தாய்தான் முக்கியம்ன்னு சொன்னா - சந்தர்ப்பவாதியாக மாட்டோமா?

இரண்டும் முக்கியம்தான்

திருமணத்திற்கு முன் அம்மா முந்தானை, திருமணத்திற்குப் பின் மனைவி முந்தானை என்று இல்லாமல் இருவருக்கும் சம உரிமை தரவேண்டும். அப்படி இருந்தால் மாமியார், மருமகள் சண்டைகூட தவிர்க்கப்படலாம்.

என்ன அம்முக்குட்டி சரிதானே?

அன்புடன்
ஜெயந்தி மாமி

அம்மு
கீதா,ஜெயந்திமாமி சொல்வதுபோல் தாயையும்,தாரத்தியும் பிரித்து பார்க்காமல் இருவருக்கும் சம பங்கு பாசம் வைப்பது என்பதுதான் என்னுடைய கருத்தும்.
செல்வி

சவுதி செல்வி

இந்த டாபிக் ஏற்கனவே அலசப்பட்டு தீர்ப்பும் கொடுத்தாச்சு. பழைய பட்டிமன்றங்களை நீங்க ப்ரீயாக இருக்கும் போது படித்து பாருங்கள். புதிய பட்டிமன்றங்கள் புதிய தளத்தில் வரும் அதற்காக அனைவரும் காத்திருப்போம்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

இது வாதாட சொல்லல.... பொதுவா பட்டிமன்றம்'னு நினைக்காம ஒரு மன்றத்து பதிவா நினைத்து மனசுல பட்டதை சொல்றேன்.

ஒரு பொண்ணு "தாய்" ஆகும் முன் "தாரம்" ஆகிறாள். அங்கே அவளுக்கு முக்கியத்துவம் இல்லாது போனால் பின் தாய் ஆவது எங்கே?! ஒரு தாரத்துக்கு முக்கியத்துவம் இல்லாது போனால் "முதல் கோனல்...." கதை தான். இந்த கலத்துல ஆண்கள் பெண்களை தவராக புறிந்து கொண்டு எங்கே தன் தாய் தகப்பனை மதிக்காமல் போய்விடுவாளோ என்று மணைவிக்கு முக்கியத்துவம் தராமல், அவளை மற்றவர் முன் விட்டு குடுக்கிறார்கள். ஆனால் ஒரு தாய் தன் மகனுக்கு செய்ய முடியாத பல விஷயங்களையும் ஒரு ஆணுக்கு செய்பவள் மனைவியே. ஒரு வயது வரை தான் தாய் மகனிடம் நெருங்க இயலும்... ஆனால் அந்த ஆணை தன் உயிர் உள்ள வரை மனதிலும் மடியிலும் சுமப்பவள் தாரம் மட்டுமே. அதை இன்று பல தாய்களும் ஆண்களும் மறந்து போகின்றனர். ஒரு ஆண் தாய் என்று சொல்லும் பெண், அவன் தந்தைக்கு தாரம். அதில் வெற்றி பெற்றதால் தான் இன்று அவனுக்கு தாய். எது முதல்?!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தாயும், தாரமும் இரு விதமான உறவுகள். இரண்டிற்குமே ஒவ்வொரு வகையில் முக்கியத்துவமும், தனித்துவமும் உண்டு. இதை உணராமல், இருவரையும் கம்ப்பேர் செய்து தாய் உசத்தியா! தாரமா! என்று தாங்களும் குழம்பி, மற்றவரையும் குழப்பும் ஆண்களால் தான் பிரச்சினையே. என்பது தான் என் கருத்து.

உத்தமி.

மேலும் சில பதிவுகள்