கடாய் முட்டை வறுவல்

தேதி: January 24, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி


 

முதலில் முட்டை தண்ணீரில் போட்டு வேகவைத்து தோல் உரித்து கொள்ளவும்.
பின் முட்டைகளை இரண்டாக வெட்டி கொள்ளவும்.
பூண்டினை துருவி கொள்ளவும் (காரட் துருவுவது போல)
ஒரு பாத்திரத்தில் துருவிய பூண்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்புடன் 2 - 3 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
தோசை கல்லினை காயவைக்கவும்.
பின் வெட்டி வைத்துள்ள முட்டைகளை கரைத்து வைத்துள்ள கலவையில் போட்டு பிரட்டி தோசை கல்லியில் போட்டு எண்ணெய் ஊற்றி வேகவிடவும்.
2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு வறுக்கவும். (முட்டை சில சமயம் இப்படி செய்யும் பொழுது வெடிக்கும். அதனால் திருப்பி போட்டவுடம் ஒரு தட்டு போட்டால் நல்லது)
இப்பொழுது சுவையான மணமான கடாய் முட்டை வறுவல் ரெடி.


நல்லெண்ணெய் மற்றும் பூண்டு சேர்ப்பதால் மிகவும் அருமையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Trying this recipe again and again..it was superb! congrtas!

ஹாய் கீதா எனக்கு மிகவும் பிடித்துவிட்டது இதன் சுவை,பூண்டும் நல்லென்னெயும் நல்ல காமினேஷன்

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

மிகவும் நன்றி ரேணுகா.
உங்களுக்கு மிகவும் பிடித்த்து என்று கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது.
ஆமாம் நல்லெண்ணெய் ஊற்றி சமைக்கும் பொழுதே சுவை வித்தியாசமாக நன்றாக இருக்கும்.
நான் எப்பொழுதும் சமையலில் பெரும்பாலும் நல்லெண்ணெய் ஊற்றி சமைத்தே பழகிவிட்ட்து…அதிலும் non-veg (முட்டை, மீன் குழம்பு) போன்றவைக்கு சேர்க்கும் பொழுது நன்றாக இருக்கும்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

கீதா கடாய் முட்டை வறுவல் ரொம்ப நல்லா இருந்தது. நான் சாம்பார் பொடியில் செய்தேன். தக்காளி சாதத்திற்கு சூப்பர் காம்பினேஷன். நன்றி!

மிகவும் நன்றி மாலி..
சூப்பர் காம்பினேஷன்…மிகவும் சந்தோசம் பா…நானும் அடுத்த முறை செய்யும் பொழுது சாம்பார் பொடியுடன் செய்து பார்க்கிறேன்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

கீதா இன்று உங்களது கடாய் முட்டை வறுவல் செய்தேன்..தேங்காய் எண்ணையில் செய்தேன் சுவையாக இருந்தது.நன்றி

மிகவும் நன்றி தளிகா. உடம்பு இப்பொழுது எப்படி இருக்கின்றது. பார்த்து கொள்ளுங்கள்.
மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் ஒரு முறை நல்லெண்ணெய் சேர்த்து செய்து பாருங்கள் ..சுவை வேறுபட்டு வித்தியசமாக இருக்கும்..
பின்னுட்டம் அனுப்பியதற்கு மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

ஹாய் கீதா

இன்று உங்க கடாய் முட்டை செய்தேன் ரொம்ப நல்லா வந்துச்சு, சுவையாகவும் சுலபமாகவும் இருந்தது. என் ஹஸ்-ம் நல்லா இருக்குன்னு சொன்னார்

கீதா உங்க கடாய் முட்டை செய்தேன். சுவையாக இருந்தது. சுவையான செய்வதற்கு சுலபமான குறிப்பு.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.