தேதி: January 24, 2009
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
ப்ரோசன் ஃபைளோ (frozen Phyllo dough) - ஒரு பாக்கெட்
அஸ்பாரகஸ் – 10
பட்டர் – கால் கப்
பார்மஜான் சீஸ் – கால் கப்
உப்பு – ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் – கால் தேக்கரண்டி
பட்டரை உருக்கி வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அவனை 375 Fல் முற்சூடு செய்து வைத்துக் கொள்ளவும். அஸ்பாரகஸின் அடித்தண்டு பகுதியை நறுக்கி விடவும். பின்னர் அஸ்பாரகஸுடன் உப்பு மற்றும் மிளகுதூள் சேர்த்து பிரட்டி வைக்கவும்.

அதன் பிறகு ஃபைளோ சீட் ஒன்றை எடுத்து அதில் உருக்கி வைத்திருக்கும் பட்டரை ப்ரஷ்ஷை வைத்து தடவி விடவும். அதன் மேல் சீஸை தூவி விடவும். ஃபைளோ சீட் என்பது பார்க்க பப்ஸ் சீட் போலவே இருக்கும். ஆனால் இது மிகவும் மெல்லியதாகவும், ஒரு பாக்கெட்டில் குறைந்தது 25 சீட்டுகள் இருக்கும்.

பின்னர் பட்டர் தடவி வைத்துள்ள சீட்டில் ஒரு அஸ்பாரகஸை வைத்து சுருட்டிக் கொள்ளவும்.

இதைப் போலவே எல்லா அஸ்பாரகஸிலும் செய்து அதை அவன் ட்ரெயில் அடுக்கி வைக்கவும். இறுதியாக ட்ரெயில் அடுக்கி வைத்திருக்கும் அனைத்து ஃபைளோ அஸ்பாரகஸின் மீதும் பட்டரை தடவி பார்மஜன் சீஸை தூவி விடவும்.

அதன் பின் முற்சூடு செய்து வைத்திருக்கும் அவனில் இந்த ட்ரையை வைத்து 375 Fல் 15 - 18 நிமிடங்கள் வைத்திருக்கவும்.

18 நிமிடங்களுக்கு பிறகு ஃபைளோவின் நிறம் மாறி பேக் ஆனதும் வெளியில் எடுத்து விடவும்.

சுவையான ஃபைளோ அஸ்பாரகஸ் ரெடி. இதனை தக்காளி சஸுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். குழந்தைகள் இதனை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சுவையான குறிப்பினை <b> திருமதி. கீதா ஆச்சல் </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார். இவரது பெரும்பாலான குறிப்புகள் குழந்தைகளுக்கான, மிக எளிதில் தயாரிக்கக்கூடிய உணவுக்குறிப்புகளாக இருக்கும்.

அஸ்பாரகஸிற்கு பதிலாக பீன்ஸ், சுக்கினி அல்லது காரட் என்று விதவிதமாக குழந்தைகளுக்கு செய்து தர காய்கள் சாப்பிடாத குழந்தைகளும் ஆசையாக சாப்பிடுவார்கள். இதே மாதிரி பப்ஸ் சீட்டிலும் செய்யலாம்.
Comments
ஹாய் கீதாச்சல்
சூப்பரா இருக்கு.ப்ரோசன் ஃபைளோ(frozen Phyllo dough) இதுக்கு பதிலா வேற எதுல செய்யலாம்னு சொல்லுங்க.சொன்னால் நான் செய்து பாக்கலாம்னு இருக்கேன்.நல்லாயிருக்கு உங்க ரெஸிபி.
கீதாச்சல்,
அருமையாக செய்திருக்கீங்க,உங்ககிட்ட இருந்து நிறைய கத்துக்கனும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
சூப்பர்
சூப்பர் ஃபிங்கர் ஃபுட்.. ரொம்ப நாசூக்கா சாப்பிடவும் ஈசியாக இருக்கும்
"A woman is like a tea bag -- you never know how strong she is until she gets in hot water - Eleanor Roosevelt"
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
கீதாச்சல்,...
எனக்கு அஸ்பரகஸ் என்றால் நல்ல விருப்பம். நன்றாகச் செய்திருக்கிறீங்க.
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
கீதாச்சல்,
கீதாச்சல், இந்தக் குறிப்பு பிடித்திருக்கிறது. ;-) நிச்சயம் சந்தர்ப்பம் கிடைக்கும்போது செய்வேன்.
அன்புடன் இமா
- இமா க்றிஸ்
கீதாஆச்சல்
பார்க்கவே சூப்பரா இருக்கு!!
Patience is the most beautiful prayer!!
Patience is the most beautiful prayer!!
ஃபைளோ அஸ்பாரகஸ்
மேனகா,
நீங்கள் ப்ப்ஸ் சீட்டிலும் இதே போல் செய்யலாம். அஸ்பரகஸிற்கு பதிலாக பின்ஸ், காரட், சுக்கினி போன்ற காய்களிலும் செய்தால் நன்றாக இருக்கும்.
செய்து பாருங்கள் மிகவும் நன்றாக இருக்கும்.
ஆஸியா அக்கா,இலா, அதிரா, இமா மற்றும் உத்ரா
மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்
ஃபைளோ அஸ்பாரகஸ்
இந்த குறிப்பினைப் பார்த்து திருமதி. நர்மதா அவர்கள் தயாரித்த ஃபைளோ அஸ்பாரகஸின் படம்
<img src="files/pictures/aa189.jpg" alt="picture" />
நர்மதா,
மிகவும் நன்றி.
எப்படி இருக்கின்றிங்க? குழந்தை நலமா. உங்களுடைய ஃபிளோ அஸ்பாரகஸின் படம் மிகவும் அழகாக இருக்கின்ரது.
அன்புடன்,
கீதா ஆச்சல்