BBQ சிக்கன் ப்ரை

தேதி: January 24, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (3 votes)

 

சிக்கன் - ஒரு கிலோ
பூண்டு - ஆறு பற்கள்
தயிர் - அரை கப்
ஆலிவ் ஆயில் - ஆறு தேக்கரண்டி (ஊற வைக்க)
காஷ்மீரி சில்லி பவுடர் - ஒரு மேசைக்கரண்டி
ஷான் தந்தூரி மசாலா - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - ஒரு மேசைக்கரண்டி (தேவைக்கு)
பச்சை மிளகாய் - நான்கு
எலுமிச்சை - மூன்று
ஆலிவ் ஆயில் - தேவைக்கு (சுடுவதற்கு)


 

பூண்டை தோல் உரித்து வைக்கவும். பச்சை மிளகாயை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை போட்டு அதில் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து 10 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் சிக்கனை நன்கு கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும்.
சிக்கனுடன் பச்சை மிளகய் விழுது, ஆலிவ் ஆயில், தயிர் சேர்க்கவும்.
அதனுடன் தந்தூரி மசாலா, உப்பு, மிளகாய் தூள் மற்றும் இரண்டு எலுமிச்சம் பழத்தை பிழிந்து நன்கு மசாலா சிக்கனில் படும்படி பிசறவும்.
எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசைந்த பின்னர் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
சிக்கன் நன்கு ஊறியதும் BBQ அடுப்பில் நெருப்பு மூட்டி நன்கு பிடித்துக் கொண்டதும் சிக்கன் துண்டுகளை போட்டு சுடவும். ஊறியதில் மசாலா தண்ணீர் அதிகமாக இருக்கும். அதில் வெரும் சிக்கனை மட்டும் எடுத்து வைக்கவும்.
எல்லா சிக்கனிலும் சிறிது ஆலிவ் ஆயில் ஊற்றி ஒரு பக்கம் முழுவதும் சுடவும்.
ஒரு பக்கம் நன்கு வெந்ததும் மற்றொரு பக்கத்தை இடுக்கியைக் கொண்டு திருப்பி போட்டு சுடவும்.
இரண்டு பக்கமும் வெந்ததும் பார்க்கவே சிக்கன் நல்ல சிவந்த நிறத்தில் இருக்கும்.
சூடான சுவையான சுட்ட BBQ சிக்கன் தயார். இதற்கு குபூஸ், கார்லிக் சாஸ், சாலட் வைத்து சாப்பிடவும், எண்ணெய் சேர்க்காத உணவு, அதிகம் இடையும் கூடாது.
அறுசுவையில் 500 சமையல் குறிப்புகள் மற்றும் பயனுள்ள வீட்டு உபயோகக் குறிப்புகள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள <b> திருமதி. ஜலீலா </b> அவர்கள் நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள குறிப்பு இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பார்பிக்க்யூ சிக்கன் சூப்பர். பர்பிக்யூ அடுப்பு கேரிபோரில் உள்ளதே அதுவா வாங்க வேண்டும். அது யூஸ் அன் த்ரோவா

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

படத்தைப்பார்க்கவே அழகா இருக்கு.என் பசங்களுக்கு கிரில்ட் சிக்கன் ரொம்பவே பிடிக்கும்.ஜலி,செய்து பார்த்து சொல்லுகின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

தனிஷா இல்லை சாதாரண அடுப்பும் வங்கலாம் இது புதுசா லூலூ வில் ஹண்டியா பெட்டி மாதிரி இருந்துச்சி
ஜலீலா

Jaleelakamal

ஆமாம் ஸாதிகா அக்கா நீங்கள் சொல்வது சரி பிள்ளைகளுக்கு சிக்கன் என்றால் ரொம்ப பிடிக்கும்.ஆமிருக்கு செய்து கொடுங்கள்
ஜலீலா

Jaleelakamal

லூலூவில் என்ன விலை. இதில் தந்தூரி சிக்கனும் செய்யலாம்தானே. உங்கள் பார்பிக்கியூ செய்ய தூண்டுகிறது. இந்தவாரம் வாங்கி செய்ய இருக்கிறேன் சொல்லுங்கள்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

புஜைரா லூ லூ வில் வாங்கியது. என் தங்கைக்கு சொல்லி கொடுக்க செய்து காண்பித்தேன்.

நான் இங்கு தூபாயில் நான் செய்து ரொம்ப நாள் ஆகுது.

ஜலீலா

Jaleelakamal

சூப்பர் குறிப்பு ஏறக்குறைய எனது போல ஆனால் நான் இஞ்சியும் சேர்ப்பேன் 1 நாள் முழுக்க ஊறவும் விடுவேன்..இஞ்சி சேர்க்காததற்கு எதுவாவது காரணம் இருக்கனுமே ஒருவேளை இன்னும் சுவையாக இருக்குமோ??அந்த கடைசி படம் பார்த்ததும் ஆஹாஅ

தளிக்கா இரவு முழ்வதும் தான் ஊறனும், ஆனால் முன்று மணி நேரம் போதுமானது அதில் டைம் மாற்றனும்.

சிக்கனில் மசாலா நிறைய வகை இருக்கு அதில் இதுவும் ஒன்று. இஞ்சி பூண்டும் போடலாம், கிரீன்மசலா, ஊறுகாய் மசாலா, தந்தூரி மசாலாமட்டும் அப்படி வித்விதமா போடலாம்.
ஜலீலா

Jaleelakamal

அன்புள்ள ஜலீலா நலமா இருகீங்களா?சிக்கன் பிரை பார்க்க அருமை.குட்டீஸ்சும் செம கூயூட்.தற்சமையம் பல குறிப்புகளை படத்துடன் தந்து கொண்டு இருக்கீங்க.வாழ்த்துக்கள்.

// சிக்கன் துண்டுகளை போட்டு அதில் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து 10 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் சிக்கனை நன்கு கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும்.//
இது எதர்காக செய்வது சிக்கன் ஸ்மெல் போவதர்க்காகவா? கொஞ்சம் விளக்குங்களேன்.

அன்புடன் பர்வீன்.

ஜலீலா பார்ப்பதற்கே சுவையாக தெரிகிறது.பக்குவமாக செய்திருக்கீங்க.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் ஜலிலா அக்கா உங்க சிக்கன் பாக்கவே ரெம்ப அழக இருக்கு. கொஞ்ஜம் விட்டால் நான் இப்படியே எடுத்து சாப்பிட்டாலும் சாப்டுருவேன். கலக்கிடிங்க சூப்பர்

ஜலீலாக்கா... சமர் வர முன்பே நல்ல குறிப்புத் தந்துவிட்டீங்கள். முடிந்தால் வீட்டுக்குள் கிறிலில் செய்து பார்க்கிறேன். படத்தைப் பார்க்க பொறாமையாக இருக்கு... கண்ணுக்கெட்டியும் வாய்க்கெட்டாமல் இருக்கிறதே என்று:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

பர்வீன நலமா? குழந்தைகள் நலமா?
ஆமாம் சிக்கனில் லெமென் போட்டு ஊறவைத்து கழுவினால் வாடை போகும் என்று நான் அப்படி செய்வது/
மற்ற படி கடலைமாவு (அ) வினிகர் போட்டு ஊறவைத்தும் கழுவலாம்.
லெமென் பிடிக்காதவர்கள் இப்படி செய்யலாம்.

ஜலீலா

Jaleelakamal

ஆசியா உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
ஜலீலா

Jaleelakamal

என்ன மகாலக்ஷ்மி அப்படியே சாப்பிடனும் போல் இருக்கா சீக்கிரம் செய்து சாப்பிடுங்கள்.

ஜலீலா

Jaleelakamal

அதிரா உங்கள் இரட்டையருக்கு சிக்கன் தானே ரொம்ப பிடிக்கும் செய்யுங்கள்.
இது சம்மரில் செய்வது கிடையாது (செய்யலாம் ) முக்கியமா வின்டரில் தான் இங்குள்ளவர்கள். அதிகம் செய்வார்கள்.
இது கூட இன்னோரு அயிட்டமும் செய்தேன் ஆனால் கடைசி ஸ்டெப் போட்டோ எடுக்கல.
ஜலீலா

Jaleelakamal

nice recipie