தேதி: January 26, 2009
பரிமாறும் அளவு: 3
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பாஸ்மதி அரிசி - 2 கப்
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
கருவேப்பில்லை - 4 இலை
பூண்டு - 5 பல்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
நெய் - 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
பட்டை - 1
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
முதலில் பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
வெங்காயம் மற்றும் தக்காளியை நீளமாக அரிந்து கொள்ளவும்.
பச்சை மிளகாயினை இரண்டாக கீறி கொள்ளவும். பூண்டினை பொடிதாக வெட்டவும்.
இப்பொழுது பிரஷ்ர் குக்கரில் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
பின் அரிந்து வைத்துள்ள பூண்டினை போட்டு வதக்கவும்.
அதன் பின் வெங்காயம், கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
கடைசியில் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
அரிசியை நன்றாக கழுவி தண்ணீர் வடித்து இதில் சேர்த்து நன்றாக 2 நிமிடம் வதக்கவும்.
பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 2 விசில் அரும் வரை வேகவிடவும்.
பிரஷ்ர் அடங்கியதும் கொத்தமல்லி தூவி கிளறி விடவும்.
இப்பொழுது சுவையான தக்காளி பிரியாணி ரெடி.
இதனை தயிர் பச்சடி அல்லது ஏதேனும் வறுவலுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
மிகவும் சுலபமாக செய்ய கூடியது.
Comments
ஹாய் கீதா!
ஹாய் கீதா!
இன்றைய எனது சமையலில் தக்காளி பிரியாணி செய்தேன். ரொம்ப நல்லா வந்தது. குறிப்பிற்கு ரொம்ப நன்றிப்பா!
தக்காளி பிரியாணி
மிகவும் நன்றி சாய் கீதா அக்கா.
உடம்பு இப்பொழுது எப்படி இருக்கு…பார்த்து கொள்ளுங்கள்..எதே ஒரு இடத்தில் உங்களுக்கு தக்காளி சாதம் என்று விருப்பம் என்று எழுதி இருந்ததா எனக்கு நினைப்பு…அது நீங்க தானே…இல்லை என்றால் ஸாரி பா.
செய்து விட்ட பின்னுட்டம் அனுப்பியதற்கு மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்
ஹாய் கீதா ஆச்சல்,
ஹாய் கீதா ஆச்சல்,
உங்கள் குறிப்பில் இருந்து நான் ஈஸி தக்காளி பிரியாணி செய்தேன் நல்லா இருந்தது.மிக்க நன்றி.
என்றும் அன்புடன்,
மைதிலி
Mb
ஈஸி தக்காளி பிரியாணி
மிகவும் நன்றி மைதிலி.
அன்புடன்,
கீதா ஆச்சல்
ஈஸி தக்காளி பிரியாணி !
ஹாய் கீதா ஆச்சல்,
இன்று லன்ச்கு உங்க ஈஸி தக்காளி பிரியாணி செய்தேன். ரொம்ப டேஸ்டியா இருந்தது. என்னோட செய்முறையும் கிட்டத்தட்ட இப்படிதான்!. எனக்கு தக்காளி சாதம், தக்காளி பிரியாணி என்றால் ரொம்ப பிடிக்கும். இதுவும் சுவையாக வந்திருந்தது. நன்றி!
அன்புடன்
சுஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ
ஈஸி தக்காளி பிரியாணி
மிகவும் நன்றி ஸ்ரீ.
எனக்கும் கலந்த சாதம் என்றால் மிகவும் விருப்பம்.
அன்புடன்,
கீதா ஆச்சல்
கீதா ஆச்சல்
கீதா நான் இதோடு உருளைக்கிழங்கு ஒன்றும், கொஞ்சம் தயிரும் சேர்த்து செய்தேன்.நல்லா வந்தது.நன்றி.
Patience is the most beautiful prayer!!
Patience is the most beautiful prayer!!
உத்ரா
மிகவும் நன்றி உத்ரா.
அன்புடன்,
கீதா ஆச்சல்
HELLO GEETHA AKKAA
அக்கா நான் நேற்று தக்காளி பிரியாணி சைட்டிஷ்க்கு ரைத்தா, முட்டை தொக்கு செய்தேன். நன்றாக இருந்தது. அக்கா என் பசங்க மூணு பேரும் நல்லா இருக்காங்க. உங்களுக்கு எத்தனை பிள்ளை? அவங்க எல்லாரும் நலமா? அக்கா எங்க வீட்டிலேயும் நான் தான் முதல் பெண். சுவையான ரெசிபி கொடுத்ததற்கு நன்றி அக்கா.
தக்காளி பிரியாணி
அரசி,
மிகவும் நன்றி.குழந்தைகள் நலமா?
எனக்கு ஒரு பொன்னு இருக்காள். பெயர் அக்ஷதா. இப்பொழுது தான் அவளுக்கு 2 வயது ஆக போகின்றது…
எங்கள் அனைவரையும் விசாரித்தற்கு மிகவும் மகிழ்ச்சி.
அன்புடன்,
கீதா ஆச்சல்
tomato rice
hi mam
i tried ur tomato briyani recipe..i didnt get it correctly , like the rice was seperate ... rice la taste ottave illai. can u tell me whats the mistake i made. i used water quantity like i use for plain rice... 1 isto 2.. is my water ratio wrong or anything else...
thnx