ஈஸி சாம்பார் ரைஸ்

தேதி: January 26, 2009

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - 2 கப்
துவரம் பருப்பு - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
கறிவேப்பில்லை - 4 இலை
குடைமிளகாய் - 1
காரட் - 100 கிராம்
முள்ளங்கி - 100 கிராம்
நெய் - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
தாளிக்க:
கடுகு - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2


 

முதலில் வெங்காயம், தக்காளி அரிந்து கொள்ளவும். காய்களை ஓரே அளவாக வெட்டி கொள்ளவும்.
புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.
பிரஸர் குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும்.
பின் அதில் வெங்காயம் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
அதன் பின் ஒரே அளவில் வெட்டி வைத்துள்ள காய்களை போட்டு வதக்கவும்.
அதன் பின் அரிசி, துவரம் பருப்பு, கரைத்து வைத்துள்ள புளி, தக்காளி , சாம்பார் பொடி ,உப்பு மற்றும் 4 கப் தண்ணீருடன் சேர்த்து நன்றாக கிளறி 2 -3 விசில் வரும் வரை வேகவிடவும்.
கடைசியில் பிரஷ்ர் அடங்கியதும் நெய் சேர்த்து சூடாக பரிமாறவும்.
இப்பொழுது சுவையான ஈஸி சாம்பார் ரைஸ் ரெடி. இத்துடன் அப்பளம் அல்லது வறுவலுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


இந்த ரைஸை சீக்கிரம் செய்ய கூடியது.

மேலும் சில குறிப்புகள்


Comments

இன்று ஈஸி சாம்பார் ரைஸ் செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது. உங்கள் குறிப்பிற்கு மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

மிகவும் நன்றி வத்சலா மேடம்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

மிகவும் நன்றி வத்சலா மேடம்