தேதி: January 27, 2009
பரிமாறும் அளவு: 3
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
தக்காளி - 2 பெரியது
வெங்காயம் - 1
பூண்டு - 2 பல்
அலபோனே பெப்பர்(Jalepano Pepper) - 2
கொத்தமல்லி - சிறிதளவு
எலுமிச்சைச் சாறு - 2 மேசைக் கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
முதலில் தக்காளி, வெங்காயம், பூண்டு, அலபோனே பெப்பர் மற்றும் கொத்தமல்லியை மிகவும் பொடிதாக வெட்டி கொள்ளவும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் வெட்டி வைத்துள்ள பொருட்களுடன் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
இப்பொழுது சால்சா ரெடி. இதனை சிப்ஸுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
இதனை சிப்ஸ் உடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Comments
salsa
Hi Geetha
salsa chips udan sappituvathai thavira veru evarrukku use pannalam?pls give me some ideas
சால்சா
சால்சா டிப்ஸ் நன்றாக உள்ளது.
டார்டில்லா சப்பாத்தி தோசையுடன் கூட சால்சா சாப்பிடலாம்.
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
Jalepano pepper
அக்கா Jalepano pepper என்றால் என்ன?
Jalepeno pepper
மிகவும் நன்றி செல்வி.
Jalepeno pepper என்பது ஒரு வகை பச்சை மிளகாய். இதனை மெக்ஸிகன் உணவுகளில் அதிகம் பயன்படுத்துவார்கள்.
அன்புடன்,
கீதா ஆச்சல்
Jalepeno pepper
மிகவும் நன்றி அரசி.
Jalepeno pepper என்பது ஒரு வகை பச்சை மிளகாய். இதனை மெக்ஸிகன் உணவுகளில் அதிகம் பயன்படுத்துவார்கள்.
அன்புடன்,
கீதா ஆச்சல்