Love

Hi nan riasabi

nan last 7 yearsa oruthara lov panran last year thaan romab poradi engagment mudinjathu

coming july 12 marg fix panni irukaanga .

yanaku unga tips waynum

en lover bayangara kovamana aala ethuku eduthaalum sunda varum chinna visayathuku kooda sunda varum. aana athellam maximum oru naal sariaaidum.

ippo konja naala yanaku konjum bayama iruku enga mrg piragu intha maari sunda wanthu ippo than marg panitomay inimay iva enga poiduvanu alatchiyama vitruvaro en mayla lov koranjudumo nu bayama iruku.

plz en lover ra nan rmba lov panra rmba pudikum rmba rmba pidikum. entha karnathuku avara mis panna virumbala .

plz ethum advice pannunga

plzzzzzzzzzzz.

bye

பாபு அண்ணா நீங்க கஷ்டப்பட்டு டைப் பண்ணியதை வேஸ்ட் பண்ணவேண்டாம். கணவன் மனைவி அன்யோன்யம் பகுதிக்கு போஸ்ட் பண்ணுங்க.
எங்களுக்கும் உதவும்!

அது பொதுவான விசயத்துக்காக எழுதினது இல்ல. இந்த சப்ஜெக்ட் சம்பந்தமா, அதாவது கோபக்கார கணவர் சம்பந்தமா எழுதினது. இந்த இடத்தைவிட்டு வேற இடத்துல போஸ்ட் பண்ணினா சம்பந்தமே இல்லாத மாதிரி தோணும்..

நான் இன்னும் அந்த த்ரெட்டை பார்க்கல. அதுல என்னோட அனுபவங்கள் எதாவது போட முடிஞ்சா பதிவு பண்றேன். எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துக்கு ரெஸ்ட்தான்.. :-)

மீண்டும் அதே பழமொழி....

பேச்சுப் பல்லக்கு ....... கால்நடைதான்....

எப்படிச் சொல்லலாம் எனப் பல நாளாக யோசித்துக்கொண்டிருக்கையில், பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக, இத் தலைப்பு கிடைத்திருக்கிறது... அதுதான் இதன் மூலம் "எனக்கு டக்கு டக்கென்று கோபம் வரும், எல்லோரும் கொஞ்சம் ஜாக்கிரதையாக எப்பவும் இருங்கோ" என்று சொல்லாமல் சொல்லிப்போட்டார்.:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

riasabi,
இத்தனை வருடக் காதலுக்குப் பிறகு, இப்போ உங்களுக்கு இப்படி ஒரு எண்ணம் வந்ததே தப்பு. முதலில் அவ் எண்ணத்தை மனதிலிருந்து எடுத்துவிடுங்கள்.

அவருக்கு கோபம் வருகிறபோது, அதைப் பற்றி நினைக்காமல் அவர் உங்களுக்காகச் செய்த நல்லவைகளை/ நல்ல குணங்களை ஒருகணம் நினைத்துப் பாருங்கள், உடனே எல்லாம் பறந்துபோகும். அவருக்கு எப்படியான விஷயங்களுக்கு கோபம் வருகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப நடக்க முயற்சி செய்யுங்கள். அவருக்கு கோபம் வந்தால், நீங்கள் எதிர்த்துக் கதைக்காமல், கதையை வேறு ஏதாவது பக்கம் திருப்புங்கள்.

எங்கள் ஊரில் ஒருவருக்கு இப்படித்தான் மூக்கின் நுனியில் கோபம் இருக்கும். மோட்டார் பைக், 2 அடியுடன் ஸ்ராட் எடுக்கவில்லையாயின் காலால் உதைந்து விழுத்திப் போடுவார். தனக்குப் பிடிக்கவில்லையாயின் உடனே உடைப்பது... இப்படி சரியான கோபக்காரன். ஆனால் இப்போ திருமணமானதும் மிகவும் நல்லவராக மாறிவிட்டார். பிள்ளைகளும் உண்டு.. எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருப்பதாக அறிந்தேன்.

அதனால் கவலைப்பட வேண்டாம். காதலிப்பவரையே கைப்பிடிக்கும் தைரியம் உள்ள உங்களுக்கு, அவரின் சிறு கோபத்தை சமாளிக்க தைரியம் இருக்காதா என்ன? இடையிடையே கோபமும் வந்தால்தான் வாழ்க்கை கண்படாமல் இருக்கும். உங்களது இனிய திருமண வாழ்க்கைக்கு எனது இனிய வாழ்த்துக்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

வந்துட்டாங்கய்யா.. பழமொழிப் பாட்டி.. ரொம்ப நேரம் ஆச்சே நாம பதிவுப் போட்டு.. இன்னும் எசப்பாட்டு பாடலையேன்னு நினைச்சேன்.. :-)

வற்புறுத்தலுக்காக இல்லேன்னாலும், நேரம் செலவு பண்ணி டைப் பண்ணினதை வேஸ்ட் ஆக்க இஷ்டம் இல்லாததால பதிவு பண்றேன். பெரிய விசயம் எல்லாம் ஒண்ணும் சொல்ல வரலை. ஏற்கனவே சொன்ன ஒரே ஒரு விசயம்தான். இப்ப கொஞ்சம் விவரமா.. ரொம்ப எதிர்பார்ப்பு வேண்டாம்.

--- டைப் செய்து வைத்திருந்தது -------

இங்க பதில் கொடுக்கிறவங்க எல்லாரும் பெண்களா இருப்பாங்க. ஒரு ஆண் சம்பந்தப்பட்ட பிரச்சனைங்கிறதால, நம்ம வர்க்கம் சார்பா ஒரு பதிவு போடுவோமேன்னு பதில் கொடுத்தேன்.

சரி, கொஞ்சம் சீரியஸ்ஸா ஸ்மைலி போடாம ஒரு பதில்.

எனக்குத் தெரிந்த என்னுடைய மிகப்பெரிய மைனஸ் என்னுடைய கோபம். ஆனால் என்னுடைய ஒவ்வொரு கோபத்திலும் ஒரு துளியேனும் நியாயம் இருக்கும். என்னதான் நியாயம் இருந்தாலும், இதற்கு இவ்வளவு கோபப்பட்டிருக்க வேண்டாமோ என்று ஒவ்வொரு கோபத் தணியலுக்குப்பின் மனம் ஒரு கணம் யோசிக்கும். படித்த திருக்குறள்கள் ஒவ்வொன்றாய் நினைவிற்கு வரும். பிறகு கொஞ்சல் மழையைப் பொழிந்து கோபிக்கப்பட்டவரை குளிர்விக்க முயற்சிகள் நடக்கும். அப்பாவியோ, "கோபம் உள்ள இடத்தில் எவ்வளவு குணம் பாருங்கள்" என்று உடனே சமாதானமடைவார். எல்லாம் அடுத்த கோபத்திற்கு ஆளாகும்வரை. இது தொடர்கதைதான்.

ஆனால் இதை கசப்பாக எடுத்துக்கொள்ளாமல் சுவைக்கும் வித்தையைக் கற்றுக்கொண்டால் நிச்சயம் வாழ்க்கையில் பிரச்சனையில்லை. நான் பெருமையாக சொல்லிக்கொள்வேன். அந்த வித்தை என் மனைவிக்கு நன்கு தெரியும். நான் கோபப்படும்போது தோற்றத்தில் சோகத்தைக் காட்டினாலும், பிறகு பொழியவிருக்கும் மழையை நினைத்து உள்ளுக்குள் ரசித்தபடி காத்திருப்பார். எங்களுடைய வண்டி பிரச்சனையின்றி ஓடுகின்றது என்றால் அதற்கு முழுக்காரணம் அவர்தான்.

என்னுடைய ப்ளஸ் ஆக நான் சொல்லிக்கொள்ளும் ஒரு விசயம், என்னுடைய மைனஸ்கள் எவை என்பதை நான் நன்கு தெரிந்து வைத்திருப்பதுதான். என்னுடைய மைனஸ் எல்லாவற்றையும் திருமணத்திற்கு முன்பே அவருக்கு எடுத்து விளக்கி, அதற்கான தீர்வுகளையும் சொல்லிக் கொடுத்துவிட்டேன். கோபம் குறித்து நான் அறிவுறுத்திய ஒன்றே ஒன்று இதுதான்.. "என்னுடைய கோபத்தின் போது நீ எத்தனை வார்த்தைகள் பேசுகின்றாயோ அத்தனை மணி நேரங்கள் எனது கோபம் நீடிக்கும்". என்னுடைய எந்தக் கோபமும் மணிக்கணக்கில் நீடித்தது இல்லை. நான் கோபப்பட்டதற்காக அவர் அழுததாக எனக்கு நினைவில்லை. நான் நிறைய முறை அழுதிருக்கின்றேன்.

நான் மேலே உள்ள பதிவில் விளையாட்டாக கொடுத்த அதே விசயத்தைதான் இங்கே கொஞ்சம் விளக்கி இருக்கின்றேன். சொல்ல வரும் கருத்து புரியுமென்று நினைக்கின்றேன். பெண்தான் விட்டுக்கொடுக்க வேண்டுமா, இது என்ன ஆணாதிக்க மனோபாவம் என்றெல்லாம் கேள்விகள் எழுப்ப வேண்டாம். இங்கே எந்த ஆதிக்கமும் இல்லை. அதிகப்படியான கோபம் என்பது உடல் ஊனம் போல் ஒரு பிரச்சனை அல்லது ஒரு நோய் என்று சொல்லலாம். என்னுடைய ஜீன்கள் மூலமாக எனக்கு வந்த நோய். என் மனைவிக்கு அந்த நோய் இல்லை. விட்டுக்கொடுத்தல் என்பது இந்த நோய்க்கான ஒரு சிகிச்சையாக இருக்கும்போது அதை செய்வதில் அவருக்கு தயக்கம் இல்லை. நானும் நோய் முற்றாமல் என்னளவில் பார்த்துக்கொள்கின்றேன்.

எவ்வளவு நல்ல விஷயங்களை இங்கே டிஸ்கஸ்:) பண்ணிக்கொண்டிருக்கிறோம்.... இதைப்போய் "எசப்பாட்டு" என்று சொன்னால், "எசப்பாட்டை என்னவென்று சொல்வது". அறுசுவையில் எம் தோழிகளை கொஞ்சம் உஷார்ப்படுத்தி விட்டிருக்கிறேன் அவ்வளவுதான். (வெள்ளம் வர முந்தி, அணை போட்டிட வேண்டும் என்ற நல்லெண்ணம்தான்).

இன்னுமொன்று, துன்பம் வரும்போது சிரிங்கோ.... என்று யாரோ சொன்னதை... கொஞ்சம் மாற்றி, அதிராவைப்போல் கடைப்பிடித்தால் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கலாம். அதாவது... "கோபம் வரும்போதும் சிரிங்கோ".

நான் ஹை ஸ்கூலில் சேர்ந்த புதிதில், கொஞ்சக் காலம் பஸ்ஸில் தான் போய் வந்தேன். அப்போ போகும்போது இடம் கிடைத்துவிடும், திரும்பி வரும்போது, சில நாட்கள்.. எதுவுமே தெரியாது. சின்னப்பிள்ளையல்லோ நடுவில் அகப்பட்டு அண்ணாந்து மட்டும் பார்த்துக்கொண்டு நிற்பேன்(வேறு எங்கும் பார்க்க முடியாது, கை பிடிக்கவும் தேவையில்லை, விழ மாட்டோம் அவ்வளவு நெரிசல்) பெண்கள் பஸ்தான். எல்லோரும் சப்பாத்து போட்டிருப்பார்கள், சப்பாத்தால் என் சப்பாத்துக்காலை உளக்கு உளக்கு என்று உளக்கிப்போடுவார்கள். எனக்கு சரியான அழுகையும், ஆத்திரமும் தான் வரும், ஆனால் நான் கோபிப்பதில்லை. சிரித்துக்கொண்டே இருப்பேன். இதைக் கண்ட என் நண்பி, ஒருநாள் சொன்னா, "எனக்கும் கோபம் வரும்போது, நீங்கள் சிரிப்பதை நினைப்பேன், உடனே கோபம்போய் சிரிப்பு வந்துவிடும்" என்று. இனிமேல் இதைப் படிக்கும் நீங்களும் சிரியுங்கோ.... உடலுக்கும் நல்லது.

சுரேஜினி, நீங்கள் பதிவு போட்டபின்னர்தான் நானும் பார்த்தேன்... இரு தலைப்புக்களையும். riasabi ஏதோ தவறாகப் போட்டிருப்பார் என்றே நினைக்கிறேன். ஆனால் கோபம் என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்றென்பதால் இத் தலைப்பால் எல்லோருக்கும் நன்மையே.
"சுபம்"

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அட்மின் சரியாகத்தான் சொல்லியிருக்கிறீங்கள். இருந்தாலும் திருமணத்துக்கு முன்பே இப்படியெல்லாம் சொல்லி பாப்பியை வாயடைக்கச் செய்துபோட்டீங்கள்.:)

இன்னுமொன்றை நான் சொல்கிறேன். இதே முறையை ஆண்களும் கடைப்பிடித்தால் இல்லறம் நல்லறமாகும்.அதாவது பெண்களுக்குக் கோபம் வரும் போது, எதிர்க்காமல் அடங்கிப்போகவேண்டும்:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நாங்கதான் கோபம் வர்ற மாதிரியே நடந்துக்க மாட்டோமே.. ;-)

உங்களுடய ஸ்மைலியில்லா பதிவு எனது கண்ணை திறந்துவிட்டது. அண்ணிக்கு ஒரு ஓ!

இன்னும் பலபேர் கண்களைத் திறக்கும் என நினைக்கிறேன். அட்டகாசமான கருத்துக்கு நன்றி.

மேலும் சில பதிவுகள்