Love

Hi nan riasabi

nan last 7 yearsa oruthara lov panran last year thaan romab poradi engagment mudinjathu

coming july 12 marg fix panni irukaanga .

yanaku unga tips waynum

en lover bayangara kovamana aala ethuku eduthaalum sunda varum chinna visayathuku kooda sunda varum. aana athellam maximum oru naal sariaaidum.

ippo konja naala yanaku konjum bayama iruku enga mrg piragu intha maari sunda wanthu ippo than marg panitomay inimay iva enga poiduvanu alatchiyama vitruvaro en mayla lov koranjudumo nu bayama iruku.

plz en lover ra nan rmba lov panra rmba pudikum rmba rmba pidikum. entha karnathuku avara mis panna virumbala .

plz ethum advice pannunga

plzzzzzzzzzzz.

bye

ஐயோ என்னால நம்மப முடியல இவ்ளோ நண்பர்கள் என்னோட கேள்விக்கு என்னோட டவுட் கு பதில் சொல்லி இருகாங்க நு நினைகுரபோ ரொம்ப சந்தோசமா இருக்கு கண்டிப்பா உங்களோட அட்வைஸ் எனகு ரொம்ப வேணும்

என்னோட கோவத்த நான் கொஞ்சும் கொஞ்சமா pack பண்ண ஸ்டார்ட் பண்ணிடன்

ரிசபி,
மற்றவர்கள் ஆலோசனைகளை கேட்டு உங்களால் முடிந்ததினை கண்டிப்பாக பின்பற்றுங்க.
அறுசுவை ஒரு குடும்பம். நம் குடும்ப உறுப்பினருக்கு ஒரு கஷ்டம் என்றால் சும்மா விட்டுவிடுவார்களா?!!
நாமெல்லாம் ஒரு தாய் (தமிழ் தாய்) மக்களல்லவா?

kandippa

எங்க ஆள் கோவமா கத்த ஆரம்பிச்சதும் பாதியில "வனி'ட சண்டை போட்டன்னா அவ கா விட்டுடுவா உன்கிட்ட"னு சோகமா சொல்லிடுவேன்.... அவர் உடனே சிரிச்சிடுவார். பொருமையா திட்டு வாங்கலாம் வனியால முடியாற்தில்ல. :(

என்னவர்'ட அண்ணா பதிவை சொல்லி சிரிச்சா, "சிரிக்காத கத்துக்கோ"ன்றார். ஏன்டா சொன்னோம்'னு ஆயிட்டுது. அண்ணா.... அந்த சமையத்துல மட்டும் நீங்க நேர்ல மாட்டி இருந்தீங்க.... வனிதா ரொம்ப கோவமா இருக்கா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பாப்பி அண்ணாவுக்கு ஸ்வீட் கொடுங்க!
ஸ்வீட் விரும்பாதவங்களுக்குதான் அதிகம் கோபம் வரும்னு கேள்விப்பட்டிருக்கேன்.
இதனை அனுபவத்திலும் பார்த்திருக்கேன். என் மாமனார், மச்சாண்ட்டார்(கணவரின் அண்ணன்), நாத்தனார்,நான், ஸ்வீட் கொஞ்சமா அதே சமயத்தில் விரும்பி சாப்பிடுவோம்.
நாங்கள் நால்வருமே ஓரளவிற்கு பொறுமைசாலிகள். மச்சாண்டார்
ரொம்பவே விரும்பி சாப்பிடுவார். ரொம்ப,ரொம்ப பொறுமை. (சுகர் ப்ராம்ப்ளமெல்லாம் இல்லை. அதன்னல் பிரச்னையும் இல்லை.ஆனாலும் கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணி சாப்பிடுவார்).என் மாமியார்,கணவர் நல்லவர்கள்.
ஆனால், ஸ்வீட் பிடிக்காது, பொறுமைன்னா கிலோ என்ன விலைன்னு கேட்பாங்க
என் கணவருக்கும் இப்பல்லாம் நான் அப்பப்ப கொஞ்சம் ஸ்வீட் தர ஆரம்பிச்சு கொஞ்சம் முன்னேற்றமும் இருக்கு.
இது விளையாட்டுக்கு சொல்லலை உண்மை.ஒரு ஆராய்ச்சியில் இது நிரூபிக்கப்பட்டிருப்பதாக ஒரு புக்கிலும் படித்தேன்
அன்புடன்,

கீதாலஷ்மி!

இன்று காலைதான் என் கண்ணில் பட்டது இந்த தலைப்பு,அண்ணனின் முதல் பதிவை பார்த்ததும் சிரித்து கொண்டே டிபன் செய்ய போயிட்டேன்,கீழே உள்ள விளக்கத்தை படித்ததும் சிந்திக்க போயிட்டேன்,அண்ணா நல்லா இருக்கு உங்க பாயிண்ட்,
அதிராக்கு நிகர் அதிரா தான்,எப்படிப்பா பழமொழியெல்லாம் அவ்வளவு அழகா வருது,ஒரு வேலை அதிரா பேச்சாளரோ?அதிரா பதில் தாங்க

நானும் கொஞ்சம் வித்தியாசமா கோபபடுவேன்,அவங்க என்னை என்ன திட்டினாலும் வாங்கிக்குவேன்,எல்லா சமயமும் அப்படி இருக்க மாட்டேன்,சமயத்துல அப்பவே வாதமும் நடக்கும்,எத்தனை பெரிய சண்டை போட்டாலும் அடுத்த பத்து நிமிடத்தில் நான் நார்மல் ஆகிடுவேன்,பழைய படி எப்.எம் ரேடியோ மாதிரி நிறுத்தாமல் எதாவது பேசிகிட்டே இருப்பேன்,இதெல்லாம் ஓ.கே தான்,எனக்கு இருந்தாலும் மனசில ஒரு கவலை,இவங்கலே கோபபடுறாங்க,இவங்க தான் என்னை திட்டறது,ஆனா சமாதானம் மட்டும் நம்ம செய்யனுமா?திட்டுனவங்க தானே சமாதானம் செய்யனும்,என்னைகாவது திட்டிட்டு சமாதானம் படுத்திருக்கீங்களான்னு கோபம் வரும்,நான் இப்படி தான் சண்டை போடுவேன்,எனக்கு எல்லா விஷ்யத்தையும் பேசிடனும்,நான் காலையில் இருந்து என்ன பண்ணினேன் என்று சொல்லனும்,அதான் பிரச்சனை நான் அவர்கிட்ட பேசறதுக்கு அவர்கிட்டயே அப்பாயிண்ட் மெண்ட் வாங்கனும் போல,அப்படியே பேச டைம் கிடைத்தாலும் பிள்ளைகிட்ட பர்மிஷன் வாங்கனும்:(
என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

வனிதா சில நல்ல விஷ்யங்களை படித்தோம் என்றால் நமக்குள்ளவே வைச்சுக்கனும்,எல்லாத்தையும் அவங்க கிட்ட சொன்னா அது நமக்கே திரும்பிடும்,இந்த இடத்தில் ரெம்ப கவனம்,
நானும் காலையில் அப்படிதான் சிரிச்சுட்டேன்,ஏன் தனியா நின்னு சிரிச்சுகிட்டு இருக்கன்னு கேட்டார்,நான் சொன்னா உங்க அவர்,சொன்ன பதில்தான் என்ன அவர் கிட்ட இருந்தும் வந்திருக்கும்,எனக்கு பைத்தியம் பிடிச்சுடுச்சுன்னு நினைச்சு கோங்கன்னு சொல்லிட்டேன்,அப்ப இத்தன நாள் தெளிவா இருந்தையான்னு கிண்டல் அடிச்சிட்டு தான் கிளம்பினார்,
இருந்தாலும் ஆபிஸ் விட்டு வந்ததும் கேட்பார் ஏன் சிரிச்சன்னு?
என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஹஹஹஹா.... அய்யோ ரேணு... நான் உங்க பதிவை படிச்சிட்டு சிரிச்சுகிட்டே இருக்கேன் இன்னும். :D நீங்க காலையில் இருந்து என்ன நடந்துச்சுன்னு அவர்ட சொல்லனும்'னு சொன்னீங்கலா... நான் "வேண்டாம் ரேணு, எனக்கு பிரெச்சனையே சொல்றதால தான், சொல்லாதிங்க"ன்னு உங்கள்ட சொல்ல நினைச்சேன், நீங்க எனக்கு சொல்லிடீங்க. அதை விட மோசம் உங்க கணவர் உங்கள்ட கேட்டது... அனேகமா 2 பேர் கணவரும் ஒரே மாதிரி தான்.... ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அட்மின் அண்ணா.பாப்பி அண்ணிய அருசுவைக்கு அடிக்கடி வர சொல்லுங்க.அவங்கலோட பேசனுன்னு ரெம்ப ஆசையா இருக்கு எங்க எல்லருக்கும்.

/////// எனக்குத் தெரிந்த என்னுடைய மிகப்பெரிய மைனஸ் என்னுடைய கோபம். ஆனால் என்னுடைய ஒவ்வொரு கோபத்திலும் ஒரு துளியேனும் நியாயம் இருக்கும். என்னதான் நியாயம் இருந்தாலும், இதற்கு இவ்வளவு கோபப்பட்டிருக்க வேண்டாமோ என்று ஒவ்வொரு கோபத் தணியலுக்குப்பின் மனம் ஒரு கணம் யோசிக்கும். படித்த திருக்குறள்கள் ஒவ்வொன்றாய் நினைவிற்கு வரும். பிறகு கொஞ்சல் மழையைப் பொழிந்து கோபிக்கப்பட்டவரை குளிர்விக்க முயற்சிகள் நடக்கும். அப்பாவியோ, "கோபம் உள்ள இடத்தில் எவ்வளவு குணம் பாருங்கள்" என்று உடனே சமாதானமடைவார். எல்லாம் அடுத்த கோபத்திற்கு ஆளாகும்வரை. இது தொடர்கதைதான்/////

பாபு நீங்க சொன்ன விஷயங்கள் 100% கரைக்ட். நீங்க இந்த பதிவில் சொன்ன விஷயங்கள்தான் எங்கள் வாழ்க்கையில் நடக்குது ஆனால் உங்கள் இடத்தில் நானும், பாப்பி இடத்தில் என் கணவரும். அதனால் இதில் ஆணாதிக்கம், பெண் ஆதிக்கம் என்றெல்லாம் இல்லை. ஒருத்தர் மேல் இன்னோருவர் அன்பும், புரிதலும் இருந்தால் யாராவது ஒருத்தர் கண்டிப்பாக விட்டு கொடுப்போம். ஒருவேளை அவர் அதிகமா கோபப்பட்டு நான் விட்டு கொடுத்திருப்பேனோ என்னவோ

கவி நீங்கள் கூட கோபத்தை குறைத்து கொண்டேன் என்று சொல்லியிருக்கீங்க. சந்தோஷம் நானும் முயற்சி செய்கிறேன். பாபு அண்ணா கோபப்காரர் என்பதை என்னால் நம்பவே முடியல. பார்த்தால் அப்படி அமைதியான பேஸ். க்ரேட் பாப்பி. நெருங்கிய தோழி போல் இருவரும் வெகு நேரம் பேசி கொண்டு இருந்ததை மறக்க முடியாது

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மேலும் சில பதிவுகள்